தாராவி ல ரூ 40,000 கோடி ரூபா மதிப்புள்ள பொறம்போக்கு இடம் இருக்கு, அதை ஹீரோ& கோ குடி இருக்காங்க, அங்கே வசிக்கும் மக்களுக்கு ஹீரோ தான் கடவுள் , அவர் சொல்படி தான் இயங்குவாங்க. அரசாங்கம் அந்த ஏரியாவை சுத்தபடுத்த திட்டம் போடுது, அதை சாக்கா வெச்சு அந்த இடத்தை வளைச்சுப்போட வில்லன் திட்\டம் போடறாரு, யார் ஜெயிச்சாங்க என்பதே கதை
கபாலி படத்துல பா ரஞ்சித் உடன் எதிர்பாராத வியப்பு காம்போ ஏற்படுத்தி “ நெருப்புடா, நெருங்குடா பார்ப்போம் என பஞ்ச் பேசிய ரஜினி 2 வதும் அவரது காம்ப்போவிலேயே நடித்திருப்பது ரஜினியின் கொள்கைகளுக்கு எதிரானது . குறிப்பா ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி , தேவை இல்லாம ஜாதியக்குறியீடுகளை வலுக்கட்டாயமா திணிக்கும் இயக்குநருடன் மீண்டும் இணைந்தது ஏனோ?
ஓப்பனிங் சீன்லயே பேட்ஸ்மேனாக களம் இறங்கும் ஹீரோ அவுட் ஆவது சினிமா சரித்திரத்துலயே இதுவே முதல் முறை .இதன் மூலம் இயக்குநர் தன் வன்ம எண்ணத்தை விதைக்கிறார்
60 வயதான ஹீரோ தன் மனவி ,மக்களோடு வாழ்ந்து வரும்போது அவரது முன்னாள் காதலியை சந்திக்கிறார், வில்லனை சந்திப்பதை விட பாப்பாவை சந்திப்பதில் தான் ஹீரோவுக்கு ஆசை
மனைவியா ஈஸ்வரி ராவ். ஆங்காங்கே கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.,, அப்பப்ப அட்டகாசமான ஆக்டிங் என கலந்து கட்டி இருக்கார்
காதலியா ஹூமோ குரோஷி ( ஹோமோ வோ ஹேமாவோ இல்ல , வித்யாசமான பேரு)பல இடங்களில் பாந்தமான நடிப்பு
ரஜினி கூடவே வரும் இயக்குநர் சமுத்திரக்கனி குடிகாரனாக கடுப்பேற்றுகிறார். சிலர் இவரது நடிப்பை சிலாகித்தாலும் வழக்கமான கம்பீர நடிப்[பிலேயே இவரைப்பார்த்து பழகிய நமக்கு இந்த கேரடக்ர் எரிச்சலை
வரவழைக்குது
ஹீரோவின் மகனாக வத்திக்குச்சி ஹீரோ திலீபன் கவனம் ஈர்க்கிறார்
வில்லனாக வரும் நானா படேகர் பொம்மலாட்டம் ல கலக்கி இருந்தார். இந்த கேரக்டர் யானைப்பசிக்கு சோளப்பொறிதான்
வழக்கமாக மன்னன் டைப் காமெடி + ஆக்சன் ரசினியை ரசிக்கும் பெண்கள் , குழந்தைகளுக்கு இது ஒரு ஏமாற்றம்
நச் டயலாக்ஸ்
1 இப்பப்பாருடா ஆட்டத்த,ரஜினி இன்ட்ரோ பஞ்ச் #Kaala
2 உன்னை அடிவாங்கதான் சொன்னேன் #Kaala
3
நாம எல்லாரும் ஒண்ணா இருந்தா ஒருத்தரும் ஒண்ணும் செய்ய முடியாது #Kaala
4 எனக்கு உங்க உதவி வேணும்
நல்லது நடந்தா எப்பவும் நான் கூட இ ருப்பேன் #KAALA
5
என்னால இதை ஏத்துக்கவே முடியல.நீ எனக்கு இல்லைங்கறதை.. காலம் மறுபடி நம்மை சந்திக்க வச்சு கொடும பண்ணுது #Kaala
6 அரசாங்கம்எதுக்கு இருக்கு?கடன்தான் இருக்கு,கஜானா காலி னு என்கிட்ட சொல்லாதீங்க #Kaala
7 பணக்காரன் என்னைக்கு ஏழை நலன் பற்றி சிந்திச்சிருக்கான்? #Kaala
8 தவுட்டை வாங்கிக்கிட்டு தங்கச்சோறு தருவோம்னு எதிர்பார்க்காதீங்க #Kaala
9 உன்னை நம்பற மக்களுக்கு இதுவரை நீ என்ன பண்ணி இருக்கே? #Kaala
10 எங்களோட உரிமைகள்தான் எங்களோட பலம் #Kaala
11 பாக்க நல்லவர் மாதிரிதான் இருக்காரு
12 இது காலா கிலா.என்னோட கோட்டை,இங்க இருந்து ஒரு பிடி மண் கூட எடுத்துட்டுப்போக முடியாது #Kaala (இன்ட்டர்வெல் பிளாக் பிஜிஎம் பக்கா)
13 நான் உன்னை இன்னும் போகச்சொல்லலையே?
