1 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் கட்டிப்புரண்டு சண்டை: செய்தி #பிசிக்ஸ் லெக்சரர்ஸ்க்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகல போல
==============
2 காவிரி பிரச்சினையில் தமிழக தலைவர்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு - மு.க.ஸ்டாலின் # தலைவரே!யார் யார் அந்த தமிழக"தலைவர்கள்?
ஹிஹி,என்னை சந்திக்க மறுப்புன்னா நல்லாருக்குமா?அதான்"சுத்தி வளைச்சு சொன்னேன்
================
3 சூரியன் மறையும் போது சிவப்பாகவும்...உதிக்கும் பொழுது காவியாவும் இருக்கும் - மோடி # கம்யூனிஸ்ட் ,திமுக கூட கூட்டணி னு அர்த்தமா?
============
4 கூட்டணியில் இருந்துவிட்டு, பா.ஜ.,வை மதவாத கட்சி என, தி.மு.க., சொல்வதை, மக்கள் நம்ப மாட்டார்கள்.-பொன்.ராதாகிருஷ்ணன்: # அரசியல்வாதின்னாலே இன்னைக்கு ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு நு ஜனங்களுக்கு தெரியாதா? என்ன?
==================
5 முதல்வர் பழனிசாமி தனியாக சென்றாலோ, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனியாக சென்றாலோ சந்திக்கும் பிரதமர், முக்கிய பிரச்னையான காவிரி விவகாரம் தொடர்பாக சந்திக்க மறுப்பது ஏன்?- ஸ்டாலின்: # காவிரி பிரச்சனைல்;அ தமிழ்நாட்டுக்கு சாதகமா ஏதாவது செஞ்சா கர்நாடகா ல ஓட்டு போய்டுமே? எலக்சன் வரப்போகுது வேற
=========================
6 : நான் தான், கருணாநிதியின் தத்துப்பிள்ளை. ஆனால், இன்று நான், தி.மு.க.,வால் பயன்படுத்தப்பட்டு, துாக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை. - டி.ராஜேந்தர் # பகுத்தறிவுப்பாசறைக்கே வேப்பிலை அடிக்கறாரே?அங்கே அழகிரி அண்ணன் நிஜமான வாரிசே கமுக்கமா இருக்காரில்லா? அந்த கூப்பிலே போய் உக்காருங்கோ
===================
7 கர்நாடகாவில், பா.ஜ.,வினர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, முடிந்தவரை கொள்ளையடித்து விட்டு, தற்போது, பாதயாத்திரை செல்வதை மக்கள் நம்ப மாட்டார்கள் - கர்நாடக முதல்வர் சித்தராமையா: # கொள்ளை அடிச்சவன் ஃபிளைட் புடிச்சு ஃபாரீன் போறதுதானே பழக்கம், யாராவ்து பாதயாத்திரை போய் மாட்டுவாங்களா?
================
8 நல்ல அரசுகள் இருந்திருந்தால், அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையே, எனக்கு வந்திருக்காது.- கமல் # கலைஞரும் , ஜெ வும் ஆக்டிவா இருக்கும்போதே ஏன் அரசியலுக்கு தில்லா வர்லை?னு தான் எங்க கேள்வி
===========================
9 வாரிசு அரசியலை, ஸ்டாலின் வளர்க்கிறார் - ராமராஜன் # முதல்வர் கனவை வளர்த்தார் , இப்போதைக்கு பலிக்கற மாதிரி தெரியல , அதனால மகனைக்களம் இறக்கறார். என்ன தப்பு ?
=================
10 வருமான வரியை முறையாக செலுத்துவதில், இந்திய அளவில், தமிழகம் நான்காம் இடத்தை வகிக்கிறது - புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சுசில்குமார் #முறையா வரி கட்டுவோம், தமிழன்னா நேர்மைன்னு உலகுக்கு காட்டுவோம்
==================
11 என்னைப் பொறுத்தவரை, கமல் தெளிவாக இருக்கிறார்; ஆனால், ரஜினி குழப்பத்தில் உள்ளார்.- .மகளிர் காங்., பொதுச் செயலர் நக்மா # ஆனா ஜனங்க தெளிவா இருக்காங்க , நீங்கதான்( சினிமாக்காரங்க) குழம்பிக்கறீங்க
================
12 பா.ஜ., தான், ரஜினியை இயக்குகிறதா என்பது உறுதியாகவில்லை. ஆனால், பா.ஜ.,வுடன் அவர் கூட்டணி வைக்கக்கூடாது; அப்படி நடந்தால், பா.ஜ., என்ற ஓட்டை கப்பலுடன் சேர்ந்து, ரஜினியும் மூழ்கி விடுவார். -நக்மா # சாபம் விடறீங்களா? நல்லெண்னத்தில் ரஜினிக்கு எச்சரிக்கை விடறீங்களா?
