1 தலைவரே!இளவட்டக்கல்லை உங்களால ஏன் தூக்க முடியல?
தெரில.நாளாவட்டத்துல சரி ஆகிடும்னு நினைக்கறேன்
==============
2 தலைவரே!திருச்சி முக்கொம்பு அணை பார்க்கில் இருப்பது"போல் ஒவ்வொரு ஊரிலும் தாமரைக்குளம் அமைக்கனும்;
எதுக்கு?
தாமரை தமிழகத்தில் மலர்ந்து விட்டதுனு ஜம்பமா சொல்லிக்கலாமே
==================
3 வைட்டமின் A, B, C, ஃபோலிக் அமிலம், நியாசின் என அனைத்து வைட்டமின்களும் நிறைந்தது சப்போட்டா பழம்.
டாக்டர்.அப்போ தினமும் நாம சாப்பிடனும் சப்போட்டா,
சாப்பிட்ட ஆரோக்ய வாழ்வுக்கு இருக்கும் சப்போர்ட்டா
=============
4 மேடம்,டெய்லி"4 தடவை "
வாழணும்
செமையா வாழணும்"னு FB ல ஸ்டேட்டஸ்"போடறீங்களே?செமயா"வாழ்றதுன்னா என்ன?
FB ல டெய்லி 10 ஸ்டேட்டஸ் போடறதுதான்
=---------------
5 மேடம்.நீங்க போட்டிருக்கற"டாட்டூ"டெம்ப்ரவரியா?பர்மணெண்ட்டா?
நடிகை − நான்"கட்ற"புருசன்"வேணா"டெம்ப்ரவரியா இருக்கலாம்,ஆனா"நான்"போட்டுக்கற"டாட்டூ எல்லாமே"பர்மணெண்ட்தான்
================
6 சார்,நடிகர் சங்க நிதி திரட்ட பாரீன் போனீங்களே?கலைநிகழ்ச்சி வசூல் எவ்ளோ?
10 லட்சம்
;ஏன் சோகமா இருக்கீங்க?;
கலைவிழாவுக்கு எல்லாரையும் கூட்டிட்டுப்போன பிளைட் சார்ஜ் "ஹோட்டல் பில் டோட்டலா 25 லட்சம் ஆகிடுச்சு
=============
7 குருவே!மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மையா?
இல்ல ,அது சாபம் ,மச்சினி அமைவது தான் வரம்
===========
8 மாப்ளை,பொண்ணுக்கு"கொஞ்சம் விளையாட்டு"புத்தி,நீங்க தான் அட்ஜஸ் பண்ணிக்கனும்
ஓஹோ,என்ன செய்வாப்டி?
ஆன் லைன்ல பசங்களோட லூடோ கேம் விளையாடுவாப்டி
===============
9 சார்.கடை வாசல்ல இங்கே விளையாட்டு சம்பந்தப்பட்ட"எல்லாப்பொருட்களும் கிடைக்கும்னு போட்டிருக்கீங்க?
ஆமா மேடம்
அப்போ ஸ்போர்ட்ஸ் ப்ரா கேட்டா ஏன் முறைக்கறீங்க?
================
10 குருவே!அமாவாசையா இருக்கறப்ப அசைவம் சாப்பிடலாமா?
சாப்பிடக்கூடாது,தேங்காய் தான் சாப்பிடனும்
ஏன்?
நாகராஜசோழன் MLA வா ஆன பின் என்ன"வேணா சாப்பிடலாம்,அதான் கெத்து
===============
11 நார்ச்சத்தானது உருளைக்கிழங்கின் தோலில் இருக்கிறது. அதனால் உருளைக்கிழங்கின் தோலை நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்
நம்ப மாட்டோம்
;ஏன்?
ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் சொன்னா தான் நம்புவோம்.அவருக்கு தான் தோல் பற்றி சரியா தெரியும்
===================
12 டாக்டர் !ரெஜினோமோட்டா வை நீங்க ஏத்துக்க மாட்டீங்களா?ஏன்?
த்ரிஷா மாதிரி லீனா இருக்கற ரெஜினா வ மோட்டா னு அபாண்டமா சொன்னா எப்டி ஏத்துக்க?
==================
13 சார்,உங்க முத சிறுகதையை அண்டர் க்ரவுண்ட்ல உக்காந்து எழுதுனீங்க
ஆமா
2 து 3 வது கதைகளை எல்லாம் முதல் மாடி ,2 வது மாடில உக்காந்து ஏன் எழுதுனீங்க?
அப்ப தான் ஸ்டெப் பை ஸ்டெப்"வளர்ந்து வரும் எழுத்தாளன்னு பேர் எடுக்க முடியும்?
=================
14 சார் ,உங்க"கரண்ட் லவ் பத்தி சொல்லுங்க
பீஸ்"போய்டுச்சுங்க
=================
15 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜோக்"பால்ஸ் போலவே"கவிதை பால்ஸ்"கட்டுரை பால்ஸ் ,சிறுகதை பால்ஸ் உருவாக்கி சுற்றுலாத்துறையை வளப்படுத்துவோம் என உறுதி கூறுகிறோம்
==================
16 செக்கோஸ்லோவாக்கியா ...... கூகுள் பார்க்காம English spelling சொல்லு பார்க்கலாம்.
சாரி"டீச்சர் ,16 வயசு ஆகறவரை ஏ சப்ஜெக்ட் பேச மாட்டேன்
==================
17 மாப்ள,பொண்ணுக்கு மாச சம்பளம் ,3 லட்சமாம்.சம்பந்தம் பேசிடலாம்னா ஏன்,பம்மறீங்க?
ட்விட்டர்ல ,Fb ல 50,000 + பாலோயர்சாம்,அதான்"யோசிக்கறேன்,கல்யாண பந்தி செலவே 50 லட்சம் ஆகிடும்
==================
18 தலைவரே!மகளிர் அணித்தலைவி இந்துஜா வை பாராட்டி ,அவர் அழகை வர்ணிச்சு சம்பந்தமே இல்லாம மேடைல பேசறீங்களே?ஏன்?
இந்து க்கு எதிரா பேசினேன்னு யாராவது கேள்வி கேட்டா சமாளிக்கத்தான்
==================
19 டாக்டர் ,அக்குளில் வெங்காயம் வைத்தால் காய்ச்சல்வரும்னு சொல்றாங்களே,அது நிஜமா?
ஆமா
சின்ன வெங்காயம் வைக்கனுமா?பெரிய வெங்காயமா?
காய்ச்சல் சின்னதா வரனுமா?பெருசா வரனுமா?
=================
20 குருவே!ஆம்பள சொன்னா பொண்ணுங்க
கேட்க மாட்டாங்களாமே?பெண்ணியம் தலை தூக்குமாமே?நிஜமா?
சிஷ்யா!அவங்க அப்பா சொன்னா கேட்பாங்க.காலம் பூரா கூடவே இருந்து காப்பாத்தற புருசன் சொன்னா தான் கேட்கமாட்டாங்க,மத்தபடி நல்லவங்கதான்
==============
0 comments:
Post a Comment