எனக்குத்தெரிஞ்சு தமிழ் சினிமாவில் படம் போட்டு இடைவேளை வரை எந்த டூயட்டோ, காமெடிகாட்சிகளோ இல்லாமல் வில்லனை ஹீரோ கார்னர் பண்ணி மரண பயத்தை உண்டு பண்ணும் சீன் இவ்ளோ நீளமா வந்ததில்லை, அந்த வகையில் இயக்குநருக்கு ஒரு பாராட்டு , பிரமாதப்படுத்திட்டார். முதல் சீனிலிருந்து இடை வேளைம் வரை அவர் எதுக்காக வில்லனை குறி வைக்கறார் என்பது வில்லனுக்கும் தெரியலை , படம் பார்க்கும் நம்க்கும் தெரியல
ஆனா அந்த சுவராஸ்யம் இடைவேளைக்குப்பின் ஃபிளாஸ்பேக் முடிஞ்சதும், நமக்கு சப்னு போய்டுது , இதுவும் பத்தோட 11 ஆன பழி வாங்கல் கதை தானா? அப்டினு
படத்துல முதல் பாராட்டு வில்லனா நடிச்ச வசுமித்ரா தான் கலக்கிட்டார் .முதல் சீனிலிருந்து க்ளைமாக்ஸ் வரை அவர் மரண பயத்துடனே நடிச்சது அற்புதம்
பொதுவா வில்லனை உதார் விடறவனா, ஸ்டைலிஷா பார்த்தே பழகுன நமக்கு எதார்த்தமா பயப்படற ஆளா காட்னது குட்
அடுத்த பாராட்டு ஒளிப்பதிவாளருக்கு. ஒரு மாதிரி செம்மண் புழுதி அடிச்ச மாதிரியே திரைல பாதி நேரம் காட்டி ஒரு பரப்பான சூழலை உருவாக்குனது அபாரம்
பின்னணி இசை இன்னும் அதகளப்படுத்தி இருக்கலாம்
ஹீரோவா எம் சசிகுமார் . இன்னும், எத்தனை படம்தான் இவர் ஒரே மாதிரி பண்ணுவாரோ சலிப்பு
ஹீரோயினாக நந்திதா ,. அதிக வேலை இல்லை , மொத்தமா படம் ஓடறதே 2 மணி நேரம் தான், அதுல இவருக்கான போர்சன் 10 நிமிசம் தான்
வில்லனோட சம்சாரமா வர்ற கிராமத்துக்கிளி யாருன்னு தெரில , நல்ல நடிப்பு
பின் பாதியில் வரும் ஆக்சன் காட்சிகள் அதகளம், வன்முறையை தெறிக்க விட்டிருக்காங்க
நச் டயலாக் ( படத்துல வசனம் ரொம்ப கம்மி, அதுலயும் ஹீரோ வுக்கு நாலே டயலாக் தான்)
1 எதிரியை ஜெயிக்கனும்னா எதிரியோட கண்காணிப்பு வளையத்தை விட்டு நாம முதல்ல வெளில வரனும்,நம்ம கண்காணிப்பு வளையத்துக்குள்ள எதிரி யை கொண்டுவரனும் #Asuravadham
சபாஷ் இயக்குநர்
1 ஹீரோ ஓப்பனிங் சீனில் மிஸ்டு காலா விட்டு கிலி ஏற்படுத்தும் காட்சி
2 வில்லனின் சம்சாரம் - ஹீரோ - வில்லன் காம்போ சீன்கள்
3 ஒளிப்பதிவில் , பின்னணி இசையில் நல்ல அவுட் புட்
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1 வில்லன் பெண் சபலிஸ்ட்டா வர்றார். அவர் மளிகைக்கடைக்கு எதிரே இருக்கும் வீட்டில் பொண்ணு தனியா இருக்கு , புருசன் ஃபாரீன் ல ஜாப். ஆண்ட்டிக்கு ரூட் போடாம , ஆண்ட்டியோட டீன் ஏஜ் பொண்ணுக்கு குறி வைப்பது நம்பும்படி இல்ல
2 ஒரு கிராமத்தில் பொட்டிக்கடைம்வெச்சிருப்பவர் பட்டப்பகல்ல எந்த பயமும் இல்லாம பொட்டிக்கடைக்குள்ளயே ரேப் பண்றது நடை முறை சாத்தியம் இல்லை
3 வில்லனோட பொட்டிக்கடை கம் மளிகைக்கடைல ஒரு பையன் வேலைக்கு இருக்கறதா காட்றாங்க , ஆனா ரேப் நடக்கும்போது அவன் லாங்க் லீவ் ல போய்ட்டானா> விபரம் இல்ல
4 வில்லன் கரெக்ட் பண்ணுன கில்மா லேடி கடைக்கு வந்து கலர் குடிச்ட்டுப்போகுது , இவரு அந்த வேலைக்காரப்பையன் முன்னாடி சீன் போட அந்த லேடி கிட்டே காசு கேட்கறாரு, அந்த லேடி வில்லனை நோஸ்கட் பண்ணுது . இது நம்ப முடியாத சீன்
5 நகரங்களில் மருதாணிச்செடி கிடைக்காது , அதனால பொண்ணுங்க மெஹந்தி கோன் வாங்குவாங்க, ஆனா கதைப்படி கிராமத்துல இருக்கற அந்த பொண்ணு வில்லனோட கடைல மெஹந்தி வாங்க உள்ளே வருவதும் , காணாததைக்கணடது போல் அதுக்கு ஆசைப்படுவதும் பூச்சுற்றல்
6 ரேப் செய்யப்பட்ட பொண்ணோட மூக்குல கை வெச்சுப்பார்த்து மூச்சு வர்லைனு உறுதி செஞ்ச பின் தான் வில்லன் சாக்கு மூட்டைல கட்றான், பின் எப்டி அவளுக்கு உயிர் வருது? மயக்க நிலைல இருந்தா மூச்சு வந்திருக்குமில்ல?
7 பட்டப்பகலில் ஒரு பொண்ணோட டெட் பாடியை கிராமத்தில் டிஸ்போஸ் செய்வது அவளவ் சுலபமா?
8 ஹீரோ மகளுடன் ஃபோனில் பேசும்போதே அவள் வில்லனால் ரேப் செய்யப்படுவதை உணர்ந்தவர் டக்னு அதை கட் பண்ணிட்டு தன் வீட்டு லேண்ட் லைன் போனுக்கோ, மனைவியின் செல் ஃபோனுக்கோ தொடர்பு கொண்டு வார்னிங் தந்திருக்கலாமே?
அசுரவதம்− வழக்கமான சசிகுமார் வன்முறை பார்முலா,முதல்பாதி வில்லனுக்கு மரணபயம் ஊட்டும் காட்சிகள் அபாரம்,பின் பாதி இழுவை,ஒளிப்பதிவு,வில்லன் வசுமித்ரா நடிப்பு கலக்கல் ரகம்,மற்றபடி இது ஒரு சராசரி பழிவாங்கல் கதை,விகடன் 40 ,ரேட்டிங் 2.25 / 5
எம் சசிகுமார் அசுரவதம் @ஈரோடு அபிராமி70mm a/c dts 11 am ஷோ
================