====================
13 ரஜினி தனித்துப் போட்டியிட வேண்டும் அல்லது காங்., கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும்- நக்மா # நல்லவேளை இதுவே என் கட்டளை , என் கட்டளையே சாசனம்னுன் சொல்லலை
=================
14 , அ.தி.மு.க.,வில் வாரிசு அரசியல் கிடையாது; இது தொண்டர்கள் கட்சி. யார் வேண்டுமானாலும், கட்சியை நிர்வகிக்கலாம்.-ராமராஜன் $ அப்டியா? அப்போ நீங்க 3 வருசம் நிர்வகிங்க பார்ப்போம்
=============================
1 5 2010ம் ஆண்டே, தி.மு.க.,வை மக்கள் புறக்கணித்து விட்டனர்- ராமராஜன் # 20 வருசமா பாஜகவைப்[புறக்கணித்த திரிபுரா மக்கள் இப்போ ஆதரிக்கலையா? மேகாலயா மக்கள் காங்கிரசை ஆதரிக்கலையா? மாற்றம் ஒன்றே மாறாதது
=========================
16 முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, . பதவியை விட்டு விலகும் போது, போக்குவரத்து துறையில், 5,300 கோடி ரூபாய் கடனை விட்டுச் சென்றார்; 60 ஆயிரம் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, 1,300 கோடி ரூபாய் நிலுவை தொகையை வைத்துவிட்டுச் சென்றார். அவர் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கியது போல், பொய்யான புள்ளி விபரங்களை கூறுகின்றனர். - தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் # மொத்தத்துல தமிழகத்தை யார் ஆண்டாலும் நட்டக்கணக்குதான் காண்பிப்பீங்க?
==================
17 மக்கள் பிரச்னைகளை, தமிழக அரசு தீர்ப்பதில்லை - இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் # அவங்க பிரச்சனையே பெருசா இருக்கு, மக்கள் பிரச்சனையை கவனிக்க ஏது நேரம்?
=================
18 .' தமிழ் உணர்வுகளுக்கும், தமிழர் உணர்வுகளுக்கும் மரியாதை தர மறுக்கும் கமலை, வீட்டிற்கே சென்று சீமான் சந்தித்ததில், எனக்கு உடன்பாடில்லை - நாம் தமிழர்' கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, '# இப்போ என்ன்? கருத்து வேறுபாடு காரணமா நீங்க தனிக்கட்சி தொடங்கப்போறீங்களா? இன்னும் எத்தனை புதுக்கட்சிகளைத்தான் ஜனங்க பாக்கப்போறாங்களோ?
================
19 .முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், பழனியப்பனும், பிள்ளை பிடிப்பவர்கள் போல், ஆளும் கட்சி, எம்.எல்.ஏ.,க்களைப் பிடிக்க அலைகின்றனர். - தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, # உங்களுக்கு ஏன் ஷாக் அடிக்குது?
==============
20 ஊழல் புரிந்தவர்கள், கொள்ளையடித்து, நாட்டை விட்டு ஓடிவிட்டனர். அவர்கள், நாட்டை விட்டு தப்பி ஓடும் வரை, எல்லாம் தெரிந்தும் இந்த அரசு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.-.காங்., மூத்த தலைவர் ஆனந்த் சர்மா # நாட்டை விட்டு ஓடின ஆட்கள் எல்லாம் கொள்ளை அடித்தது காங் ஆட்சியில் , மாட்டியது மோடி ஆட்சியில் , அதை சொல்ல மறந்துட்டீங்களே?
===================
0 comments:
Post a Comment