1 மேடம் ,உங்களுக்கு சனி திசை நடக்கறதால ப்ளூ கலர் கல் வெச்ச மோதிரம் போட்டா நல்லது
ஓஹோ,லைட் ப்ளூவா? டார்க் ப்ளூவா?ஸ்கை ப்ளூவா?
சனி உக்கிரமா இருக்கறப்ப டார்க் ப்ளூ ,மிதமா இருக்கறப்ப லைட் ப்ளூ ,ப்ளைட் ல போறப்ப ஸ்கை ப்ளூ
============
2 ஆன்மீகத்தில் பற்று இருக்கற ஆளைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்
மிஸ் ,குழப்பாதீங்க,ஆன்மீகத்துல பற்று இருக்கறவன் ஆசிரமத்துல சேர்ந்து பல்க்கா குஜிலிங்களை உஷார் பண்ற சீஷன் இது.அவன் எப்டி கல்யாணம் பண்ணுவான்?
============
3 என் வீட்ல
ஒரு நாய்குட்டி வளர்த்தேன்
நண்பர் ஒருத்தர்
நாய் வளர்க்க கூடாதுனு சொன்ன ஒரே காரணத்தால்
அத குடுத்துட்டேன்.
நாய் தானே வளர்க்கக்கூடாதுன்னாரு?நாய்க்குட்டியை வளர்க்கக்கூடாதுனு சொல்லலையே?
===============
4 வாங்க சார்,மலைக்கு போலாமா?
இப்ப தானே வந்திருக்கேன்,கொஞ்சம் பொறுத்து மலை ஏறலாம்
ஏன்,இப்பவே ஏறினா?
வந்ததுமே மலை ஏறினா இந்த சமூகம் என்னை வந்தேறி னு சொல்லீட்டா?
==============
5 தலைவரே!தேசியகீதம்,நாட்டுப்புறப்பாட்டு இந்த 2 க்கும் கூட உங்களுக்கு வித்யாசம் தெரியலையா?
ஏன் தெரியாம?தேசியகீதம் சேரன் இயக்கிய படம் ,நா பு பாட்டு குஷ்பூ நடிச்ச படம்
==============
6 டாக்டர் ,என் புருசன் எப்போ பாரு கேசரி செஞ்சு குடுனு நச்சரிச்ட்டே இருக்காரு,அவரை டைவர்ட்"பண்ண ஐடியா குடுங்க.
அது கேசரி இல்ல ,கலர் உப்புமா னு அடிக்கடி சொல்லி அவர் மனசுல பதிய வைங்க,போதும்
================
7 ஜெ மர்ம மரணம் சம்பந்தமா அப்போலோ டாக்டரை சிபிஐ விசாரணை பண்றதை விட தமிழிசை மேடம் விசாரணை பண்றதுதான்"சரி
ஏன்?
டாக்டர்ட்ட எந்த உண்மையையும் மறைக்கக்கூடாதுனு டாக்டருக்கு தெரிஞ்சிருக்குமில்ல?
===========
8 தலைவரே!சோடா பாட்டில் வீசுவோம் என வன்முறையை தூண்டும் விதத்தில் ஜீயர் பேசி இருக்காரே?
அதானே?சரக்கு பாட்டில்,சைடு டிஷ் எல்லாத்தையும் வீசச்சொல்லுங்க,ஒரு கை பாத்துடுவோம்
=============
9 டைரக்டர் சார் ,படம் ரிலீஸ் ஆகற வரை பட ஸ்டில்ஸ் வெளில வராம பாத்துக்குங்க,யாரோ நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்க
பட ப்ரமோ க்காக நான்தான் ரிலீஸ் பண்ணேன் ,100 கோடி ப்ராஜெக்ட், எங்களுக்குத்தெரியாதா?
===============
10 தலைவரே! நித்யானந்தா மடத்தை முற்றுகை இடுவேன்னு அறிவிச்சு இருக்கீங்களே?எதுக்கு?
பூ பறிக்கற நோம்பில கூட இத்தன பொண்ணுங்களை ஒரே"இடத்துல பாக்க முடியாதுய்யா,சும்மா சைட் அடிக்கத்தான்
================
11 தலைவரே!உங்களுக்கு பிடிக்காத"பழமொழி எது?
தாத்தா சொத்து பேரனுக்குதான்
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது
===============
12 டாக்டர்,குண்டா இருந்தா கேவலமா ?
அது கேவலமில்லை,மேரேஜ்க்கு முன்பே உண்டாகி இருந்தாதான்"கேவலம்
==============
13 தலைவரே!வேர்க்காமல் விளையாட முடியாதுன்னீங்க
ஆமா
செஸ் ,கேரம் ,அஞ்சாங்கல் ,ஆடுபுலி ஆட்டம் ,பரமபதம்,தாயம், லூடோ இதெல்லாம் நீங்க ஆடுனதே இல்லையா?
===============
14 குருவே!புரட்சி mode லேயே இருப்பவர்கள் மெதுமெதுவாக நகைச்சுவை உணர்வை இழக்கிறார்கள்.
அவங்க இழந்தா என்ன?நமக்கு செம எண்ட்டர்டெய்ன்மெண்ட்டா இருக்கில்ல?வைகோ,சீமான்
================
15 வரலாறு மிஸ் வனஜா − சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை வருடங்களுக்கு முந்தையது?
7 வருசத்துக்கு முந்தையது டீச்சர்
என்னடா உளர்றே?
அமலாபால் நடிச்ச சிந்து சமவெளி 2011 ல தானே ரிலீஸ் ஆச்சு?
==============
16 தலைவரே!ஏத்துன பஸ் கட்டணத்தை குறைச்ட்டீங்களாமே?பிரமாதம்
நன்றி
எவ்ளோ ஏத்துனீங்க?
கிட்டத்தட்ட டபுள் ,அல்லது 90%
சரி,இப்போ எவ்ளோ குறைச்சீங்க?
5 பைசா to 10 பைசா ஒரு கிமீ க்கு
ஓட்டு கேட்டு வீட்டு வாசப்படி ஏறி வருவீங்க இல்ல?அப்போ இருக்கு கச்சேரி
================
17 குருவே!கடல் நீரில் எடுக்கப்படும் உப்பு சைவமா ?
கடலில் உயிரினங்கள் இறந்து போகாதா.. ?
அப்போ உப்பு போட்டு உண்ணும் உணவு சைவமா / அசைவமா ?
அப்டி பாத்தா ஆத்துல,குளத்துல,ஏரில கூடத்தான் மீன் சாகுது,அதுக்காக அந்தத்தண்ணி சைவமா?அசைவமா?னு கேட்க முடியுமா?
===============
18 சார்,
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி னு விளம்பரம் பாத்தேன்,எந்தெந்த குடும்பங்கள அதை கொண்டாடுது?
புரொடியூசர் குடும்பம் ,டைரக்டர் குடும்பம்,ஹீரோ,ஹீரோயின் குடும்பம் இப்டி
===============
19 குருவே!மழையை ரசிக்க மெனக்கெட தேவையில்லை......
நனைந்தாலே போதும்.கறாங்களே,நனைஞ்சா காய்ச்சல் வராதா?
நாம நனையக்கூடாது,நனைஞ்ச பொண்ணுங்களை வேடிக்கை பார்க்கனும்
==============
20 தலைவரே!நீங்க யாருக்காகப்போராடினீங்களோ அவங்க அதை உணரவே இல்லையாமே?
ஆமா,என் மனைவிகள் ,என் மகன்கள் ,என் மகள்கள் ,பேரன்கள் ,பேத்திகள் இவங்க யாரும் புரிஞ்சுக்கலை
===================
0 comments:
Post a Comment