Friday, September 29, 2017

ஹர ஹர மகாதேவகி -சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி 18+)

Image result for haraharamahadevaki
நவரச நாயகன் கார்த்திக் நடிச்ச ரெட்டைக்குழல் துப்பாக்கி படம்தான் எனக்கு தெரிஞ்சு  அவருக்கு கெட்ட பேர் வாங்கித்தந்த படம் , அப்பா சம்பாதிச்ச அந்தப்பேரை கவுதம் கார்த்திக்  இப்பவே சம்பாதிச்சதை நினைக்கும்போது பெருமையா இருக்கு , அவர் மாதவன் மாதிரி ரொமாண்டிக் ஹீரோவா வலம் வருவார்னு பார்த்தா போயும் போயும் கேவலம் த்ரிஷா இல்லன்னா நயன் தாரா வில் ஹீரோவா வந்தாரே அவர் பேர் கூட ஆங்  ஜிவி பிரகாஷ் மாதிரி தர லோக்கல் கில்மா உருப்படியாய் மாறி வருவது சோகம்  


சரி , இந்த கேவலமான படத்தோட கதை என்னா?ன்னு பார்ப்போம்

சமீபத்தில் ரிலீஸ் ஆன தரமான படம் குரங்கு பொம்மை , அதில் ஒரு பை கை மாறி பலரிடம் போவதுதான் கதைக்கரு, 


டைம் பாம் வைக்கப்பட்ட ஒரு பை , கள்ள நோட்டு ரூ 2 கோடி வைக்கப்பட்ட ஒரு பை , துணி மணிகள் வைக்கப்பட்ட ஒரு பை இந்த 3 ம் எப்படி படாதபாடு பட்டு இரட்டை இலை சின்னம் போல் சிக்கி சின்னாபின்னம் ஆகுது என்பதே திரைக்கதை , அதை எந்த அளவு மொக்கையா சொல்ல முடியுமோ அந்த அளவு ரம்பம் போட்டிருக்காங்க 


4 விதமான கிளைக்கதைகள் . ஒரு புள்ளியில் இணைக்க படாத பாடு படும் இயக்குநர் எடிட்டிங் பண்ணும்போ தாவது ரசிகர் நலன் கருதி கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம், அட்லீஸ்ட் கருணை மலரையாவது காட்டி இருக்கலாம் 


ஹீரோவா கவுதம் கார்த்திக் , படு கேவலமான பாத்திரப்படைப்பு , ஒரே ஒரு டப்பாங்குத்து டான்ஸ் நல்லா ஆடறார் , இவருக்குக்கூட காலேஜ் பொண்ணுங்க ரசிகைகளா இருக்காங்கனு நினைக்கும்போது சிரிப்பாவும் இருக்கு, நல்லா வேணும்னு சந்தோசமாவும் இருக்கு 

Image result for haraharamahadevaki

 ஹீரோயின் நிக்கி கல்ராணி , நிக்கி செங்கல் ராணினு பேர்  மாத்திக்கலாம், அவ்ளோ சிவப்பு , ரோஸ் பவுடர் மேக்கப் . ஏ ரக காட்சிகளில் தெரிஞ்சு நடிச்சாரோ தெரியாம குத்து மதிப்பா சமாளிச்சாரோ தெரியல


 காமெடியனா நம்ம சதீஷ் , ஆர் ஜே பாலாஜியை நக்கல் அடிக்கறதா நினைச்சு ட்விட்டர்ல ரசிகர்கள் கிட்டே பல்பு வாங்கினாரே அந்த சதீஷ் தான் . 2 1/2 மணீ நேர படத்தில் ஹீரோ கூடவே வரும் சதீஷ் ஒரு சீனில் கூட ஒரு ஜோக் கூட சொல்லவே  இல்லை


 பத்திரிக்கைகளில் வரும் ஜோக்சை திருடி மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மதுரை  முத்து , ஈரோடு மகேஷ் கூட ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிரிக்க வைக்க ஒரு சொந்த  ஜோக் சொல்வார்கள் , சதீஷ் மருந்துக்குக்கூட ஒரு  ஜோக் சொல்லலை , இவர் லுங்கி யும்   ஃபுல் ஹேண்ட் சர்ட் , டை என கேவலமான கெட்டப்பில் வருவது  சகிக்கலை

  ரவி மரியா , மொட்டை ராஜேந்திரன் காமெடிகள் ஓரளவு சகிக்கும்படி  இருக்கு


 எடிட்டிங் , ஒளிப்பதிவு , இசை எல்லாம் சுமார் ரகம்


டி வி ல இந்தப்படம் போட தகுதி இல்லாத படம் என்பதால் மட்டமான ரசனை உள்ளவர்கள் உடனடியாக தியேட்டர் சென்று பார்த்து விடவும் 

 தப்பித்தவறி பெண்கள் தியேட்டருக்கு சென்று விட வேண்டாம் , படு  கேவலமான காட்சிகள் , வசனங்கள் நெளிய வைக்கும்


Image result for nikkikalrani
நச் டயலாக்ஸ்


1 வீட்ல எல்லாரும் திருப்பதி போய் இருக்காங்க

 நீ அவளை திருப்திப்படுத்த போய் இருப்பியே? #HaraHaraMahadevaki


2 அவங்க காதல்ல சின்னதா ஒரு பிராப்ளம்

 சின்ன பிராப்ளமா? சின்னதா இருப்பதுதான் பிராப்ளமா? #HaraHaraMahadevaki 18+


நல்ல நோட்டா?கள்ள நோட்டா?னு பாக்காம நாம கொடுக்கறதை வாங்கிட்டு போறது நம்ம நாட்லயே போலீஸ்காரனுங்கதான் (யப்பா ,என்னா அடி)

4 ஜட்டி போடற கெட்ட பழக்கம் உனக்கு இருக்கா?

கிளி யை கூண்டுல அடைக்கற பழக்கம் என்னைக்கும் இருந்ததில்ல 18+

5 எந்த வேலை வேணா செய்யலாம்,வேலையே செய்யாம இருக்கறதுதான் தப்பு

ஏய்.. ம்..
சும்மா இருங்க ,பையன் இருக்கான்
ஓ.உனக்கு அந்த நினப்பு வேறயா?சரக்கு அடிக்கனும்.2 பேரும் வெளில போங்க

வாட்சப் வந்தாலும் வந்தது,சின்ன பசங்க சரக்கு குடிக்கற போட்டோ,பொண்ணுங்க குளிக்கற போட்டோ எல்லாம் இதுல தான் வருது

8  தப்பு பண்றவன் மாட்டிக்கறதில்லை, தப்பை தப்பா பண்றவன் தான் மாட்டிக்கறான்

ரொம்ப சந்தோஷமா இருக்காளே,லவ்வர் கூட சேர்ந்துட்டாளோ?
இந்தக்கால பொண்ணுங்க லவ்வரை கழட்டி விடறப்பதானே சந்தோசமா இருப்பாங்க?

10 உன் வாட்ச்ல ஒரு நிமிசத்துக்கு எத்தனை நொடி?

60

என்னுதுல 100, அதான் வாட்ச் ஸ்லோவா ஓடுது போல #HaraHaraMahadevaki 


11 அடுக்கு மொழி பேசியே ஆட்சியைப்பிடிச்சது எல்லாம் அந்தக்காலம் #HaraHaraMahadevaki 


Image result for nikkikalrani
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

 இது 1  தான் குறைச்சல் 

சபாஷ் டைரக்டர்


 இந்த மொக்கைப்படத்துக்கு டீசர் , ட்ரெய்லர் எல்லாம் விட்டு ப்ரமோ தந்த விதம்



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


தனி கட்டுரையே எழுதனும்



சி.பி கமெண்ட் -ஹரஹரமகாதேவகி −C சென்ட்டர்ரசிகர்களுக்கான மொக்கை காமெடி கில்மா மெலோ டிராமா ,அய்யோ அம்மா ,விகடன் 35 ,ரேட்டிங் 2 / 5 , 18 +


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)   35


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)  2.5 / 5 



0 comments: