ஹீரோ குப்பை அள்ளும் வேலை, அவருக்கு பொண்ணு பார்க்கறாங்க, பொண்ணு கிட்டே அவர் வேலை பற்றி மறைச்சு கிளார்க்னு பொய் சொல்லி மேரெஜ் ஆகுது. மேரேஜ்க்குப்பின் சேரி சூழலில் ஹீரோயினுக்கு எதுவும் பிடிக்கலை, அப்போதான் நம்ம பிரபல ட்வீட்டர்கள் “ஆண்ட்டி” ஹீரோ ம்ழைக்ககாதலன், அருண்காந்த் , சால்ட் பெப்பர் தளபதி , ரிடில் டைகர் மாதிரி பர்சனாலிட்டியான ஆள் குடி வர்றார்
பஞ்சும் நெருப்பும் பத்திக்குது.’எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கா? ஆமா எங்கேயோ கேட்ட குரல் + லட்சுமி குறும்படம் டைப் கதை தான்
ஹீரோவா டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இதுல ஹீரோவா அறிமுகம்.பிரமாதமான நடிப்பு , இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அவரோட பாடி லேங்குவேஜ்ல , குரல்ல நல்லா வெளிப்படுது.எதிர்காலம் உண்டு
ஹீரோயினா மணீஷா யாதவ். செம அல்வா ஃபிகர்.வர்ற ஒவ்வொரு சீன்லயும் இடை அழகில் 25% காட்டிட்டே தான் வர்றார். இப்பவெல்லாம் நடிப்புத்திறமையை யார் காட்றாங்க? ஆனா இவர் கிளாமர் , நடிப்பு இரண்டையும் ஒருங்கே காட்றார், மம் மகிழ்ச்சி
படம் பூரா வர்ற நண்பன் பாத்திரம் யோகிபாபுவுக்கு, பரவால்ல , மோசம் இல்ல
ஹீரோவின் அம்மாவாக வரும் ஆதிரா , பாட்டியாக வரும் கஸ்தூரி கனகச்சிதமான நடிப்பு
கள்ளக்க்காதலான வரும் சுஜோ மேத்யூ சுமார் தான் , அவரை விட அவரோட நண்பராக வரும் 2 வது வில்லன் பரவால்ல, இவருக்கு ஒரு ரேப் சீன் வேற உண்டு. இதெல்லாம் நம்பியார் காலத்துல பார்த்தது, நீண்ட இடைவெளிக்குப்பின்...
இசை ஒளிப்பதிவு நல்லாருக்கு, திரைக்கதை இயக்கம் சராசரி தரத்துக்கும் மேல
நச் டயலாக்ஸ்
1 நாங்க கஞ்சா கடத்தறது எங்க சொந்தம் யாருக்கும் பிடிக்கல
இன்னும் போலீஸ் உங்களைப்பிடிக்கல? #OruKuppaikKathai
2 யோகிபாபு =நாட்ல விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சு
ஓஹோ,உதாரணம் சொல்லு
80 ரூபாக்கு வித்த குவாட்டர் இப்ப 150 ரூபா #OruKuppaiKathai
3 நாங்க ஆட்சிக்கு வந்தா சென்னையை சிங்காரச்சென்னை ஆக்குவோம்னு எல்லா அரசியல்வாதியும் மேடைல சொல்றான் ,ஆனா என்னை மாதிரி குப்பை அள்றவன் தான் அதை செய்வான் #OruKuppaiKathai (டைரக்டருக்கு தில்லு.படத்தயாரிப்பாளரே உதயநிதி ஸ்டாலின்.தாக்கற வசனம் அப்பா ஸ்டாலினை)
சொந்தக்காசுல சூன்யம்
4 அடுத்தவங்களை பொய் சொல்லி ஏமாத்தக்கூடாதுனு நல்ல எண்ணம் இருக்கறதுக்காகவே உங்களுக்கு பொண்ணு தர்றோம் #OruKuppaikKathai
5 எல்லாரும் கஷ்டப்படறதே அவங்கவங்க குடும்பத்துக்காகத்தான் ,ஆனா நான் பாக்கற வேலை என் மனைவிக்குப்பிடிக்கல #OruKuppaiKathai
6 மிஸ்!சிகரெட் குடிச்சா குழந்தை பிறக்காதுனு சொல்வாங்க
7 பெத்த குழந்தையை அவங்க அம்மாவோ ,அப்பாவோ வளர்த்தற மாதிரி வேற யாரும் வளர்க்க முடியாது #OruKuppaiKathai
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 தியேட்டருக்கு இவனுங்க லேட்டா வந்துட்டு நம்ம முகத்துல லைட் அடிச்சு நம்மை தண்டிக்கறானுங்க,அடேய்
2 மணிஷா யாதவை ஹீரோயினா போட்டா நம்ம டைரக்டர்ஸ் எப்டியோ 2 கில்மா சீன் ஷூட் பண்ணிடறாங்க #OruKuppaiKathai
3 லட்சுமி டைப் கில்மாக்கதை போல,டைட்டிலைப்பாத்து ஏதோ ஆர்ட் பிலிம்னு நினச்ட்டேன் #OruKuppaiKathai
சபாஷ் டைரக்டர்
1 தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ குப்பை அள்ளறவரா வர்றது இதுவே முதல் முறை, துணிச்சலான முயற்சி
2 ஹீரோயின் மணீஷா யாதவ் வர்ற சீன்கள் எல்லாம் சீன்கள் தான். கேமரா கோணம் அழகு
3 வாய்ப்பிருந்தும் திரைக்கதையில் வல்கரான காட்சிகள் , வசனங்கள் ஏதும் வைக்காதது
லாஜிக் மிஸ்டேக்ஸ் & திரைக்கதையில் சில ஆலோசனைகள்
லாஜிக் மிஸ்டேக் 1 -கார்ப்பரேஷன் ல குப்பை அள்ற வேலைல இருக்கற ஹீரோ பொண்ணு பாக்கப்போறதெல்லாம் சேட்டு வீட்டு லட்டு பிகர்களாவே இருக்கே?சுமார் அழகுல எதுவுமே இல்ல.எல்லாம் வசதி வசந்தி தான் #OruKuppaiKathai
2 சென்னை ல கதை நடக்குது.கொளுத்தும் வெய்யில்னு டயலாக் வருது.ஹீரோயின் ஸ்வெட்டர் போட்டிருக்கு #OruKuppaiKathai (ஷூட்டிங் ஊட்டி போல)
3 ஒரு கல்யாணம் ஆகப்போற பொண்ணு மாப்ளை பற்றி விசாரிக்காம அவர் சொல்வதை அப்டியே நம்பிடுவாரா?
4 ஆஃபீஸ்ல இன்னொரு பொண்ணுக்கு ரூட் போடும் கள்ளக்காதலன் தன் ஃபோனை அசால்ட்டா தன் மனைவி பார்வை படும் இடத்தில் வைப்பாரா?
5 பொதுவா ஆண்ட்டிகளை கரெக்ட் பண்றவங்க ஒண்டே மேட்ச் 10 டைம் ஆடிட்டு அடுத்த டார்கெட்க்கு போய்டுவாங்கனு மழைக்காதலன் வகையறாக்கள் சொல்றாங்க, அப்போ இவரு மட்டும் ஒரு பங்களா வை வாடகைக்கு எடுத்து கீப்பாக வைப்பது நம்பும்படி இல்லை
6 கள்ளக்காதலனின் நண்பராக வருபவர் தனிமையில் இருக்கும் மணீஷா வை ஈசியா கரெக்ட் பண்ற ம்யக்க மருந்து, போதை மருந்து எதுவும் யூஸ் பண்ணாம அந்தக்கால வில்லன் ரேஞ்சில் கொடூரமாக கற்பழிப்பு முயற்சியில் ஈடுபடுவது நகைப்பு
சி.பி கமெண்ட் -ஒரு குப்பைக்கதை − முதல் பாதி "லட்சுமி"குறும்படம
் பின் பாதி "three way love" க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் "ராம்" . புதுமுக ஹீரோ நடிப்பு ,மணீஷா யாதவ் இடுப்பு குட்
விகடன் 41 ,ரேட்டிங்க் 2.5 / 5 #OruKuppaiKathai
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) 3/5
ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்
தமிழ்நாட்டின் நாளைய முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்ப்பற்றுடன் துவக்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு "ஒரு குப்பைக்கதை" 157 நிமிஷம் @ ஈரோடு சண்டிகா
0 comments:
Post a Comment