இந்தபப்டத்தோட கதையை சொல்றதுக்கு முன்னாடி பாத்திரங்களை அறிமுகப்படுத்திடலாம், அனில் கபூர் , சட்டத்துக்குப்புறம்பான ஆயுத பரிமாற்றங்கள் பண்றவரு. அவருக்கு ஒரு மகனும், மகளும், இது போக ஒரு வளர்ப்பு மகனும் உண்டு . கிட்டத்தட்ட கலைஞர் குடும்பம் மாதிரி
அனில்கபூரோட பிஸ்னெஸ்ல வளர்ப்பு மகன் சல்மான்கான் டாமினேஷன் அதிகமாகறது அவரோட நேரடி வாரிசுகளுக்குப்[பிடிக்கலை, எப்படியாவது அவரை டம்மி ஆக்கிட்டு ஃபுல் அண்ட் ஃபுல் நாமே டேக் ஓவர் பண்ணிக்கனும்னு ஓபிஎஸ் இபிஎஸ் மாதிரி சதி வேலை பண்றாங்க
இந்த மாதிரி சிச்சுவேஷன்ல கவர்னர் மாதிரி பெரிய அரசியல்வாதிகளொட ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல நடந்த கில்மா லீலைகள் வீடியோ வா ரெக்கார்ட் பண்ணி பணம் கேட்டு மிரட்றாங்க
இந்த பிர்ச்சனைகள் எல்லாம் க்ளைமாக்ஸ் ல எப்படி டேலி ஆகுது என்பதே கதை
படம் போட்டு 20 நிமிஷம் கழிச்சுதான் சல்மான்கான் இண்ட்ரோ . வழக்கம் போல் பில்டப் ஹீரோ., க்ளைமெக்சில் பாடி காட்ட வாய்ப்பு, பிரமாதமான ஃபைட் ஒண்ணு இருக்கு
பாபி தியோலுக்கு பெரிய வாய்ப்பு இல்லை, வந்தவரை ஓக்கே
ஜாக்லின் பெர்னாண்ட்டஸ் க்கு 14 இடத்துல லோ கட் ஷாட் 3 இடத்துல லோ ஹிப் சீன்ஸ் உண்டு , கிளாமர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், இது போதாதுன்னு படம் 3 டி வேற . கிளு கிளு சீன்கள் எல்லாம் கண் முன்னால் வேணும்னே ஜூம் பண்றாங்க, சும்மாவே நம்மாளு ஜொள் விடுவான், 3டின்னா கேட்கனுமா?
டெய்ஷி ஷா ( சஞ்சனா) வுக்கு 3 சீன்கள் உண்டு . ( சும்மாவா? சம்பளம் தர்றதே அதுக்குதானே?
அனில்கபூர் ஓப்பனிங் சீன்ல இருந்தே செம கெத்து காட்றார். பல காட்சிகளீல் அசல் அஜித்தை நினைவுபடுத்தறார்
லொகேஷன்கள் எல்லாம் அள்ளுது. ஃபாரீன் கலக்கல்ஸ்
கேமரா ஓவர் டைம் ஒர்க். ஹீரோயின்களை துரத்தி துரத்தி படம் பிடிச்சிருக்கு
நச் டயலாக்ஸ்
2 என்னால உனக்கு இவ்ளோ நட்டம் ஏற்பட்டிருக்கே,உனக்கு என் மேல கோபம் வர்ல?
கோபத்தோட எ(ழு)ந்திரிக்கறவன் நட்டத்தோட உக்காருவான்னு எங்க ஊர்ப்பக்கம் பழமொழி இருக்கு.உன்னால எனக்கு பொருள் நட்டம் ,சம்பாதிச்சுக்குவேன்,ஆனா என்னால உனக்கு உயிர் நட்டம் #Race3 (hindi) 3d
3 தன் முன்னாள் காதலியை இந்நாள் காதலனோட பாக்கற துர்பாக்யம் யாருக்கும் கிடைக்கக்கூடாது #Race3 (hindi)3d
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 படத்துல 3 நாயகிகள்
2 கவர்னர் மாதிரி பெரிய பேரிய ஆளுங்க 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கறப்ப அவங்க கில்மா லீலைகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கற ப்ராஜெக்ட் தான் கதை #Race3 (hindi)3d
சபாஷ் டைரக்டர்
1 சல்மான்கான் ஹீரோ இண்ட்ரோ பில்டப் சீன்கள் , க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் செம
2 பாடல் காட்சிகளில் ஏரிகள் , கடல்கள் என ஒரே ஜில் ஜில் லொக்கேஷன்கள் தான் பிரமாதமான ஒளிப்பதிவு
3 ஹீரொயின்கள் 2 பேருக்கும் 25 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்துட்டு 40 லட்சம் ருபாக்கு சீன்கள்: படம் பிடிச்சது சாமார்த்தியம் தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் &திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 க்ளைமாக்ஸ்ல வில்லனோட பனியன் கிழியுது. அதனால முழுசாவே அதை கிழிச்சு நீக்கறார், ஓக்கே , ஆனா ஹீரோ தான் போட்டிருக்கற நல்ல பிராண்ட் டி சர்ட்டை எதுக்கு கிழிக்கறாரு>? மனசுக்குள்ள ஸ்டாலின்னு நினைப்பா? அப்படியே ஜிம் பாடியை காட்டனும்னா சும்மா பனியனை கழட்னா போதாதா? எதுக்கு கிழிச்சுக்கனும்>? ( இதுக்கு விதை ஜாக்கி சான், [புரூஸ்லி போட்டது க்ளைமாக்ஸ் ஃபைட்ல கிழிச்சுக்குவாங்க , ஆனா ஆல்ரெடி அது லைட்டா கிழிஞ்சிருக்கும் , லாஜி க் இடிக்கலை)
2 ஹீரோ பில்டப் சீன்கள் ரொம்பவே ஓவர் . இருக்கறதுதான், ஆனா தேவை இல்லாத திணிப்புகளாவே துருத்திட்டு நிக்குது
3 பிஜிஎம் என்பது ரசிக்க வைக்கனும், கடுபேத்தக்கூடாது , எப்போப்பாரு காதுல கொய் கொய்னு சவுண்ட் வந்துட்டே இருக்கு
சி.பி கமெண்ட் = RACE 3 (hindi)3d- மாமூல் ஆக்சன் மசாலா.2 ஹீரோ ஜிம் பாடி காட்றப்ப சேட்டுப் பொண்ணுங்க கை தட்றாங்க.3 ஹீரோயின் கிளாமர் காட்றப்ப (14 சீன்)நம்மாளுங்க விசிலடிக்கறாங்க.அவ்ளோதான் ,பெருசா 1ம் இல்ல. ஒளிப்பதிவு ,பாரீன் லொக்கேசன் அள்ளுது.ரேட்டிங் 2.5 / 5
(கிளாமர் சீன் பூரா 3D எபக்ட்)
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) 3/5
0 comments:
Post a Comment