1 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை ஓ.என்.ஜி.சி வழங்கியது: செய்தி.
# இவங்களே பாம் வைப்பாங்களாம்.இவங்களே எடுப்பாங்களாம்
===============
2
ஜெ., வழியில் தமிழக அரசு நலத்திட்டங்களை செய்துவருகிறது −CM EPS # அப்போ இவரும் சொத்து குவிப்பு வழக்கில் மாட்டுவாரோ?
===============
3 மாணவர்களின் நலனை காக்கும் அரசாக தமிழகம் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது: CM EPS # வளர்மதி யை மதிப்பா நடத்தினதைத்தான் பார்த்தமே?
=================
4 குட்கா விற்றால் குண்டர் சட்டம் பாயும் - CM EPS #மாமூல் வாங்கின போலீஸ்க்கு பிரமோஷன் ,இன்க்ரீமெண்ட் எல்லாம் தந்தாச்சா?
================
5 திருமாவளவன் பக்கபலமாக இருந்தால் தேர்தலில் வெற்றிபெறுவோம் -ஸ்டாலின்.
# தன் பலத்தை நம்புபவரே தலைவர்,பிறர் பலத்தை நம்பி"களம் இறங்கினால் ?
================
6 மக்கள் பிரச்னைக்காக திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் எந்த சங்கடமும் இல்லை: திருமா # எந்தக்காலத்துல எந்த அரசியல்வாதி இதுக்கு சங்கடப்பட்டாக?
=================
7 நாட்டின் புனித நூல் பகவத்கீதை, வீணையும் பகவத்கீதையும் மதச்சார்பின்மையின் பிரதிபலிப்பு: ஹெச்.ராஜா #இப்டி எல்லாம் அறிக்கை விடுவது வீணே!
===============
8 தேர்தல் நெருங்கும் போது திமுகவுடன் கூட்டணியா என்பது பற்றி முடிவு செய்யப்படும்:திருமா # வேற யாரும் கூப்பிடலைன்னா அங்கே போய்டுவேன்
==================
9 தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இருப்பதை அரசு மூடி மறைக்கிறது: அன்புமணி # அதிமுக அரசு அதை மட்டுமா மூடி மறைக்குது?
================
10 மாற்றம் வேண்டும் என்றால் திருமாவளவன் பக்கபலமாக இருக்க வேண்டும்.. ஸ்டாலின் # அப்போ நாம பலவீனமா"இருக்கோம்னு ஒத்துக்கிட்ட மாதிரி ஆகிடாது?
================
11 புண்ணியத்திற்காக கோயில் குளங்களை ஸ்டாலின் தூர்வாருகிறார்..−CM EPS # நாமும்"நல்லது செய்ய மாட்டோம்.நல்லது செய்பவரையும் நொட்டை சொல்வோம்
==================
12 மறைத்து மறைத்து குட்கா விற்பவர்களே உஷார்.. இனி உங்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: கமிஷனர் எச்சரிக்கை # போலீஸ் வாங்கின மாமூல் ரிட்டர்ன்?
================
13 பாஜகவின் ஊழல் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?: ராகுல் # சொந்தக்காசுல யாராவது சூன்யம்,வெச்சுக்குவாங்களா?நாம"போபர்ஸ் பத்தி பேசுனமா?
===================
===================
15 அரசிற்கு சொந்தமான குளங்களில் வேறு யாரும் தூர்வாருவதை அனுமதிக்க முடியாது −EPS # நல்லதை யார் செஞ்சா என்ன?அதுக்கும் தடாவா?
=================
16 “ஆட்சிக் கனவில் திருமாவளவனை ஸ்டாலின் அழைப்பது மண்டியிடுவது தானா?” - தமிழிசை # ரா ரா ரஜினியே ரா ரா அரசியலுக்கு ரா ரா னு நாம கூப்பிடலை?
================
17 நமது மக்கள் நல்ல நிபுணரை தான் தேடுகிறார்கள் - கமல் # அது"தெரிஞ்சுதான் அர்ஜுன் "நிபுணன்" தந்தாரு
=================
18 ஆடி முடிந்த பிறகு பத்திரபதிவு பதிவு! ஒபிஎஸ் உறுதி!!
# நாலு பேருக்கு நல்லது செய்ய நாளு கிழமை பாக்கனுமா?
==================
19
உதயமானது அகில இந்திய ஓவியா பேரவை.
#வாக்கு வங்கி 5% இருக்குனு தெரிஞ்சிடுச்சுன்னா அன்புமணி ,ஸ்டாலின் எல்லாம் லைன் கட்டி நிப்பாக கூட்டணிக்கு
================
20 அரசியலுக்கு வரும் வாய்ப்பு எனக்கு தரும் அழுத்தத்தை பொறுத்தது − கமல் # குக்கர்னு நினைச்சு ஆளும்கட்சி பிரஷர் தந்தா நிக்கர் இருக்காதுங்கறார்
===================
0 comments:
Post a Comment