1 குருவே!சமூக வலைத்தளங்களில் பெண்கள் அவங்க சொந்த டிபி வைப்பது நல்லதா?கெட்டதா?ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்றாங்க,குழப்பமா இருக்கு.
ஆண்களுக்கு நல்லது,பெண்களுக்கு கெட்டது
===========
2 சார்,பிரமாதமா வரையறீங்க,உங்க ஓவியத்திறமையால இதுவரை எத்தனை பேரை வரைஞ்சிருக்கீங்க?
185
ஓஹோ,5208 பேர் பாலோயர்ஸ் இருக்காங்களே?மீதி?
அதுல 185 பேர் தான் பொண்ணுங்க
=============
3 மேடம்,42,863 பேர் மண்டப வாசல்ல நிக்கறாங்க
அய்யய்யோ,நான் 100 பேருக்குதானே கல்யாணப்பத்திரிக்கையே வெச்சேன்?
அவங்க எல்லாம் உங்க Fb பாலோயர்சாம்,இப்ப பந்தி க்கு என்ன பண்ண?
ரஜினி பார்முலாதான்,துரத்தி விட்ருங்க
================
4 அருவி படத்துல ஹீரோயின் தம் அடிக்கற போஸ்(டர்) இருந்தது,அதை எதிர்க்காதாங்க ஏன் சர்கார் தம் சீனை எதிர்க்கறாங்க?
அருவி படம் வந்தப்ப எத்தனை பேரு அதை டிபி யா வெச்சாங்க?
4 பேரு
சர்கார்?
4 லட்சம் பேரு
இப்ப தெரியுதா?தாக்கம்?
================
5 இவங்கதான் என் தோழி மேரி ஷீலா
ஓஹோ!marry sheela ங்கறது கட்டளை வாக்கியமா?
ஆமான்னா என்ன செய்வீங்க?
அன்புக்கட்டளை"வாக்கியம்னு சிலாகிப்பேன்
============
6 குழந்தைகளுக்கு மருந்தின் கசப்பை உணராமலிருக்க சர்க்கரை கொடுப்பது போல பொண்டாட்டி கொடுமைக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க
ரெண்டே வழி
1 கல்யாணமே பண்ணிக்கக்கூடாது
2 டைவர்ஸ்
============
7 நான் சின்ன புள்ளையா இருந்ததுல இருந்து, இப்போ வரை BOOMBER பப்பிள்கம் தான் இன்னும் அதே ரேட் 1 ரூபாய்க்கு தர்றான்.
சைஸைப்பாருங்க,40% சின்னது,மார்க்கெட்டிங்க் டெக்னிக்
===========
8 டைரக்டர் சாருக்கு ரொட்டி பிடிக்காது,வரிக்கி கொண்டுவா
ஓஹோ,ரெட்டி தான் ஆகாதுன்னா ரொட்டியுமா?
===============
9 ஜெ உயிரோட இருந்தா இந்நேரம் ரஜினி ,கமல் ,எல்லாரையும் ஜெயில்ல தள்ளி இருப்பார் என்ற யூகம் சரியா?
தப்பு
எப்டி?
4 வருசம் அவரே ஜெயில்ல தானே இருந்திருப்பாரு?
=============
10 டியர்,ஏன் திடீர்னு லவ் பிரேக்கப் பண்றே?
உங்க பாலோயர்ஸ் கவுண்ட் பாதியா குறைஞ்சிடுச்சே?
===========
11 2 நாள் மேக்கப் போட்டதுல, 2 நாள் கழிச்சு இன்னிக்கு தான் பழைய மூஞ்சி வந்துருக்கு . கண்ணாடிய நிம்மதியா பாக்க முடியுது .
மேக்கப் இல்லாத முகத்தை மாப்ள பாத்துட்டாரா?
==============
12 குருவே!சூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இரண்டு தாரமாமே?நிஜமா?
வீட்டுச்சாப்பாடு மட்டும் சாப்பிடறவன் வெளில சாப்பிடமாட்டான்,வெளில ஹோட்டல்ல சாப்பிடறவன் 1 ஹோட்டலோட நிறுத்த மாட்டான்
=============
13 குருவே! Perfect ah இருக்கறவங்களுக்கும், வாழ்க்கையிலயும,் career லயும் ஜெயிக்கறவங்களுக்கு மட்டும் தான் உலகமா?
அப்டிப்பாத்தா 5% கூடத்தேறாதே?அவங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் ,அவ்ளவ்தான்,எல்லோருக்குமானதுதான் இந்த உலகம்
=============
14 என்னோட 18933 பாலோயர்ஸ்ல இவங்களைத்தான் ரொம்பப்பிடிச்சிருக்கு
ஓஹோ,மீதி 18,932 பேரை பிடிக்கல?
ஆமா
அப்டியா?சரி, அவங்க எல்லார் பேரும் ,ஊரும் சொல்லுங்க
அது ...அது வந்து
அப்போ பேரும் தெரியாது ,ஊரும் தெரியாது,ஆனா பிடிக்கல?இது டகால்டி
=============
15
சார்,தமிழ்ப்படம் 2 ல விஜய் அதிகஅளவுல கலாய்க்கபகபடல,அது ஏன்?
படத்தோட டைரக்டர் என்ன கட்சி?
திமுக
திமுக வோட சேனல் எது?
விஜய் படம்
சன் டிவி
சன் டிவி யோட அடுத்த தயாரிப்பு யார் படம்?
அவ்ளவ்தான் மேட்டரு
=============
16 உங்க சீக்ரெட் ஆஃப் சக்ஸெஸ் என்ன சார்?
சிகரெட்.
சிக"ரெட்" ல அபாய அறிவிப்பு இருக்கறது தெரிலயா?
===========
17 சர்வர்,என்னய்யா ரோஸ்ட் இது?
ஏனுங்?
பேப்பர் ரோஸ்டுன்னா அந்தப்பக்கம் இருக்கிறது இந்தப்பக்கம் தெரியனும். இந்தப்பக்கம் இருக்குறது அந்தப்பக்கம் தெரியனும்.
அதுக்கு தோசையை"திருப்பிப்பாத்தாலே போதும்ங்களே?
================
18 ரைட்டர் சார்,உங்க நாவலை ஏன் ஆங்கிலத்தில்"மொழி பெயர்க்கக்கூடாது?நிறைய வாசகர்களைப்போய்"சேருமே?
யோவ்,ஆல்ரெடி நான் ஆங்கில நாவலை அட்லீ வேலை செஞ்சுதான் தமிழ்ல கொண்டு வந்திருக்கேன்
===============
19 குருவே!ஆடி போயி ஆவணி வந்தா டாப்புல வந்துடுவ னு ஜோசியர் சொன்னாரு,இது"பலிக்குமா?
அது தெரில,ஆனா உன் வாழ்க்கைல ஒரு தாவணி வந்தா டாப் ல இருந்து பாட்டம் வந்துடுவ,ஜாக்கிரத
===============
20 டைரக்டர் சார்,உங்க பட ஆடியோ லாஞ்ச்க்கு செம கூட்டமாமே?
அது"பொறுக்கலையா உங்களுக்கு?படத்துக்குதான்"கூட்டம் வர்றதில்ல ,இதுக்காவது வரட்டுமே?
================
0 comments:
Post a Comment