Monday, June 25, 2018

ஆபரேசன் குரங்கு குசலா

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகா
கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறப்பு கபினி அணை நிரம்பி வருவதால் தமிழகத்துக்கு நீர் திறப்பு # நீதிபதியின் தீர்ப்பை மதிக்கலைன்னாலும் வருணபகவான் தீர்ப்பை மதிச்சுதானே ஆகனும்?க்ரீஸ் டப்பாவை எப்படி உதைச்சே?மொமண்ட்


==========


2 "தேர்தலில்
எத்தனை முறை தோல்வி அடைந்தாலும்., அதற்காக நான் கவலைப்பட்டது இல்லை" - வைகோ # நீங்க தோக்கறதும் இல்லாம நீங்க ஆதரிக்கறவரையும் தோற்கடிச்சடறீங்க


=============



3 பிழைப்புக்காக கமல் அரசியலுக்கு வந்திருக்கறார்...
ராதாரவி. பஞ்ச்:'உங்க தங்கச்சி ராதிகாவோட இந்நாள் கணவர் சரத்குமார் நாட்டுக்கு சேவை செய்யவா வந்திருக்காரு? அதிமுக ,திமுக,திருமா னு குருமா சாப்ட்டுட்டுதானே இருக்காரு?



============


4 ஸ்டாலின் முதல்வராக்கும் வைகோவின் உறுதியை நானும் ஏற்கிறேன்-திருமாவளவன்...
# இதோ அடுத்த மக்கள் நலக்கூட்டணி உதயம்.பலிகடா ஸ்டாலின்



=============



5 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ,4300 கோடி செலவு செய்த மத்திய பாஜக அரசு - செய்தி # எங்களுக்கு விளம்பரமே பிடிக்காது னு 1000 கோடி செலவுல விளம்பரம் பண்ணப்போறாங்க பாருங்க




============

6 மோடியை இணையதளத்தில் விமர்சிப்பவர்கள் ஒழுக்கமானவர்கள் இல்லை −காயத்திரி ரகுராம் # விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பொது வாழ்க்கைக்கு வர தகுதி அற்றவர்கள்,ஆனானப்பட்ட"காந்தியையே விமர்சிக்கலையா?


===========


7 சேலம் 8 வழி சாலை குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது #
நோக்கம் நேர்மையாக ,நியாயமானதாக இருக்கலாம்,வெளிப்படுத்திய விதம் தவறு.8 வழி சாலை அமைத்தால் 8 பேரை கொலை செய்வேன் என மிரட்டியது சட்டப்படி தவறு


===============


8 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை : பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பற்றாக்குறை இருக்கு?


===========


9 ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செல் போன் தயாரிக்க முடிவு~செய்தி
# ஊட்டி ஆப்பிளா?காஷ்மீர் ஆப்பிளா?னு கேட்டு நம்ம தளபதி வெளிநடப்பு பண்ணப்போறார் பாருங்க


===============


10 மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை - அமைச்சர் விஜயபாஸ்கர் சாதா சிகரெட் ,சரக்கு இதெல்லாம் உடல்நலனுக்கு நல்லது போல ,அமைச்சரே சொல்லிட்டாரு


=================


11 ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு கிடையாது என்பதுதான்: ராதாரவி # அப்போ அவரு பிரதமர் ஆகிடுவார்ங்கறீங்களா?ஏன்னா முதல்வராலயே முடியாது ,பை த"பை அவரால முதல்வர் ஆகவும் முடியாது


==============


12 தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் முறைகேடு... இறந்தவர்கள் பெயரில் கழிப்பறை கட்டியதாக அதிகாரிகள் மோசடி - செய்தி # "சுத்தம்"


===============


13 "குரங்கு தனது குட்டியைவிட்டு ஆழம் பார்ப்பதுபோல் தங்க. தமிழ்ச்செல்வனை வைத்து டிடிவி தினகரன் ஆழம்பார்க்க முயல்கிறார்" - ஜெயக்குமார் # ஆபரேசன் குரங்கு குசலா தான் பேராம்

=============


14 பிரதமர் மோடியிடம் நிறைய கோரிக்கைகளை வைத்தோம்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி # ஓஹோ ,எத்தனை கோரிக்கைகள் வெச்சீங்க? என்னென்ன கோரிக்கைகள்? அதான் சொன்னேனே?நிறைய கோரிக்கைகள்னு சரி என்னென்ன கோரிக்கைகள்? 1 ஆட்சியை கலைச்சுடாதீங்க 2 ரெய்டு நடத்தாதீங்க

=================


15 நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்! # செலவு குறையும் ,ஆனா செம்மறிஆட்டுக்கூட்டம் பார்முலா ஒர்க் அவுட் பண்ணப்பாக்கறாங்க

===========


16 உணவு நேரத்தின்போது ரயில்கள் தாமதமானால் ரயில்வே சார்பில் பயணிகளுக்கு குடிநீர், உணவு, தர நடவடிக்கை # பாதி ரயிலுங்க லேட்டாதான் வருது.பயணிகளுக்கு லாபம்தான்


===============


17 சாரதா நிதி நிறுவன ஊழல் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மனைவி நளினியை விசாரணைக்கு வர மத்திய அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் # குடும்பமே உள்ளே தான் போகும் போல


=============


18 சேலம்−சென்னை எட்டு வழி சாலையை எதிர்ப்பவர்கள் துரோகிகள் - பொன்னார் # விவசாய விளைநிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் விவசாயிகளுக்கு விரோதிகள்.சாமானய ஜனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டமும் வீணே!

==============


19 பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டவிவகாரத்தில் ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் - நெல்லை நீதிமன்றம் # ஏற்கனவே 2 மாசம் ஆகப்போவுது.இன்னொரு மாசம் கெடு எதுக்கு?


===============


20 விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - ஓ.பி.எஸ் தானே கோக்கோகோலாக்களுக்கு தண்ணி விக்க முடியும்?

============



0 comments: