Saturday, May 26, 2018

செம - சினிமா விமர்சனம்

பெண்கள் , ஃபேமிலி ஆடியன்ஸ் கை வசம் வைத்துள்ள இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பு, பெண்கள் முகம் சுளிக்கும்படி வசனம் பேசி தர லொக்கல் சி செண்ட்டர் ஆடியன்ஸ் ரசிக்கும் ஜி வி பிரகாஷ்  ஹீரோ இந்த காம்பினேஷன்ல வந்திருக்கும் படம் யு வா இருக்குமா? ஏ வா? இருக்குமா? யு/ஏ வா இருக்குமா? வாங்க பார்க்கலாம்



 தூறல் நின்னு போச்சு படத்தில் வருவது போல் ஹீரோ ஹீரோயின் பெண் பார்க்கும் படலம், எல்லாம் ஓக்கே ஆகும்போது பொண்ணு வீட்டுக்கு ஒரு பெரிய இட சம்பந்தம் வருது.பொண்ணோட அப்பா மனசு தடுமாறுகிறார், ஆனா ஹீரோ ஹீரோயின்  கல்யாணம் நடக்குது, அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதே கதை



ஹீரொவா பிட்டுப்படம்டி புகழ் வாய்ச்சொல் வீரர் ஜிவிபிரகாஷ். இவர் எந்த வித டபுள் மீனிங்கும் பேசாமல் டீசண்ட்டாக நடித்ததே பெரிய ரிலீஃப். பாடல் காட்சிகள் பரவால்ல. தனுஷை இமிடேட் பண்றார். முதல் பாடல் காட்சியில் கலக்கல் டான்ஸ். காமெடி காட்சிகளில் சமாளிக்கிறார்


 ஹீரோயினா  அர்த்தனா ( என்ன பேரு இது?) ரொம்ப மீடியம் ஃபிகர் தான். இந்தக்கதைக்கு , இந்த ஹீரோவுக்கு இது போதும்னு நினைச்சாங்களோ என்னவோ? இவருக்கு படத்துலயும் பெருசா சீன் எதுவும் இல்ல, இவரும் பெருசா எதுவும் திறமை காட்டலை, வந்தவரை ஓக்கே 


மன்சூர் அலிகான் ஹீரோவின் மாமனாரா வர்றார் , ஓவர் ஆக்டிங். ஆனாலும் மோசமில்லை. கோவை சரளா மாமியார். கடுப்புகளைக்கிளப்பறார்.


ஹீரோவின் அம்மாவா சுஜாதா கிராமத்து அம்மாவின் அட்சரம் சுத்தமான பதிப்பு, அருமை, யோகிபாபு காமெடியன், படம் முழுக்க வர்றார், அவ்ளோதான் , பெரிய பஞ்ச் , காமெடி எதுவும் பண்ணலை


 இசை நம்ம ஹீரோதான். தர லோக்கல் சாங்க்ஸ் 2  இருக்கு , ஹிட் ஆகிடும்


சி செண்ட்டர்களில் ஒரு வாரம் ஓடும்



நச் டயலாக்ஸ்  ( வசனம் - பசங்க புகழ் இயக்குநர் பாண்டிராஜ்)


1  பொண்ணுங்க இருக்கற இடத்துலதான் உங்க பையன் இருப்பான்

இல்லையே ஜோசியரே!அவன் இருக்கற இடத்துலதான் பொண்ணுங்க இருக்காங்க



ஒரு விஷயத்துல நான் கமல்ஹாசனை விட மோசமானவன்



ஒரு லவ்வர் கூட பிரேக்கப் பண்றதை விட ஒரு நண்பன் கூட பிரேக்கப் ஆகறதுதான் கஷ்டமான விஷயம்


யோகிபாபு=ஆண்டவன் நல்லவங்களைத்தானே சோதிப்பான்?
ஆமா
உன்னை ஏன் சோதிக்கறான்?bad god



அடுத்தவன் பொண்டாட்டியை ரசிக்கறது"தப்புடா
ஏண்டா?
எப்டியும் இவ உன்னை ரிஜக்ட் பண்ணப்போறா,அப்போ அவ அடுத்தவன் சம்சாரம்தானே?



நான் யாருக்கும் கை குடுக்கறதில்ல
ஏன்?
கை கொடுத்தா நம்ம பவர் அடுத்தவங்களுக்குப்போயிடும்  ( இந்த டயலாக் ஷாம் நடித்து இயக்குநர் வசந்த் இயக்கிய “ ஏய் , நீ ரொம்ப அழகா இருக்கே” படத்தில் இருந்து உருவப்பட்டது)


பூமி சூரியனை சுத்துனதை விட அதிகமா பசங்க பொண்ணுங்க பின்னாடி சுத்தி இருக்காங்க


8  இனிமே என் கிட்ட பேசறப்ப ஹஸ்கி வாய்ஸ்ல பேசவேணாம்
ஏன்? ஒரு மாதிரியா இருக்கு அப்ப நானு?
நீ ஆளே ஒரு மாதிரிதாண்டா இருக்கே


9  என்னை மாதிரி பொண்ணுங்களால வேற என்ன பண்ணிட முடியும்?யாருக்கும் தெரியாம அழத்தான் முடியும்



10  அவருக்கு ஏன் அட்டாக் பாலு னு பேர் வந்தது?ரொம்ப டெரரா அட்டாக் பண்ணுவாரோ?
அட நீங்க வேற,அவருக்கு அடிக்கடி ஹார்ட் அட்டாக் வந்துடும்


 



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ரொம்ப சின்னப்படம் போல.123 நிமிஷம்


2  பர்சனாலிட்டியா இருக்கற விவேக் ,சந்தானம் எல்லாம் அடுத்தவங்க பர்சனாலிட்டியை நக்கல் பண்றப்ப ரசிக்க முடிஞ்சுது,யோகிபாபு அதே பாணில கிண்டல் பண்றப்ப.....



உருட்டுக்கண்ணாலே பாட்டு செம டப்பாங்குத்து.ஆனா டான்ஸ் மூவ்மெண்ட்ல ஜிவிபி ஆடுகளம் தனுஷ் சை பாலோ பண்றாப்டி


கே பாக்யராஜ் டைரக்சன்ல வந்த "தூறல் நின்னு போச்சு" பட கதையை அட்லி வேலை பண்ணி ஒரு படம் ரெடி பண்ணிட்டாங்க,ஆனா எடுபடல


வழக்கமா தன் எல்லா படங்களிலும் பொண்ணுங்களை மட்டம் தட்டி கேவலமா டபுள் மீனிங்க் கில்மா காமெடி டயலாக் பேசற "பிட்டுப்படம்டி" புகழ் ஜிவிபி இதில் அடக்கி வாசித்திருப்பது ஆச்சரியம்.  ( காரணம் கண்ணிய இயகுநர் பாண்டிராஜ் சொந்தப்படம் ஆச்சே?)






சபாஷ் டைரக்டர்

1 முகம் சுளிக்கும்படி வசனங்கள்  வைக்காதது +

2   ரொம்ப சின்னப்படம், ரொம்ப மொக்கை போடாம 2 மணி நேரத்தில் முடிச்சது

3   பாடல்கள் 3 ஹிட் ஆனது, பட டைட்டில் செலக்சன். யாராவது படம் பற்றி கேட்டா செம அப்டி சொல்லி பாசிட்டிவ் மார்க்கெட் பண்ணலாம், 



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


லாஜிக் மிஸ்டேக் 1 −பொண்ணோட ஜாதகம் தரும்போதே மாப்ளை என்ன வேலை?னு விசாரிச்ட்டுதான்"தருவாங்க.எல்லாம் முடிஞ்சு பொண்ணு பார்க்கற வைபவத்துல மாப்ளை தொழில் பற்றி விசாரிக்கறாங்க


7 மாசத்துலயே குறை பிரசவம் பாத்துடுங்கனு டாக்டர் கிட்ட ஹீரோ தன் மனைவியை ஒப்படைக்கறாரு.என்ன கேவலமான லாஜிக் இது?என்ன காரணம்னா காதலை எதிர்த்த பொண்ணோட அப்பா 7 மாசத்துல ஜெயில்ல இருந்து வர்றாராம்


3  ஒரு பொண்ணு 7 மாசமா அப்பாவை விட்டு வேற ஊர்ல வேலை ல இருக்குன்னா அப்பா ஒரு டைம் கூட பார்க்க வர மாட்டாரா?


4 அப்டி அப்பா பார்க்க வந்துடக்கூடாதுனு ஐடியா பண்ணி நாயகியும், அம்மாவும் பிளான் பண்ணி அப்பாவையே மாட்டி விட்டு ஜெயில தள்ளுவது காலக்கொடுமை


5  வில்லனாக ஒரு மிக்சர் பார்ட்டி. படு கேவலம்



சி.பி கமெண்ட் -செம −முன் பாதி தூறல் நின்னு போச்சு ,பின் பாதி விளங்காம போச்சு.மொக்கைப்படம்.படத்தில் ஒரே ஆறுதல் ஜிவிபி அடக்கி வாசித்திருப்பது.யோகி பாபு வேஸ்ட் ,டிக்கெட் காசும் வேஸ்ட்.விகடன் மார்க் 36 ,ரேட்டிங்க் 2 / 5
டிவி ல போட்டா முதல் பாதியை மட்டும் பாதி பாக்கலாம்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 36


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) = 2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


0 comments: