நாட்ல நடக்கற பரபரப்பான உண்மைச்சம்பவத்தை வெற்றிகரமான திரைப்படமா தருவதில் விற்பன்னர்கள் ஆர் கே செல்வமணி ., ஏ ஆர் முருகதாஸ் , கார் வண்ணன் , ஆபாவாணன் , அவர்கள் லிஸ்ட்ல இப்போ கோபி நாயினாரும் சேர்ந்துட்டார் , பிரமாதமான கமர்ஷியல் , சோசியல் அவார்னெஸ் டேலண்ட்டட் டைரக்டர். எ வார்ம் வெல்கம் சார்
இந்தப்படத்தோட ட்ரெய்லர் பார்த்தப்ப இது ஒரு கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையைப்பற்றிய படம் , கே பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் மாதிரி இருக்கும், கமர்ஷியலா போகாது என நினைத்தேன், ஆனா கதை வேற , மேக்கிங் ஸ்டைல் அபாரம். ஆல் சென்ட்டர் ஹிட் ஆகும்
ஹீரோயின் ஒரு கலெக்டர் . அவர் மீது ஒரு என்கொயரி . அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா. ஃபிளாஸ்பேக்கில் என்ன பிரச்சனை , அவர் எப்படி அதை டீல் பண்றார் என்பதே பரபரப்பான திரைக்கதை
ஹீரோயினா லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா . எப்படி ரஜினியை கமர்ஷியலுக்காக பல டைரக்டர்கள் யூஸ் பண்ணிக்கிட்டாங்களோ அப்டி நயனை கிளாமரா பில்லா , வில்லு டைப் படங்கள்ல வேஸ்ட் பண்ணிட்டாங்க். இதுல அவர் காட்டும் கலெக்டர் கெத்து அபாரம்
அரசியல்வாதி கிட்டே வாக்குவாதம் செய்யும் போது , அதிகாரிகளுக்கு ஆணை இடும்போது , மக்களிடம் கன்வின்ஸ் செய்யும்போது அவர் பாடி லேங்குவேஜ் ஓபிஎஸ், பச்சோந்தி போல் டக் டக் என மாறுவது பிரமாதம்
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நடிப்பு பிரமாதம் . கிராமத்து ஆட்கள் உணர்வை கண் முன் நிறுத்துது.
ஆழ்குழாயில் குழந்தை விழுந்த பின் ஆக்சுவலா திரைக்கதை விழுந்திடும்னு யூகிச்சா அதுக்குப்பின் தான் திரைக்கதை பிரமாதபடுத்துது .
மீட்புப்பணிகளை , அதில் ஏற்படும் பிரச்சனைகளை அருமையா எடுத்திருக்காங்க . இந்த மீடியாக்கள் பண்ற அலம்பல்களை அப்பட்டமா காட்டி இருக்காங்க
நச் டயலாக்ஸ்
1 உத்யோகம்கறது ஜனங்களுக்கு நல்லது பண்ற கருவியா இருக்கனும்னு நினைக்கறேன் #Aramm ( நயன் கலெக்டர் கெத்து கெட்டப்)
2 டாக்டர்,தண்ணீர் தாகமே எடுக்காத அளவு சொட்டு மருந்து எதுனா இருந்தா குழந்தைக்கு போட்டு விடுங்க #Aramm
3 அதிகாரிங்க எந்த லட்சணத்துல வேலை செய்யறாங்கனு களத்துல இறங்கி உயர் அதிகாரிங்க பாத்தாதான் தெரியும் #Aramm
4 தரைல விழுந்த மீன் துள்ளிக்குதிப்பதைப்பார்க்கும் நீர் நிலை மீன் அது உயிரோட இருக்கறதா,இருக்கப்போறதா நினைச்சுக்கும் #Aramm
5 மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கனும்.ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது #Aram
6 உயிர்களோட மதிப்பு தெரியாத உயர் அதிகாரிங்க வாழ்ற இந்த நாடு நாசமாத்தான் போகப்போகுது #Aramm
7 இந்தியாவில் அலட்சியத்துக்கான விலையை நாம குடுத்துத்தான் ஆகனும் #Aramm
8 கிராம மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி,நகர மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி னு நீதியும் ,சட்டமும் இருக்கலாமா? #Aramm
9 அசாதாரணமான சூழ்நிலைல நீங்க சிக்கினா உங்க வில் பவர் உங்களை காப்பாற்றும் #Aramm
10 ஆழ்துளைக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்துட்டா அதைக்காப்பாத்த எந்த உபகரணமும் நம்ம கிட்ட இல்லை என்பது கசப்பான உண்மை #Aramm
11 ஆளுங்கட்சி ஆளை அரெஸ்ட் பண்ணினா அரசாங்கத்துக்குத்தான் அவமானம் #Aramm
12 நிலவுக்கு போய்ட்டு வந்தவரை விட ஆழ்துளைக்கிணறில் சிக்கியவரைக்காப்பாற்ற போகிறவர் முக்கியமானவர் #Aramm
13 என் வேலை அரசியல்வாதிகளை கன்வின்ஸ் பண்றதில்லை.மக்களுக்கு சர்வீஸ் பண்றது #Aramm
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 படம் போட்ட 20 நிமிஷத்துலயே இது ஒரு ஹிட் மூவி னு தெரிஞ்சிடுச்சு #Aramm
2 கத்தி பட கதை என்னுடையது என உரிமை கொண்டாடினாரே அவர்தான் இப்பட டைரக்டர்.சீன் பை சீன் படம் தெறிக்குது #Aram
3 நயன்தாரா வின் கெத்து நடிப்பு ,பரபரப்பான இசை ,ஒண்டர்புல் ஒளிப்பதிவு,,சமூக அக்கறையுடன் கூடிய நச் வசனங்கள் அடிபொலி #Aramm
4 ஆக்சிசன் சிலிண்டர் இருப்பு இல்லை மேட்டர் முன்னிலைப்படுத்தப்படுவதால் பாஜக பிரச்னை பண்ண வாய்ப்பு #Aramm
5 பாலம் இயக்கிய கார்வண்ணன் திரைக்கதை உத்தி ,Rk செல்வமணி ,ஏ ஆர் முருகதாசின் வியாபார டெக்னிக்,கே பாலச்சந்தரின் சமூக அக்கறை = கோபிநாயனார் #Aramm
6 ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம்தான் இக்கதை. இடைவேளை.பக்கா #Aramm
7 போலீசே கலவரம் ஏற்படுத்தும் சீன்.தில்லு.சென்சார்ல எப்டி விட்டாங்க? #Aramm
8 நயன் தாரா கலெக்டர் போஸ்ட்டை ரிசைன் பண்ணிட்டு அரசியல்ல குதிக்க முடிவெடுக்கற மாதிரி க்ளைமாக்ஸ்.கமல் கவனிக்க.2 வகைல யூஸ் பண்ணிக்கலாம் #Aramm
9 நல்ல வேளை.அறம் கதையை இயக்குனர் கோபி முருகதாஸ் கிட்டே சொல்லலை.அதையும் ஆட்டையைப்போட்டிருப்பாரு
சபாஷ் டைரக்டர்
1 இந்தப்படத்தின் கதை , திரைக்கதை , வசனங்கள் அபாரம். பிஜிஎம் கூட மிரட்டி இருக்கு , ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன் எல்லாம் அடிபொலி
2 நாயகியாக நயன் தாராவை தேர்ந்தெடுத்தது , பிரமாதமான நடிப்பை திரையில் கொண்டு வந்தது அருமை
3 பாஜக வை சீண்டிப்பார்க்கும் வசனங்கள் கலக்கல், தமிழிசை அக்கா, ஹெச் ராஜா வுக்கு பிபி எகிறும் , மகிழ்ச்சி
4 டூயட் சீனோ , லூஸ்தனமான காதல் காட்சிகளோ படத்தில் இல்லாதது ஆறுதல்
லாஜிக் மிஸ்டேக்ஸ் திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 ஒரு கலெக்டர் மிலிட்ரி ஆஃபீசர்களுக்கு எல்லாம் ஆர்டர் போட முடியுமா?
2 மீட்புப்பணியில் அந்தக்குழந்தை கயிற்றைப்பிடித்து மேலே வருகையில் கை வலிக்குது என பிடி நழுவ விடுது. கொஞ்ச நேரம் வலது கை , பின் இடது கை என மாற்றி பிடிக்க முடியாதா?
3 94 அடி பள்ளத்தில் விழும் சிறுமிக்கு7 காலில் ஃபிராக்சர் ஆகாதா?
4 சிறுவனை தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் விடுவது எப்படி? நேராகம் இ றக்குவதுதானே சேஃப்டி
சி.பி கமெண்ட் -அறம் − முதல்வன் படத்துக்குப்பின் பரபரப்பான திரைக்கதை.நயன் நடிப்பு கெத்து.விகடன் 46 ,ரேட்டிங் 3.25 / 5.மீடியாக்கள் கொண்டாடப்போகும் படம்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 46
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 4/5
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன், ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அட்டகாசம்
3 comments:
விமர்சனம் அருமை.
nera payana ulla vitta avan eppadi kolanthaya thukkuvan sir
this is your logical mistake
Post a Comment