1 டியர்,ஆம்பளை அழலாமா?
அட போம்மா நம்ம நாட்ல முதல்வர்,துணை முதல்வர்,பிரதமர்னு ஆளாளுக்கு அழுது காரியம் சாதிச்சுக்கல?
=========
2 2மாதம் முன்Walking போகும் போது 1 நாய்க்கு பிஸ்கெட் கொடுத்தேன்.அது என்னைப்பாத்து ஏதோ சொல்ல வந்தது
Fb ல இதை பதிவா போட்ராதீங்கனு சொல்ல வந்ததோ?
===========
3 சார்,உங்கள் லவ்வர் க்கு ஸ்பெஷல் ரிங்டோன் வச்சிருக்கிங்களா ?
இல்லீங்க,லவ்வரை மட்டும்தான் வெச்சிருக்கேன்
===========
4 நேத்து நைட் 11 மணிக்கு நான் தூங்குனபின் எங்கே போனீங்க?
நான் எங்கயும் போகலையே?
ரீசன்ட் விசிட்னு 5 பொண்ணுங்க பேர் ட்விட்டர்ல காட்டுச்சே?
=========
5 டியர்,எனக்காக ஜன்னல் ஓர சீட் விட்டுக்கொடுத்துட்டீங்களே?
அவ்ளோ அன்பா?
போறவன் வர்றவன் எல்லாம் உரசாம பாதுகாக்கனுமில்ல?
==========
6 மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் - வைகோ #
தலைவா !விஜயகாந்த் தையும் அப்டிதானே சொன்னீங்க?
அது போன மாசம்.இது இந்த மாசம்
=========
7 மாமா,பொண்ணு ட்விட்டர்ல இருக்குனு கேள்விப்பட்டேன்.ஹேண்டில்நேம் என்ன?
நீ மூடு
வாட்?
அட ஹேண்டில்நேமே அதான் மாப்ள
=========
8 என்னோட மாஜிக்காதலிகள் அழும்போது நானும் அழுதுடுவேன்
ஓஹோ,எத்தன?
உங்க வீட்ல காலண்டர் எத்தனை?
வருசாவருசம் 1
அதே பார்முலா
=========
9 சார்,நகரத்தை விட்டு காட்டுக்குள்ளே போக ஏன் முடிவு எடுத்தீங்க?
நான் எப்போ அப்டி எடுத்தேன்?
இனி நா போற பாதை சிங்க பாதைன்னீங்களே?
=============
10 டாக்டர்,எங்கம்மா எனக்கு 10 தோசைதான் சுட்டுத்தந்தாங்க
அடடா,உங்களை முதல்ல சுட்டுப்போட்டிருந்தா அந்த 10 தோசையை உங்க குடும்பமே சாப்ட்டிருக்கும்
=======
11 தலைவரே!கே பாக்யராஜ்,விஜய்சேதுபதி − ரசிகரா நீங்க?
ஏன்?
"வேட்டியை மடிச்சுக்கட்டு"ம்போது "நானும் ரவுடிதான்" னு சொன்னீங்களே?
===========
12 நிறைய பேர அன்பாலோ பண்ணிடனும் போல... டி.எல் பூரா ஒரே கெட்ட வார்த்தையா கிடக்குது
ஒரே ஒரு கெட்ட வார்த்தைதானே இருக்கு,அதுக்கு ஒரு ஆளை அன் பாலோ பண்ணா போதாதா?
===========
13 பசங்க எல்லாம் டிஎல்ல ஏன் கெட்ட வார்த்தை எழுதறாங்க னு கண்டுபிடிச்ட்டேன்
ஏன்?
நல்ல வார்த்தை எழுதும்போது ஒரு பொண்ணும் கண்டுக்கல,இப்போ பாருங்க
===========
14 மேடம்.நிறை குடம் தளும்புமா?குறை குடம் தளும்புமா?
தெரிலங்க.போரிங் பைப்ல தண்ணி அடிச்சு குடத்தை தூக்கீட்டு வர்ற என் புருசனத்தான் கேட்கனும்
===========
15 டிக்கெட் எப்டி புக் பண்றது?னு ஆன் லைன் ல கோச்சிங் க்ளாஸ் நடத்துன குற்றத்துக்காக உங்களை கைது பண்றோம்.
இன்ஸ்பெக்டர்.அது ட்ரெயின் TKT
============
16 மேலதிகாரி தன்னிலும் கீழ் சாதி என்றறிந்தால் வேலையையும் விட்டுடுவானுகளா?
காதல்,கல்யாணம் மட்டுமே தடை.கள்ளக்காதல்,பணி,இன்ன பிற க்களுக்கு இல்ல
==============
17 டீச்சர்,பொறுக்கிக்கு சின்ன ரு வருமா?பெரிய று வருமா?
சாதா பொறுக்கி ,பொம்பள பொறுக்கி எல்லா பொறுக்கிகளுக்கும் று தான் வரும்
============
18 சார்,பெண்ணுக்கு வைர நெக்லெஸ் போல் ஆணுக்கு ஐ போன் பத்து ன்னு சொல்லலாமா?
நோ நோ ஐ போன் 1 இருந்தாலே திருப்திப்பட்டுக்குவான்.10 எதுக்கு?
==============
19 மிஸ்!அடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்?
அடிக்கடி காதலியையே மாத்திடற ஆம்பளைங்க,கூட்டணியை மாத்தற கட்சிங்களை முதல்ல கேள்வி கேளுங்க
=============
20 ஊட்டி ப்ளவர் "ஷோ ல உலகத்துல இருக்கற எல்லா பூக்களும் காணக்கிடைக்கும்
நான் நம்ப மாட்டேன்
ஏன்?
கருணை மலர் ,பனிமலர் இன்ன பிற மலர்களை காணமே?
===============
0 comments:
Post a Comment