Saturday, July 14, 2018

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

Image result for kadai kutty singam


ஹீரோவுக்கு அத்த பொண்ணு , மாமன் பொண்ணு , அக்கா பொண்ணுங்க மட்டும் கிட்டத்தட்ட 6 இருக்கு, இந்த முறைப்பொண்ணுங்கள்ல யாரைக்கட்டுவாருனு எல்லாரும் அடிதடி போட்டுட்டு இருக்கும்போது ஹீரோ பார்த்தேன் ரசித்தேன் லைலா மாதிரி ஒரு  பஸ் ஃபிகரை லவ்வறாரு, இதை வெச்சே இடைவேளை வரை ஓட்டிடறாங்க , படமும் ஜாலியா கலகலப்பா போகுது


 அதுக்குப்பின் தான் இயக்குநருக்கு சறுக்கல், பின் பாதியில் ஹீரோ அந்த முறைப்பொன்னுங்களோட அம்மாக்களை கரெக்ட் பண்ண வேண்டிய சூழல், அதாவது அவங்களை சமாதானப்படுத்தனும். ஓவர் செண்ட்டிமெண்ட் உணர்ச்சிக்குவியல், வலிய திணிக்கப்பட்ட சீரியல்  காட்சிகள்


ஹீரோவா பருத்தி வீரன் கார்த்தி , அசால்ட்டா ஜெயிக்கிறார், இதே போல் ஆல் இன் ஆல் அழகுராஜாவில்  3 பொண்ணுங்களோட கும்மாளம் போட்டிருக்கார். இதுல யும் ஜாலி பட்டாசுதான் , பின் பாதியில் பாசக்குளம்


ஹீரோயினா சாயிஷா,. செழுமை பத்தலை. பாவமா இருக்கு, ஹீரோயின்னா பார்த்தா கிளுகிளுப்பு வரனும்


காமெடிக்கு சூரி
 ஓக்கே ரகம்

சத்யராஜ் அப்பா கேரக்டர், அசால்ட் பண்ணிட்டார்


 படத்தின் பெரும் பலம் வசனங்கள் , விவசாயத்தைப்போற்றும் பிரமாதமான வசனங்கள் ட்விட்டர் , வாட்சப் , பேஸ்புக்னு ஆங்காங்கே உருவி இருக்காங்க, இருந்தாலும் ஓக்கே 


வில்லன் தண்டம்

ஒளிப்பதிவு பிரம்மாண்டமான ரேக்ளா சீனுக்கே பாஸ் மார்க் வாங்கிடுது, இசை  ஓக்கே ரகம்


 ஃபேமிலி ஆடியன்சுக்கு பிடிக்கும்

Image result for kadaikutty singam heroine


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பெண் குழந்தைகளா தொடர்ந்து பிறப்பதால் 3 சம்சாரம் கட்றாரு ங்கற தவறான முன்னுதாரணத்துடன் கதை ஆரம்பிக்குது


ஆண் குழந்தை பிறக்கலை னு 3 சம்சாரம் கட்றவரு அதே காரணத்துக்காக தன் சம்சாரம் 3 புருசன கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?


ரேக்ளா ரேஸ் சீன் தமிழ் சினிமா ல பிரம்மாண்டமா காட்னது கடைசியா "உழவன் மகன்" ல ,அதுக்கு அடுத்து இப்ப தான் கிராபிக்ஸ் இல்லாத நிஜ ரேக்ளா


சின்னக்கவுண்டர் ,எஜமான் படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளி விட்டு கிராமத்து செண்ட்டிமெண்ட்ஸ்

ஹீரோயின் டயலாக் பேசும்போது செயற்கை தட்டுதே?

கோவில் ல விளக்கு வைக்கும் சாதா சீனைக்கூட பிரம்மாண்டமா காட்னது
ஆடி வெள்ளி
சிநேகிதியே
குங்குமச்சிமிழ்
தேவதை

அழகன் (கோழி கூவும் நேரம் ஆச்சு)் ,சத்ரியன் (மாலையில் யாரோ மனதோடு பேச) ல பானுப்ரியா வை கிளுகிளுப்பா பாத்துட்டு வயசான லேடியா பாக்க சங்கட்டமா இருக்காது?


ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க இருந்தும் அவங்கள கட்டாம மனசுக்குப்பிடிச்ச பொண்ணை கட்ட போராடும் ஹீரோவின் கதைதான்,ரொம்ப சாதா கதை,திரைக்கதை தான் காப்பாத்துது  (இடைவேளை)

நாயகி சாயிஷா நைட்டி போஸ்ல கனகா மாதிரி இருக்கு,தமிழர்களுக்கு பிடிக்காத நோஞ்சான் பிகர்


10 பின் பாதி ஓவர் செண்ட்டிமெண்ட் காட்சிகள் ,முடியல.ஆனா பெண்களுக்குப்பிடிக்கும்

11 சீரியல் ஓடீட்டிருக்கு.தியேட்டர்ல பொண்ணுங்க கண்ல தண்ணி




Image result for kadaikutty singam heroine
நச் டயலாக்ஸ்


எல்லாருக்கும் பத்திரிக்கைல பேருக்குப்பின்னால பட்டம் இருக்கு?எனக்கு இல்ல?

நீங்க படிக்கலையே?
டாக்டர்க்கு Dr னும் ,எஞ்சினியருக்கு Er னும் போடறீங்க,எனக்கு விவசாயி னு பட்டம் போடலாமில்ல?


ரிடையர்மெண்ட்டே இல்லாத ஒரே தொழில் விவசாயம் தான்,விவசாயத்தோட பாரம்பர்யத்தைக்கூட சொல்லிப்புரிய வைக்க வேண்டி இருக்கு




சொத்து சேர்க்கறது மட்டும் சேமிப்பு இல்ல,சொந்தத்தை சேர்த்து வைப்பதும் சேமிப்பு தான்


யார் வீட்ல வேணா பொண்ணு கட்டலாம்,சொந்தத்துல மட்டும் பொண்ணு கட்டக்கூடாது


விவசாயி களோட கஷ்டம் புரியனும்னா ஒரு நாள் விவசாயி யா வாழ்ந்து பாருங்க,இல்ல விவசாயி கூட இருந்து பாருங்க


இதுக்கு முன்னால இந்த பிகரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே?

அழகான பொண்ணுங்களை எங்கே பார்த்தாலும் எங்கேயோ பாத்த மாதிரி தான் இருக்கும்


நல்ல நெல்லும் நல்ல சொல்லும் ஒண்ணு.நல்ல இடத்துல விதைச்சா 100 மடங்கு பெருகும்


ஒரு விவசாயி செத்தா எதிர்காலத்துல லட்சம் பேர் சாவான்


விவசாயி க்கு பொண்ணு தர யோசிக்கறாங்க.அதிகமா படிச்சு அதிகமா சம்பாதிக்கறவனை விட விவசாயிதான் சிீறந்தவன் னு உணரும் காலம் வரும்

10 பலத்தை காட்றவன் பலசாலி இல்லை,தன் பலவீனம் என்ன?னு மத்தவங்களுக்கு காட்டாம இருக்கறவன் தான் பலசாலி

11 நாம ஆரோக்யமா இருக்கறவரை தெரியாது
உடம்பு சரி இல்லாம படுக்கும்போதுதான் சொந்தக்காரங்க மகிமை தெரியும்


12 மத்தவங்களை அழ வைக்கறவன் தானும் ஒரு நாள் அழுவான்

13 கோபம் மனசுல இருந்தா கொட்டீட்டுப்போயிடுங்க,ஏன்னா கோபம் குப்பை மாதிரி


14 சூழ்நிலை சில சமயங்கள்ல பிரச்சனைகளை தானா சரி பண்ணிக்கும்

15 விவசாயிங்க யாராவது அந்தக்கூட்டத்துல இருந்தா வெளில வந்துடுங்க
ஏன்?
ஏற்கனவே அரசு விவசாயி வயித்துல அடிச்சிடுச்சு ,நான் வேற அடிக்கனுமா? ( இந்த வசனத்து ல சென்சார் "அரசு" ம்யூட்

16



கடைக்குட்டி சிங்கம் @ கேரளா,கோட்டயம் அனுசுரா
950 கெபாசிட்டி
465 அட்டெண்டெண்ஸ்






சி பி கமெண்ட் - கடைக்குட்டி சிங்கம் − விவசாயத்தை தூக்கிப்பிடிக்கும் முற்போக்குத்தனமான வசனங்கள் ,ஜாலி யான முன்பாதி,ஓவரான பேமிலி செண்ட்டிமண்ட,பிற்போக்குத்தனமான ் காட்சிகள் பின் பாதி,பெண்களுக்குப்பிடிக்கும்.பி & சி ல கல்லா கட்டும்,விகடன் 42 , ரேட்டிங் 2.75 / 5

0 comments: