`1 பட ரிலீஸ் அன்னைக்கு மொட்டை அடிச்சு பட டைட்டிலை தலைல பச்சை குத்திக்குவோம்
அட பொறுங்கப்பா , படம் ரிலீஸ் ஆனதும் செம மொட்டை அடிப்பாங்க
=================
2 பச்சோந்தி கிட்டே ஏன் கலர் மாறிட்டு இருக்கே?னு ஏன் கேட்கறே?
பச்சோந்தி அமைச்சர்கள் பதில் சொல்லலை, அட்லீஸ்ட் இதாவது சொல்லுதா பார்ப்போம்
===============
3 சார்,உங்க ஒவ்வொரு படத்துலயும் ஒரு காலை மட்டும் தூக்குன மாதிரி ஒரு போஸ் தர்றீங்களே,எதுக்கு?
"தலை"யை தூக்கி வெச்சு கொண்டாடினா பிடிக்காது
==================
4 கீரைகளின் ராஜானு பொன்னாங்கண்ணி கீரையை அழைப்பதை நான் ஒத்துக்க மாட்டேன்
ஏன்?
கன்னி னு வருது,அப்போ ராணி தானே கரெக்ட்?
================
5 சார்,நம்ம படம் ரிலீஸ் ஆக நீங்கதான் மனசு வைக்கனும்
அது இருக்கட்டும்,ஆளப்போறான்"தமிழன் னு பாட்டு வரி இருக்கே,அப்போ நான் யாரு?
=================
6 எங்க ஆள் படம் ரிலீஸ் ஆகுதுன்னா ஒரு அரசாங்கமே பயப்படுது,எப்டி அவர் பவரு?
பிரமாதம்,இப்போ யாரு யாரை சந்திக்க வீடு தேடி போனது?
=================
7 சார்,நம்முளுது ஆக்சன் மசாலா படம் தானே?சஸ்பென்ஸ் படம்னு சொல்றாங்க?
படம் சொன்ன தேதி ல ரிலீஸ் ஆகுமா?ஆகாதா?னு கடைசி வரை சஸ்பென்சாவே இருக்கும்
=================
8 குருவே! நீங்க நல்ல குடும்பத்தில்தானே பிறந்தீங்க?
ஆமா,அதுக்கென்ன?
நல்லகுடும்பத்துபெண்கள் சபரி மலைக்கு வரமாட்டாங்களாம்,அப்போநாம தக்காளிதொக்கா?
=================
9 தலைவரே!டெங்கு பாதிப்பைப்பாத்து மெர்சல் ஆகிட்டீங்க போல.
ஆமா,ஏன் கேட்கற?
டெங்குவை தடை பண்ணுங்கன்னா மெர்சல் படத்தை தடை பண்ணி இருக்கீங்க?
==================
10 கமலோட அபூர்வ சகோதரர்கள் கதையை சுட்டுட்டோம்னு அபாண்டமா பழி போட்டவங்க முகத்துல கரி பூசிட்டோம்
எப்டி?
விகாந்த்ன் பேரரசு கதை யைத்தான் சுட்டோம்
================
11 நெட் ல ரிலீஸ் ஆன எங்க பட கதை ஒரு ஃபேக் நியூஸ்
ஓஹோ, அப்போ உண்மையான கதை என்ன?
இதான் ......
இது அதை விட கேவலமா இருக்கே?
====================
12 ஜோசியரே! நம்ம படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?
பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது
புரியல
அதான் கிடைக்காதுன்னு சொல்லிட்டனே?
================
13 சார், 120 ரூ டிக்கெட், ஏன் 112 ரூ தான் தர்றீங்க?
20 நிமிச காட்சிகள் கட் பண்ணீட்டீங்க இல்ல .160 நிமிச படத்துக்கு 120 ரூ -ன்னா 140 க்கு 112
================
14 சார், நீங்க சொன்னபடி படம் லாஸ் ஆச்சுன்னா காம்பன்சேசனா 35 கோடி தந்துடறேன்
பத்தாது
ஏன்?
காம்ப்பன்சேசனுக்கு GST இருக்காம்
=================
15 என் எதிரே ஒரு எதிரி கூட கிராஸ் பண்ணமுடியாது
என்னங்க்ணா, ஒரு ஜூஜூபி ப்ளூ கிராஸ் ஒரு காட்டு காட்டிடுச்சே?
===============
16 சார்,ஹாலிவுட் தரத்துல சில காட்சிகள் வெச்சிருக்கீங்களாமே?
ரகசியமா வெச்சுக்குங்க The prestige படத்துல இருந்து நைசா சுட்டுட்டோம்.(மேஜிக்)
=================
17 ஒரு நாளைக்கு ஒரு GB பத்த மாட்டிங்குது
பெட்ரோல் நனைச்சு பத்தி பாருங்க
================
18 சார்,அந்த ஊர் ல 110 அடி கட் அவுட்,இந்த ஊர் ல 140 அடி கட்"அவுட்.உங்களுக்கு என்ன தோணுது?
"அடி" பலமா இருக்கும் போல னு தோணுது
=================
19 Dr.் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நினைவாற்றல் அதிகரிக்குமா?
S மிஸ்,குங்குமம் வைக்காம மறந்திருந்தா நினைவு வரும்
===============
20 மேடம்,தீபாவளிக்கு எல்லாரும் அதிரசம்,முறுக்கு சுடுவாங்க,நீங்க வடை சுட்டுட்டு இருக்கீங்க?
விஜய் ரசிகை
இப்பவே,சுட்டு வெச்ட்டா நாளை ஈசி
ஹிஹி
=================
0 comments:
Post a Comment