1 தலைவரே!நீங்க ஆட்சிக்கு வந்ததும் சிஸ்டத்தையே மாத்தி அமைக்கப்போறீங்களாமே?
ஆமா
என்ன பண்ணுவீங்க?
முதல்ல இந்த வாடகைகுடுக்கற சிஸ்டத்தை மாத்தி 10 வருசம் குடி இருந்தா அந்த வீடு அவங்களுக்கே சொந்தம்னு சட்டம் கொண்டாரப்போறேன்
=============
2 தலைவரே!இந்த ஜீயர் உங்களை விட,பெரிய டகால்டியா இருப்பார்"போலயே?
உடன்"பிறப்பே! வல்லவனுக்கு வல்லவன்"வையகத்தில்"உண்டு,சிம்புவை விட பிரபு தேவா,பிரபுதேவாவைவிட விகனேஷ் சிவன்"டைரக்சன் ல"டாப்னு நிரூபிக்கலையா?
============
3 சார்,வாட்சப் க்ரூப்,1 ஆரம்பிச்சு பொண்ணுங்களை,மட்டும்"மெம்பரா சேர்த்து கண்ணியமா நடத்துனீங்களே?அதை,ஏன் கலைச்ட்டீங்க?
ரெண்டு ,மூணு பேரு கலைக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க,நாம மாட்டிக்கக்கூடாதுனு கலைச்ட்டேன்
==============
4 என் உண்ணாவிரதத்தால் உலக மக்களுக்கு கேடு விளைந்துவிடும் அதனால அதை கேன்சல்"பண்ணீட்டேன்
ஓஹோ,எந்த மாதிரி கெடுதல் வரும்?
அதான் கேன்சல் பண்ணியாச்சே,விடுங்கப்பா
==============
5 குருவே!மொத்தத்தையும் தெரிஞ்சுகிட்டு ஒருநாள் சாகத்தான் போறோம் அதுக்கு பேசாம தண்டசோறாவே இருப்போம்னு சிலர் சோம்பேறியா இருக்காங்களே?
அவங்க தேவலை,தான் ஒரு தண்டச்சோறுன்னே தெரியாம பலர் இருக்காங்க,அவங்களை என்ன பண்றது?கட்டாய உண்ணாவிரதம் இருக்க வெச்சுடலாமா?
================
6 மணிரத்னத்தோட புதுப்படம் இந்து முஸ்லீம் கலவரம் பற்றிய படமா இருக்கும்னு எப்டி யூகிக்கற?
தமிழ் போஸ்டர்ல ரத்தம் கலர் ,தெலுங்கு டைட்டில் ல நவாப் ,கூட்டிக்கழிச்சுப்பாரு
=============
7 டியர், நான் வர எப்டியும் இன்னும் 2 மணி நேரம் ஆகும்,பொறுத்துக்குங்க,வந்து தோசை சுட்டுத்தர்றேன்
பொறுமையா வா,2 மணி நேரம் கூட பசியை பொறுத்துக்காம இருக்க நான் என்ன கலைஞரா?ஜீயரா?சாமான்யன் தானே?பசி நமக்கு பழகுனதுதானே?
================
8 மேடம் ,உங்க வீட்டுக்காரர் உங்களை விரும்பறாரா?
ஆமா,ஏன்?
இல்ல,லைக்கறவிங்களைலாம் ப்ளாக்கலாம்னு இருக்கேன்னீங்களே,அப்போ அவரையும் பிளாக் பண்ணீடுவீங்களா?
===============
9 சார்,நகைச்சுவைங்கறது இரு பக்கமும் கூரான கத்தி மாதிரி னு சொல்றாங்களே ,அது நிஜமா?
தெரில,ஆனா நான்"ஜோக் சொன்னா மாத்திரம் பிளேடுங்கறாங்க
=================
10 சார் ,நீலகிரித்தைலம் வேணுமா?
இது டூப்ளிகேட்னு நினைக்கறேன்்
எப்டீ?
லைட் பச்சை கலர்ல இருக்கே?நீல கிரி ன்னா நீலக்கலர்ல தானே இருக்கும்?
===============
11 ஜட்ஜ் = ஜெ இட்லி சாப்பிட்டார்னு ஆளாளுக்கு சொன்னாங்க,ஆனா யாருமே அதை பாத்ததில்லையாமே?
சசிகலா = இட்லி யைத்தான் அக்கா சாப்ட்டுட்டாங்களே?எப்டி பார்க்க முடியும்?
============
12 டாக்டர், பகல் தூக்கம்
உடலுக்கு கேடு
மனசுக்கு ரொம்ப நல்லது .
னு சிலர் சொல்றாங்களே?அது நிஜமா?
இந்த மாதிரி தப்புத்தப்பா மனசு நினைக்கறது உடம்புக்கும் கேடு,மனசுக்கும் கேடு
==============
13 பாக்ஸ்க்கு டிக்கெட் 1 குடுங்க.
சாரி சார். சிங்கிளா வந்தா கிடையாது.கப்பிளா வந்தாதான் தருவோம்
நீங்க 1 குடுங்க,உள்ளே போய் ஜோடி தேடிக்கறேன்
==============
14 நீங்க விளையாண்ட"பல கபடி மேட்ச் பாரத்துட்டன்,ஆனா ஒரு மேட்ச்ல கூட நீங்க ரைடு போகவே இல்லையே?
நான் ஒரு பை பாஸ் ரைடர்"பஸ் டிரைவர் பையன்ங்க.பை பாஸ்"ரோட்ல தான் ரைடு போவேன்
===============
15 குருவே!தினமும் யோகா செய்தால் மருத்துவரே அவசியமில்லைனு"சொன்னீங்க,இப்போ ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?
தெரியாத்தனமா என்"பதஞ்சலி"ப்ராடக்ட்ஸை நானே சாப்ட்டுட்டேன்
====================
16 TNPSC க்ரூப் 4 எக்சாம் எழுதி இருக்கேன்.செலக்ட் ஆகிட்டா அக்கடா னு இருப்பேன்
செலக்ட் ஆகலைன்னா?
பக்கோடா கடை போட்ர வேண்டியதுதான்,மோடியே சொல்லிட்டாரு
==================
17 பட்டாணி சுண்டல் சாப்ட வந்து பஞ்சத்துக்கு ரவுடியா இருக்கறது வேற
பொறக்கறப்வே ரவுடியா பொறக்கறது வேற,
நான் பொறக்கறப்பவே டான்
ஓஹோ,அப்போ எந்தக்கேள்வி"கேட்டாலும் டான் டான் னு பதில் சொல்வீங்க?
================
18 தமிழ்ல எனக்குப்பிடிக்காத,ஒரே"வார்த்தை மன்னிப்பு
முதல்ல "மன்னிப்பு" தமிழ் வார்த்தையே இல்லையாமே? TNPSC எக்சாம் எழுதுனவங்க சொன்னாங்க
================
19 சார்,உங்க அடுத்த பட டைட்டில் என்ன?
ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல?"
இன்னைக்கு தலைக்கு குளிச்சேன் சார்,அதான்,சார் ,நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல?
யோவ்,இப்ப தானே சொன்னேன்?
===================
20 குருவே!பொண்ணுங்க கண் அடிக்கறதால பசங்களுக்கு எதுனா பாதிப்பு வருமா?
இப்ப வராது,எதிர்காலத்துல வரும்
எப்டி?
பர்சை அடிச்ட்டு போறப்ப
=================
0 comments:
Post a Comment