Thursday, April 12, 2018

நேசமங்கையர்க்கரசி

ஆரோக்ய வாழ்வு வாழ ஆசைப்படுவோர் தொழிற்சாலை உள்ள ஊரில் குடி இருக்க வேண்டாம் . உதா திருப்பூர் ,பள்ளிபாளையம் (சாயக்கழிவுகலந்த ஆற்று நீர்) அரியலூர் ,தூத்துக்குடி,கூடங்குளம்,சென்னை


================



2 ஒரு ஆண் சம்பாதிக்கும் வாழ்நாள் செல்வம் பெரும்பாலும் ஒரு பெண்ணுக்காக செலவு செய்யப்படுகிறது.தப்பில்லை.ஆனால் அந்தப்பெண் உங்களை ஏமாற்றி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்


============


3 ஈரோடு ,திருப்பூர் ,அவினாசி பகுதிகளில் மழை.மகிழச்சி.நல்ல மழை பெய்து நாம் அதை மண்ணுக்குள் இறக்கி சேமித்தால் எந்த மங்குனிகளிடத்திலும் தண்ணீருக்கு கையேந்ததத்தேவை இல்லை


===============



4 ஏப்ரல் 1 /மார்ச் 31 ல் ஒருவர்"தன் பணியை துறக்கிறார் எனில்
1 புது கம்பெனி /ஆபீசில் 20%−25% சம்பள உயர்வு 2 பழைய கம்பெனியில் வாக்கு"தந்தபடி சேலரி ஹைக் இருந்திருக்காது


===============



5 பதவிக்காக ஒருத்தர் கால்ல விழறதெல்லாம் என்ன பொழப்பு?னு கேட்டேன் ,அதுக்குப்பின்தான் Ops தர்மயுத்தம் தொடங்கினார் −ஆடிட்டர் குருமூர்த்தி # சசிகலா கால்ல விழறதை விட மோடி கால்ல விழுந்தா எதிர்காலத்துல நல்லதுனு ஐடியா குடுத்திருப்பாரு


================


6 House, Home.. என்ன வித்தியாசம்?
எந்தெந்தச் சூழலில் எதையெதைப் பயன்படுத்தணும்? நீங்க மட்டும் தனியா குடி இருந்தா அது ஹவுஸ். உங்க அம்மா வோ உங்க மனைவியோ உங்களோட இருந்தா அது ஹோம். ஹோம் மேக்கர்ஸ் லேடீஸ்


================



7 ஒருவரது"வீழ்ச்சி இன்னொருவரின் வளர்ச்சி.
உதா.ஏர்செல்லின் வீழ்ச்சி BSNL வளர்ச்சி (ஒரே மாதத்தில் 10 லட்சம் புது"சிம் சேல்ஸ்) ,ஏர்டெல்,(15 L)

===============


8 உங்க டி பி நைசுங்க...
உங்க கவிதை சூப்பர்ங்க. நீங்க ரொம்ப நைசுங்க.. இதெல்லாம் பழைய டெக்னிக்.நெட்"தமிழனின் புதிய டெக்னிக்.உங்களுக்காகத்தான் ஆன் லைனே வர்றேன்.இல்லைன்னா"எப்பவோ க்ளோஸ்/டீ"ஆக்டிவேட் பண்ணீட்டு"போயிருப்பேன்

================


9 சந்தோசமா வாழனும்னா ஒன்னு
நம்மள ராஜாவா நினைச்சு வாழனும் ....இல்ல ... ஆ.ராசா சம்பாதிச்சத, ஹெச்"ராஜா பேசறதை",உளர்றதை கண்டுக்காம"இருக்கனும்

===============



10 ஈரோடு டூ செ.மலை பிரைவேட்"பஸ்களில் (நந்தகுமார் ,ஸ்ரீபதி) 2 கண்டக்டர் (முன் பக்கம் 1 ,பின்பக்கம் 1) கூட்ட நெரிசலில் ஈசியா டீக்கெட்,தர முடியும்.அரசாங்க பஸ்லயும்,இதை,ட்ரை பண்ணலாம்.வேலை,வாய்ப்பு அதிகரிக்கும்


=================


11 10 வருசங்களுக்கு முன் உங்கள் மாத வருமானம் எவ்வளவு?இப்போ எவ்வளவு?எவ்வளவு முன்னேற்றம் என்பதை உணர தங்கத்தின் அன்றைய ,இன்றைய விலையோடு ஒப்பீடு செய்க!

