ஹீரோ வுக்கு சம்சாரம் இல்ல, ஒரு பெண் குழந்தை மட்டும் , ஹீரோயினுக்கு புருஷன் இல்ல, ஒரு ஆண் குழந்தை மட்டும், 2 குழந்தைகளும் ஒரெ ஸ்கூல்ல படிக்கறாங்க . அவங்க 2 பேருக்கும் எல்லாரும் ஒரே வீட்ல வாழ்ந்தா நல்லாருக்கும்னு ஒரு எண்ணம், அம்மா அபாவை சேர்த்து வைக்க முயற்சி பண்றாங்க , எல்லாம் கூடி வரும் வேலையில் நாயகியின் புருஷன் வில்லனா முளைக்கறார், என்ன அச்சு என்பதே மிச்ச மீதிக்கதை
ஹீரோ வா அர்விந்த்சாமி , தளபதியில் கலெக்ட்ரா அறிமுகமாகி பம்பாயில் ஹீரோவா அறிமுகம் ஆனவர். எல்லா படங்களிலும் லவ்வர் பாயாகவே வந்து ஒரு இ,மேஜை உருவக்கிக்கொண்டவர்.புதையல் படத்துலதான் வித்தியாசமான காமெடி ஹீரோவா கலக்கினார், அப்பேர்ப்பட்ட அவர் நீண்ட இடைவெளிக்குப்பின் தனி ஒருவன்ல வில்லனா பின்னி பெடல் எடுத்திருந்தார்., இந்தப்படத்துல அவர் முரட்டுத்தனமான அடிதடி ஆளாக வந்தாலும் பெருசா எடுப்டலை, அனாலும் அவரால் முடிஞ்ச வரை முட்டுக்கொடுத்து நடிச்சிருக்கார். திரைக்கதையின் காமெடி காட்சிகள் அவருக்கு கை கொடுக்குது
ஹீரோயினா அமலா பால் . 10 வயசுப்பொண்ணுக்கு அம்மா கேரக்டரா இருந்தாலும் லோ கட் ஸ்லீவ்லெஸ் ஜாக் லோ ஹிப் சேலை என கிளமராவே வர்றார் , அவரது இந்த கொள்கைக்கு பாராட்டு.
படத்தின் பெரிய பிளஸ் பேபி நைனிகா . தெறியில் வந்து கலக்கியவர் இதில் பல இடங்களில் ஸ்மார்ட்டான நடிப்பு , சில இடங்களில் பேபி ஷாலினி போல் ஓவர் ஆக்டிங். அந்த சினப்பையனும் ஒக்கே
நாசர் அப்பா கேரக்டர். ஓகே.
ரோபோ ஷங்கர் , சூரி சும்மா அப்டியே வந்துட்டுப்போறாங்க , பெருசா காமெடி எதுவும் இல்ல
ஒளிப்பதிவு இசை எல்லாம் சராசரி ரகம்
பாஸ்கர் த ராஸ்கல் மலையாளப்படத்தின் தழுவல் தான் இது ./ மம்முடி நயன் தாரா நடிச்ச அளவுக்கு இவங்க 2 பேரும் பண்ணலை. இருந்தலும் ரொம்ப மோசம் இல்லை
இயக்குநர் சித்திக் ஆல்ரெடி ஃபிரண்ட்ஸ் , எங்கள் அண்ணா படங்கள்ல ஹிட் கொடுத்திருக்கார், இதுவும் மீடியம் ஹிட் தான், ஃபேமிலி ஆடியன்ஸை கவரும்
சபாஷ் டைரக்டர்
1 அமலா பால் . அர்விந்த் சாமி காம்போ சீன்ஸ் இளமை
2 அமல பால் கிளாமர் காட்சி வாவ் , சூயட் சீனில் அந்த படகு காட்சியில் அமலாபால் லோஓஓஓ கட் ஜாக்கெட் அபாரம்
3 பேபி நைனிகா நடிப்பு பெரிய +
லாஜிக் மிஸ்டேக்ஸ் & திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 தன் புருசன் ( காதலன்) ஒரு தீவிரவாதி என்பது தெரியாமல் ஒரு மனைவி நம்பமுடியல
2 வில்லனா வரும் அமலாபாலின் புருசன் தன் மனைவி மேல் பாசம் இல்லாமல் மகளின் மேல் பாசம் இருப்பது நம்பும்படி இல்லை, இத்தனைக்கும், குழந்தை பிறந்தப்பவோ பிறந்த பின் 10 வருசமாக பார்க்க வராதவருக்கு திடீர் பாசம் எப்படி வரும்?
3 பின் பாதி திரைக்கதையில் தடுமாற்றம், ஃபேமிலி பேக் கிரவுண்டில் இருந்து ஹார்டு டிஸ்க் வேடையில் எடுபடலை
4 காமெடி ஸ்கோப் உள்ள கதையில் ரோபோ சங்கர் , சூரியை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாம்
5 வில்லன் கெர்கடர் தண்டம்
நச் டயலாக்ஸ்
1 ஒரு பொண்ணோட நம்பிக்கையே அவ கூட இருக்கற ஆம்பள தான்"#bhaskarorurascal
2 பெரியவங்க முன்னாடி பொய் பேசி நடிக்கறது ஈசி,குழந்தைங்க முன்னாடி அப்டி நடிக்கறதுதான் கஷ்டம் #bhaskarorurascal
சி.பி கமெண்ட் -பாஸ்கர் ஒரு ராஸ்கல் − பெண்களுக்குப்பிடிக்கும் விதத்தில் முதல் பாதி பேமிலி காமெடி மெலோ டிராமா,பின் பாதி "எங்கள் அண்ணா" டைப் மொக்கை காமெடி,சொதப்பல் திரைக்கதை,புதையல் படத்துக்குப்பின் அர்விந்த்சாமிக்கு ஒரு மீடியம் ஹிட் பிலிம்.விகடன் 40 ,ரேட்டிங்க் 2.5 / 5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 40
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 3/5
0 comments:
Post a Comment