1 தமிழ்நாட்டில் தேனிமாவட்டம் பொம்மிநாயக்கன்பெட்டியில் மதக்கலவரம்.!என வாடசப்ல ஒரு வீடியோ க்ளிப் உலா வருது.தேவையில்லாமல் அதை பரப்பி மக்களிடையே மன உளைச்சலைத்தூண்டாதீர்!
===============
2 இரந்து வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் பெண்களே அதிகம் பேர் உதவி செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் ஆண்களிடம் கையேந்துவதை விடுவதில்லை
=============
3 தான் சம்பாதிப்பதில் பெரும் பகுதியை குடித்தே அழிப்பவன் சிறந்த உழைப்பாளியாக இருந்தாலும் அவன் உழைப்பு வீணே!
==============
4 பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சாருநிவேதிதா போட்டியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதால் ஆண்கள்,பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும்
===============
5 பெரும்பாலானோர்களின் உழைப்பு அவர்களுக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால்தான் சமூகம் மதிக்கும் என்ற தவறான வழிகாட்டலில் வீண் ஆகிறது
==============
6 கலைஞர் செய்த வரலாற்றுப்பிழைகளில் மிக முக்கியமானது அரசு ஊழியர்களுக்கு இஷ்டத்துக்கு சம்பளத்தை ஏற்றி விட்டது.2 கோடி வாக்கு வங்கி கிடைக்க வருடா வருடம் கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணம் தண்டமா போகுது
==============
7 குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற ஒருவருக்கு மணிமண்டபம் ,நினைவு மண்டபம் கட்ட மக்கள் வரிப்பணம் வீணாக்குவது சட்டத்துக்குப்புறம்பானது.முதல்வர் அதற்கான விழாவில் கலந்து கொள்வதும் தண்டச்செலவே!
============
8 சிறந்த ருசியான குடி தண்ணீர்
1 மழைநீர் (வானத்திலிருந்து பெய்வதை நேரடியாக பாத்திரத்தில் பிடித்தது)
2 அருவி நீர் (குற்றாலம் இன்ன பிற)
3 ஆற்று நீர் (சாய நீர் கலக்காத)
5 சுனை நீர் ( தொடுபுழா)
4 தெப்பக்குளத்து தண்ணி (வைத்தீஸ்வரன் கோவில் ,சிதம்பரம்)
6 கிணற்று நீர்
=============
9 அவசர /இக்கட்டான நிலை பண உதவி தேவைப்படுவோர்க்கு ஒரு தகவல்.ட்விட்டரில் உள்ள ட்வீட்டர்களில் உதவும் மனப்பான்மை கொண்ட ,அதிக சம்பளம் /வருமானம் உள்ள ட்வீட்டர்கள்
1 கருணைமலர்
2 ஸ்வீட் சுதா எ மின்னல்"சுதா
3 வன யட்சி
4 ஆதிரை
5 நந்து
9 ரிபுமாரினி
6 கவிதா
7 சித்ரா
8 சந்திரகலா
10 புனே லதா
===================
10 முன்பதிவு செய்யாத தொலை தூர ரயில் பயணங்களில் செய்தித்தாள் தான் பத்தமடை பாய்.கை வசம் உள்ள கைப்பை தான் தலையணை
============
11 சொந்தத்தொழில் செய்பவர்களின் உழைப்பு மாதாந்திர சம்பளக்காரர்களின் உழைப்பை விட 2 மடங்கு கூடுதலாகவும் வருமானம் 4 மடங்கு அதிகமாகவும் இருக்கும்
=============
12 மக்கள் நலனுக்காக மக்கள் நலத்திட்டத்தில் அரசு செலவில் ஒரு செங்கல்லை எடுத்து வைக்கும்போது தன் பாக்கெட்டில் ஒரு கூழாங்கல்லையாவது எடுத்து வைத்துக்கொள்பவர்தான் நம் தானைத்தலைவர்
===========
13 பியூட்டி பார்லர்ல நெயில் பாலீஸ் போட்டு விட 250 ரூபா சார்ஜ் பண்றாங்கனு ஒரு பொண்ணு FB ல ஆதங்கமா பதிவு போட்டிருக்கு,ஏம்மா,வெறும் 25 ரூபா தந்தா நாங்க போட்டு விட மாட்டமா?
============
14 மாச சம்பளம் ரூ 50,000 டூ ரூ 65,000 வாங்கும் அரசு ஆசிரியர்கள் சம்பளம் பத்தலைன்னு ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலம் போராடறாங்களாம்.அத்தன பேரையும் வீட்டுக்கு அனுப்பிட்டு புது ஆளுங்களை மாதம் ரூ 30000 சம்பளம்னு பேசி ஒப்பந்தம் போட்டு ஆள் எடுத்தா அரசுக்கு பணம் மிச்சம்.வேலை வாய்ப்பும்
===========
15 பிரைவேட்டெக்ஸ்டைல்ஸ் சொசைட்டி மேனேஜர்கள் மாசா மாசம் கமிஷன் மட்டுமே 5 லட்சம் கிடைக்குதாம்.அவங்களை எல்லாம் VRS ல அனுப்பிட்டு புது ஆளுங்களை நியமிக்கனும்.அவங்க கொஞ்ச நாள் சம்பாதிக்கட்டுமே பாவம்
=============
16 திருட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஒரு அறிவுரை.மாட்டிக்காமல் ஜாக்கிரதையாகத்திருடவும்.ஏனெனில் திருட்டு ரயிலில் பயணித்தோ ,திருடியோ நீங்க மாட்டிக்கிட்டா திருடன்.
மாட்டிக்காம சாமார்த்தியமா தப்பிச்ட்டா தலைவன்
=============
17 போலீஸ்,மிலிட்ரி உள்பட பெரும்பாலான பணிகளுக்கு நபரின் உயரம் + ஆக பார்க்கப்படும்,ஆனால் பூக்கடைல வேலை செய்ய மட்டும் உயரம் −.ஏன்னா ஆள் உயரமா இருந்தா கை நீளமா இருக்கும்,கை நீளமா இருந்தா முழம் அதிகம் பிடிக்கும்.வேணா பூக்கடைகளை நோட் பண்ணுங்க.சின்னப்பசங்க,பொண்ணுங்க தான் இருப்பாங்க
===============
18 பெரும்பாலோனோர்க்கு அரசுப்பணி கிடைக்க ஒரே வழி அரசுப்பணியை 10 வருச காலத்துக்கு மட்டும் வழங்குவதே!எஞ்சிய நாட்களில் அதுவரை சம்பாதித்ததை வைத்து பிஸ்னெஸ் செஞ்சுக்கட்டும்.
============
19 மழை பகல்ல வர விடாம இரவு 11 டூ காலை 6 வரை வர்ற மாதிரி பண்ணீட்டா ஜனங்க சிரமப்படமாட்டாங்க,உற்பத்தி பெருகும்.மக்கள் தொகையும் அபாரமா இருக்கும்.நாமளும் திண்ணைல படுக்கத்தேவை இல்லை
=================
20 சில கம்பெனிகளில் /கடைகளில் MD/ முதலாளிகள் ,பணி புரியும் இடத்துலயே படுத்து ஓய்வெடுக்கறாங்க.வியாபாரம் படுத்துக்குதோ இல்லையோ பணியாளர்களுக்கு குளிர் விட்டுப்போகும்
============
0 comments:
Post a Comment