என் இடத்துக்கு வரும்போது பர்மிஷன் கேட்காம வந்துட்ட,ஆனா திரும்பிப்போகனும்னா என் அனுமதி வாங்கிட்டுதான் போகனும் #KAALA
13 செக்கு அளவு தங்கம் இருந்தாலும் செதுக்கி தின்னுட்டே இருந்தா மிச்சம் எப்டி இருக்கும் ? #KAALA
14 உற்றார் ,உறவினர் கூட இருப்பதுதான் வாழ்க்கை ,அவங்களை விட்டுட்டு தனியா போய் என்ன சாதிக்கப்போறே? #காலா
17 என்னை ஜெயிக்க நினைக்காத ,முடிஞ்சா என் முதுகுல குத்திக்கோ #காலா
18 கை குடுத்துப்பழகுங்க.அதுதான் சம உரிமை,கால் ல விழ வைக்க நினைக்காதீங்க #KAALA
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 காலா முதல் பாதி பாஸ் என சிங்கப்பூர் தகவல் #Kaala
2 கபாலி யை விட காலா திரைக்கதை ,வசனம் நல்லாருக்காம்,இது போதாதா? #Kaala
3 காலா ன்னா கறுப்பு,ஆனா கறுப்பு சிவப்பை கதிகலங்க வெச்சிடுச்சு.எதிர்பாராத வெற்றி #kaala
=============
4 அண்ணாமலை,பாட்ஷா பட வெற்றிகளை விட காலா பட வெற்றி மிக முக்கியமானது.ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப்பின் வரும் முதல் படம் என்பதால். இந்தப்படம் தோல்வி அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த பகுத்தறிவுவாதிகளுக்கு சம்மட்டி அடி #Kaala
5 தளபதி படத்துல டைரக்சன் மணிரத்னம்னு டைட்டில் வரும்போது ஒலித்த ரயில் பிஜிஎம் இதிலும்.குறியீடு #Kaala
6 இயக்குநர் சமுத்திரக்கனி மீது இயக்குநர் ரஞ்சித்துக்கு என்ன கடுப்போ தெரில,அவரோட கெத்துக்கு சம்பந்தம் இல்லாத டம்மி கேரக்டர் #Kaala
7 சும்மா நடந்து வர்ற சீன்லயே கைதட்டல் வாங்கற ஹீரோக்கள் தமிழ் சினிமால ரெண்டே பேர் தான் ,ஒருவர் ரஜினி ,இன்னொருத்தர் யாரு?னு ஊருக்கே தெரியும் !#Kaala
8
அவதாரம் படத்துல "தென்றல் வந்து தீண்டும்போது என்ன "பாட்டு பிஜிஎம் சாயல்ல ஒரு பிஜிஎம் #Kaala
9 வில்லன் RSS ,BJP கட்சி ஆள் னு குறியீட்டுக்காட்சிகள் ,தமிழிசை ,ஹச் ராஜா க்களுக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலை #Kaala
10 நானாபடேகர் ஹிந்தில மாஸ் ஆக்டர்,ஓப்பனிங்க் சீன்ல நிழல்கள் ரவி சாயல்ல வர்றாரு #Kaala
11 வில்லன் கால்ல விழச்சொல்லி நாயகியை மிரட்ற சீன்ல நாயகி மறுக்கும் நடிப்பு ரஞ்சித் டச் #Kaala
12 தர்மதுரை கெட்டப் ,தளபதி ஆக்சன் ,இதுதான் ரஞ்சித் காலாவுக்கு தந்த டிப்ஸ் #காலா
16 சில காட்சிகளில் ரஜினியின் முகமும் ,உடலும் பொருத்தம் இல்லாம ஒட்டிட்டு இருக்கற மாதிரி தெரிதே,தனுஷ் நடிச்ட்டாரா? #KAALA
17 ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அரசியல் பஞ்ச் ,தனிக்கட்சி குறியீட்டு வசனங்கள் எதுவும் வைக்காதது இயக்குனரின் பலம் என்றாலும் ஒரு வகையில் நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணியது படத்தின் பலவீனம் #KaalaFDFS
18 நேற்று − காலா படம் ஓடலைன்னா ரஜினியோட அரசியல் பிரவேசம் சந்தேகம்தான்
இன்று − ரஜினியோட சினிமா வேணா ஜெயிக்கலாம் ,ஆனா அவரோட அரசியல் கனவு பலிக்காது
19 பெங்களூர் ரைட்டருக்கு கலைஞர் மீது என்ன கோபமோ தெரில.காலா பாத்திரப்படைப்பே கலைஞரை முன் வைத்து தான் கறார் ( 2 ஜோடி ,3 ,4 குடும்பம்)
சபாஷ் டைரக்டர்
1 ஆன்மீக ரஜினியை அவரது சொந்தத்தயாரிப்பிலேயே அவரை கலாய்த்தது , மட்டம் தட்டியது
2 ரஜினியின் இண்ட்டர்வல் குடை - மழை ஃபைட் சீன் மாஸ்
3 வில்லன் கேரக்டரை சிவசேனா பால் தாக்கரே வுக்கோ மோடிக்கோ யாருடன் ஒப்பீடு செஞ்சாலும் மேட்ச் ஆகும்படி குறியீடுகள் வைத்தது
4 ஹீரோ - வில்லன் நேருக்கு நேர் சந்தித்துப்பேசும் காட்சிகள்
5 வில்லனின் பேத்தியை ஹீரோவிட,ம் ஆசி வாங்கச்சொல்லுகையில் ஹீரோ பேசும் வசனம்
6 சந்தோஷ் நாராயணாவின் பிஜி எம் பக்கா , எடிட்டிங் சுமார்தான் , ஒளிப்பதிவு கனகச்சிதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 ஹீரோ மக்களுக்காக என்ன செய்தார்? என்பதை செயல் வடிவில் காட்டவே இல்லை ஆனா புத்திசாலித்தனமா அதே டவுட்டை டயலாக்காகவே வெச்சது சமாளிஃபிகேசன் ( நீ மக்களுக்காக என்ன செஞ்சே?)
2 ஹீரோ - ஹீரோயின் ஃபிளாஸ்பேக் சீனை காட்சியாக சொல்லாமல் பொம்மை ட்ரெய்ய்லராக காட்டியது ஒட்டலை , இன்னும் ஜீவன் உள்ளதா ஆக்க அந்த லவ் போர்சனை சீனாக காட்டி இருக்கலாம் ( ரஜினியின் வயோதிகம் ஒரு தடையாக இருந்திருக்கலாம்)
3 படத்தில் வேங்கை மகன் ஒத்தைல நிக்கான் பஞ்ச் ஒண்ணே ஒண்ணுதான் . இது மாஸ் ஹீரோ படத்துக்கு பத்தாது, பாட்ஷாவில் ஒரே டயலாக்கை பல டைம் சொல்வது போலவும் , பாபாவில் 12 வெவ்வேறு பஞ்ச் சொல்வது போலவும் வரும்
4 பாஜக வை மறைமுகமாக எதிர்ப்பது கூ ஓக்கே , ஆனா வலுக்கட்டாயமாக இயக்குநர் தன் சாதி சார்ந்த குறியீடுகள் வைப்பது ரஜினியின் பெண்கள் ஆடியன்சிடம் எடுபடலை
5 பின் பாதி ரொம்ப நீளம் + இழுவை
சி.பி கமெண்ட்
காலா −முதல் பாதி ஜனரஞ்சகம் ,பின் பாதி மனோ"ரஞ்சித்"தம் ,கபாலிக்கு ஒரு படி மேலே,தளபதிக்கு கீழே.பிஜிஎம் ,வசனம்,ரஜினி ஸ்க்ரீன் பிரசன்ஸ் ப்ளஸ் ,படத்தின் நீளம் பின் பாதியில் அதிகம்,ஏ சென்ட்டர் ஆடியனசை கவர்வது சிரமம். விகடன் 43 ரேட்டிங்க் 2.75 / 5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)-43
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)
கேரளா−சங்கணாச்சேரி−தன்யா −10.30am ஷோ #KaalaFDFS
a============
===========
0 comments:
Post a Comment