ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். இவரோட ட்யூட்டில இவரால முடிக்க முடியாத கேசே இல்லை ., மிகத்திறமையா பல கொலைக்கேஸ்களை துப்பறிஞ்சு கண்டு பிடிச்சிருக்காரு. அப்பேர்ப்பட்ட அவருக்கு நாத்திகவாதிகளை டார்கெட் வெச்சு அவங்களை கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லரோட கேஸ் கைல சிக்குது.அதை எப்படி டீல் பண்றாருனு ஒரு 4 ரீல். அடுத்ததா ஒரு கேஸ்ல தன் சொந்த சகோதரரே கொலையாளியோனு சந்தேகப்படறாரு. அந்த கேசை எப்படி டீல் பண்றாரு என்பதே மிச்ச மீதிக்கதை
ஹீரோவா மெகா ஸ்டார் மம்முட்டி , இந்தப்படம் புக் ஆகும்போதே டைரக்டரிடம் “ மோகன்லாலோட த்ரிஷ்யம் மாதிரி ஒரு ஹிட் படம் த்ரில்லர் முவியா வேணும்னு சொல்லிட்டார் போல , பல காட்சிகளில் த்ரிஷ்யம் தாக்கம், குறிப்பாக க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்கள் ஒவ்வொன்றாக அவிழும் காட்சிகள்...இவ்ளோ வயசாகியும் ஆள் ஜம்முன்னு தான் இருக்கார் . நடிப்பு கம்பீரம் . ஜீப்பில் ஏறுவது , இறங்குவது நடந்து வருவது இந்தக்காட்சிகள் மட்டும் மினிம்ம் 20 டைம் இருக்கும், பில்டப் தேவை தான் ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு , அதுக்காக இந்த அளவுக்கா?
மம்முட்டிக்கு சகோதரராக வரும் அன்சன் பால் நல்ல நடிப்பு , நல்ல எதிர்காலம் உண்டு , க்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ் அவிழும் காட்சியில்ம் அவரது நடிப்புக்கு அப்ளாஸ் கிடைக்குது
உதட்டழகி கனிகாவுக்கு ஃபைவ் ஸ்டார் படத்துல நாமெல்லாம் சில்லறையை சிதற விட்டோம், பாவ்ம், இதுல பரிதாபமா இருக்கார். இன்னும் நல்லா இவரை ( படத்துல ) யூஸ் பண்ணி இருக்கலாம்
கத பரஞ்ச கத பட நாயகியான தருஷி இதில் சின்ன கேரக்டர். முதலுக்கு மோசம் இல்லை . சிரிக்கும் போது செயற்கை தட்டுது
கத பரஞ்ச கத பட நாயகியான தருஷி இதில் சின்ன கேரக்டர். முதலுக்கு மோசம் இல்லை . சிரிக்கும் போது செயற்கை தட்டுது
கார் சேசிங் காட்சிகள் பிரமாதமாக படம் ஆக்கப்பட்டிருக்கு. ஒளிப்பதிவு பக்கா , பின்னணி இசை ஓக்கே ரகம்
நச் டயலாக்ஸ்
2
இனிமே இந்த சீரியல் கொலைகாரனோட பாட்சா பலிக்காது ம், இனி ஒரு கொலை கூட விழாம பார்த்துக்குவேன்
அதை எப்படி சார் அவ்ளோ உறுதியா சொல்றீங்க?
எங்கப்பா பேரு ஆப்ரஹாம், அதை எப்படி என்னால உறுதியா சொல்ல முடிஞ்சதோ அதே மாதிரி தான்
‘
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 தெய்வத்தை திட்டி வாழறவங்களுக்கு இந்த பூமில இடமில்லை
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து அவங்களை கொல்ற சீரியல் கில்லரோட கதை #abrahamintaesanthathikal
சபாஷ் டைரக்டர்
1 மிக க்ரிஸ்ப்பான 110 நிமிடங்கள் , தேவை இல்லாத டூயட் சீன்களோ , மொக்கை காமெடி காட்சிகளோ இல்ல
2 மம்முட்டியின் பாத்திரப்படைப்பு அருமை
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமாதம்
4 போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்படும் சீரியல் கில்லரின் ஃபிளாஸ் பேக்கில் அரங்கம் அதிரும் கை தட்டல்
லாஜிக் மிஸ்டேக்ஸ் திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 போலீஸ் விசாரணை செய்யும் அறையில் சிசிடிவி காமிரா இருக்காதா? அது என்ன அப்போலோ ஹாஸ்பிடலா? எப்படி அங்கே கொலை செய்ய முடிகிறது ?
2 நாத்திகர்களை அவர்கள் குடும்பத்தோடு கொலை செய்யும் சீரியல் கில்லர் அந்தந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளையும் கொல்வதற்கு காரணம் சொல்லப்படவில்லை
3 சீரியல் கில்லர் எப்ப பாரு கைல ஒரு சுத்தியலோட சுத்திட்டு இருக்காப்டி, இதெல்லாம் சாத்தியமா?
4 நாத்திக வாதி என சொல்லப்படும் ஆளின் வீட்டின் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல இயேசு ஃபோட்டோக்கள் இடம் பெற்றது எப்படி?
5 நல்ல ஒரு த்ரில்லர் மூவிக்கு டைட்டில் இப்படியா வைப்பாங்க, என்னமோ ஃபேமிலி ஸ்டோரி க்கான டைட்டில் மாதிரி
5 நல்ல ஒரு த்ரில்லர் மூவிக்கு டைட்டில் இப்படியா வைப்பாங்க, என்னமோ ஃபேமிலி ஸ்டோரி க்கான டைட்டில் மாதிரி
சி.பி கமெண்ட் =ஆப்ரஹாமிண்ட சந்ததிகள் (மலையாளம்)− மம்முட்டிக்கு ஒரு ஹிட் க்ரைம் த்ரில்லர்.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட்.திரைக்கதை ஏ செண்ட்ர் ரசிகர்களுக்கு பிடித்த வகையில்.ரேட்டிங்க் 3/5 .உதட்டழகி கனிகாவை டம்மி ஆக்கியது பெரும்பிழை
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 43
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= 3.5/5
கலர்புல் இன்ட்டீரியர் டெக்ரேசன்
பத்தணம்திட்டா−செங்கன்னூர் − சிர்ரி−மம்முட்டி−
ஆப்ரஹாமிண்ட சந்ததிகள்(மலையாளம்)
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி ரம்ஜான் ரிலீஸ் அன்னைக்கே காத்தாடுது.ஆப்ரஹாமிண்ட சந்ததிகள (police story)்@ பத்தணம்திட்டா செங்கன்னூர் சிப்பி/சிம்மி/சிர்ரி காம்ப்ளெக்ஸ்
a
0 comments:
Post a Comment