2017ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருது பெற்ற படம் , சிறந்த ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு , என சர்வதேச விருதுகள் குவித்த படம், என பல பெருமைகள் கொண்ட இந்தபப்டம் தகழி எழுதிய 'KAYAR" என்ற நாவலில் வரும் 2 அத்தியாயங்களை மட்டும் ஹை லைட் பண்ணி எடுக்கப்பட்ட படம், 105 நிமிடங்கள்
1960 ல் இருந்து 1990 க்குள் பிறந்தவர்களுக்கு மட்டும் தபால்காரர் பெருமைகள் புரியும், ஏன்னா இந்தக்காலத்துல கடிதம் எழுதும் கலாச்சாரமே வழக்கொழிந்து விட்டது , எல்லாம் மெயில் , வாட்சப் தகவல்கள் தான், அந்தக்காலத்துல எல்லாமே கடிதங்கள் தான், வைரமுத்து வின் வை ர வரிகளில் காதலித்துப்பார் தபால்காரன் தெய்வம் ஆவான் என்பதும் இந்தக்கால ஆட்களுக்கு அனுபவ உணர்வை தராது
முதல் உலகப்போர் நடந்து சில ஆண்டுகளுக்குப்பின் அடுத்த போருக்கு ஆயத்தங்கள் நடக்கும்போது நிகழும் சம்பவங்கள். ராணுவத்துக்கு ஆள் எடுக்கறாங்க , கிராமங்களில் பலரும் ராணுவத்தில் ஆர்வமா சேர்கிறார்கள் . அந்த கிராம மக்களுக்கு மணி ஆர்டர் , கடிதம் , தந்தி ( இறப்புச்செய்தி ) என வாழ்வின் முக்கிய அங்கமாக தபால்காரர் இருக்கார்
தபால்காரர் போரில் குண்டடி பட்டு ஒரு காலை இழந்தவர் , மாற்றுத்திறனாளியான அவர் கிராமம் முழுக்க நடந்தே போய் கடிதங்களை , மணி ஆர்டர்களை டெலிவரி செய்யறார்.மணிஆர்டர் பெறும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆள்வது , இழவு செய்தி கேட்கும் மக்கள் துக்க வசப்படுவது என பல மனசைத்தொடும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம்
நாயகனா ரஞ்சி பணிக்கர் , பிரமாதமான ஆக்டிங் , மிக பொறுமையான , தத்ரூபமான நடிப்பு
நாயகியா ஆஷா சர்த் , நாயகனுக்கு அடைக்கலம் தருபவர்
படத்தில் வில்லன் எல்லாம் யாரும் கிடையாது , காதல் , காமெடி டிராக் எதுவும் இல்லை
ரொம்ப ஸ்லோவான படம், நிகில் ஒளிப்பதிவு அட்டகாசம், இயக்கம் ஜெயராஜ் ,
சபாஷ் இயக்குநர்
1 திரைக்கதை மிகத்தெளிவு ,சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளோ , அச்சு பிச்சு காமெடி காட்சிகளோ கிடையாது
2 மிலிட்ரிக்கு ஆள் எடுக்கும் காட்சியில் உயரம் லிமிட்க்கு ஒரு கட்டை வெச்சிருப்பாங்க . அந்த மட்டத்துக்கு தலை டச் ஆனா ஆள் செலக்டட், இல்லைன்னா ரிஜக்ட்டட், ஒரு ஆள் வந்து நிக்கும் போது அவர் கழுத்தே அந்த மட்டத்துக்கு இருக்கும், அவ்ளோ உயரம், சிறப்பான காட்சி
3 க்ளைமாக்ஸில் கிராமத்துக்கு , மக்களுக்கு வந்த பல இழ்வு செய்தி தந்திகளை தபால்காரர் டெலிவரி செய்யாமல் காகிதக்கப்பல் செய்து ஆற்றில் விடுவது கவித்துவமான காட்சி
4 ஒயிட் & பிளாக் பேக் கிரவுண்டில் ஒளிப்பதிவு செய்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 தனிமையில் வசிக்கும் ஆஷா சரத் நாயகனுக்கு அடைக்கலம் தருவது இருவரும் ஒரே வீட்டில் தங்குவது குறித்து கிராமத்து மக்கள் பொறனி பேசாமல் இருப்பது ஆச்சரியம் , பிக் பாஸ் வராத காலகட்டமாக இருந்தாலும் இது மைனஸ் தான்
2 ஒரு சீனில் ஒரே பாயில் தபால்காரரான ஹீரோவும் , ஆஷா சரத்தும் ஒருவருக்கு ஒருவர் முதுகைக்காட்டிக்கொண்டு எதிர் எதிர் திசையை நோக்கி படுத்திருக்காங்க 2 பேரும் விடிய விடிய உறங்கலை, ஆஷா சரத்க்கு கில்மா வில் இஷ்டம், நாயகனுக்கு போர் பற்றிய சிந்தனைகள் , இந்துதான் சிச்சுவ்வேஷன், இதில் இந்தக்காட்சியில் இயக்குநர் என்ன சொல்ல வர்றார்? எதுக்கு அந்த சீன்>? பல வருடங்களாக தனிமையில் வாடும் இருவரும் எதிர் பால் துணையுடன் ஒரு இரவில் ஒரு குடிசையில் தனிமையில் இருந்தும் கில்மா வில் இறங்காமல் இருப்பாங்களா?
3 ஒரு கல்யாண வீடு . அந்த வீட்டு விசேஷத்தில் விருந்து நடக்குது. தபால்காரரை சாப்பிடக்கூப்பிடறாங்க், அவர் முகம் இருண்டு கிடக்கு , ஏன்னா அந்த வீட்டுக்கு ஒரு இழவு செய்தி தந்தி மூலம் வந்திருக்கு, சொல்லலை, ஆனா அந்த இருண்டு போன முகம் பார்த்து யாருக்குமே டவுட் வராம இருப்பது எப்;படி?
theaterical updated tweets
1 கேரளா,கோட்டயம் ,ரம்யா
Bhayanakam (மலையாளம்)
சர்வதேச விருதுகளை குவித்த படம் ,2017 சிறந்த மாநில மொழி பட விருது உட்பட. தகழி எழுதிய kayar நாவல் தழுவி எடுக்கப்பட்ட படம்
2 நம்மள மாதிரி பெஞ்ச் டிக்கெட் ,தர லோக்கல் ஆளுங்களுக்கு அவார்டு பிலிம் ஒத்து வராது போலயே?மணியார்டர் பார்ம்ல ஒரு பெருசு சைன் பண்றதை 10 நிமிசமா"காட்றாங்க #bhayanakam(malaiyalam)
3 த்ரிஷ்யம் (பாபநாசம்)ல கமிஷனரா கும்முனு (கம்பீரம் என பொருள் கொள்க)வந்த கர்லிங் ஹேர் கட்டழகி,"மை"விழி மைதிலி ஆஷா சரத் முதல் மரியாதை வடிவுக்கரசி"மாதிரி லூஸ் ஜாக்கெட்ல சாதா லேடியா வர்றது அதிர்ச்சியா இருக்கு #bhayanakam (malaiyalam)
4 இயக்குநர் ஹரி யை ஜெயராஜ் இயக்கிய 4 விருதுப்படம் பாக்க விட்ரனும்.எப்ப பாரு கேமராவை ஆட்டிட்டே இருப்பாரு.இதுல கேமராவை ஒரு கோணத்துல வெச்சா 20 நிமிஷம் நகர்த்தறதில்ல #bhayanakam (malaiyalam)
5 கதைக்கோ,திரைக்கதைக்கோ,கேரக்டருக்கோ சம்பந்தமே இல்லைன்னாலும் ஹீரோ தம் அடிப்பது,சரக்கு அடிப்பதை காட்டிட்டே இருப்பதை இயக்குநர்கள் நிறுத்தனும்
nach dialogues
1 ராணுவ வீரனுக்கு ஓணம்,சித்திரக்கனி விசேஷ நாள் எதுவும் கிடையாது,அந்தந்த நாளில் உயிர் பிழைச்சு இருந்தாலே அது விசேஷ நாள்தான் #bhayanakam (malaiyalam)
2 மனோரஞ்சிதம் மலரை தலையணை அடில வெச்சு படுத்துத்தூங்கினா இஷ்டப்பட்டவரோட ஜோடியா உலா போவது போல் கனா வரும் னு ஒரு ஐதீகம் #bhayanakam (மலையாளம்)
3 ஆஜானுபாவ அழகி ஆஷா சரத் (ரொமாண்டிக் மூடுடன்) = பவளமல்லி ப்பூ வாசம் முகர்ந்திருக்கீங்களா?
ஹீரோ − ஒரு ராணுவ வீரனுக்கு வெடிச்சத்தமும் ,வெடி மருந்து வாசமும்தான் பரிச்சயம் #bhayanakam (மலையாளம்)
4 போர் நடக்கும் ,மரணம் சம்பவிக்கும்னு தெரியாமயே/எதிர்பார்க்காமயே பலரும் மிலிட்ரில சேர்றாங்கனு தோணுது #bhayanakam (மலையாளம்)
c.p.s comment- Bhayanakam(மலையாளம்)− முதல் உலகப்போர் நடந்த பின் வந்த காலகட்டத்தில் மாற்றுத்திறனாளியான தபால்காரர் ஒரு கிராமத்தில் சந்திக்கும்"அனுபவங்கள்தான் கதை,பிரமாதமான ஒளிப்பதிவு ,ஆஷா சரத் நடிப்பு +
ரேட்டிங் 3/5 .படம் ரொம்ப ஸ்லோ.விருதுகள் பல பெற்றவை.பால்கனி ஆடியன்சுக்கு
==========
0 comments:
Post a Comment