========================


12 உங்கள் செலவைக்குறைக்க எளிய வழி என்ன செலவு செய்தாலும் அதை நோட்டில் எழுதி வைப்பதே.தினமும் இரவில் அதை பார்க்கும்போது தேவையில்லாத செலவு எவ்வளவு செய்திருக்கிறோம் என்பது தெரிய வரும்


===============



13 தமிழகத்தில் பெரும்பாலான பஸ்களில் பெண்களுக்கு முன்புறம் சீட் ஒதுக்கப்படுகிறது.காரணம் ஒரு எதிர்பாராத விபத்து நடக்கும்போது சமயோசித புத்தி ,தப்பிக்கும் லாவகம்,வலி தாங்கு திறன் இவை அனைத்தும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் என்பதால்


===============


14 தமிழ்நாட்டில் தொழில் ,வியாபாரம் ,பணப்புழக்காட்டம் உள்ள நகரங்கள்
1 கோவை 2 சென்னை 3 மதுரை 4 திருச்சி 5 திருப்பூர் 6 ஈரோடு கேரளா 1 திருவனந்தபுரம் 2 கொச்சின் ( எர்ணாக்குளம்) 3 கோட்டயம் 4 திருச்சூர் 5 கோழிக்கோடு


==================



15 தமிழ்நாட்டிலேயே தீபாவளி போனஸ் அதிகமாக தரப்படுவது திருப்பூரில் தான்.அனைத்து ஊர்களிலும் ஒரு மாச சம்பளம் .திருப்பூரில் மட்டும் 2 மாச சம்பளம் / % டர்ன் ஓவர்



===============


16 ஒரு பொண்ணுக்கு ஒரு பையனை உண்மையா மனதளவில ரொம்ப பிடிச்சி
அந்த பையன் தன்னவிட அந்தஸ்துல கூடுனவனா இருந்தா அந்த பொண்ணு என்ன பண்ணனும்? வளைச்சுப்போட்ரனும்.நடிகைங்க தொழில் அதிபரை அப்டித்தானே வலை வீசிப்பிடிக்கறாங்க?


================



17 கட்டிலில் ,மெத்தையில் படுப்பது மனைவி மடியில் படுத்திருப்பது"போல சுகமானது.
ஆனால் வெறும்"தரையில் பாய்"போட்டு"படுப்பது அம்மா"மடியில் படுத்திருப்பது போல இதமானது.பூமாதேவிக்கு நெருக்கமானது போல் உணர்வு தரும்.ஆரோக்யத்துக்கும் நல்லது


===================



18 சுங்க வரியை எதிர்த்து டோல்கேட்டை உடைப்பது (உளுந்தூர்ப்பேட்டை)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து தேசியக்கொடியை எரிப்பது இவை இரண்டுமே மெச்சூரிட்டி இல்லாமல் உணர்ச்சிவசப்படுதலே!


==================



19 தயிர் சிலுப்புவது (வெண்ணெய்க்காக கடைதல்)இப்போ கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது.உள்ளங்கைகளுக்கு சிறந்த பயிற்சி.தயிரிலிருந்து வெண்ணெய் திரண்டு வருவது கண்கொள்ளா காட்சி


================



20 திருமுருக கிருபானந்த"வாரியாரின்"மாணவி எளிமையின் சிகரம் ஆன்கமீகப்பேச்சாளர் நேசமங்கையர்க்கரசி மினிமம் 40 பவுன் நகை போடாம மேடை ஏர்றதே இல்ல போல


================


0 comments: