1 என் ட்வீட்டை யாரும் படிக்கக்கூடாதுனு பூட்டு போட்டுக்கிட்டேன்.
எதுக்கு ரிஸ்க்?ட்வீட்டே போடாம உங்க கைக்கு பூட்டு போட்ரலாமில்ல?
============
2 சார்.டிபி யா "பெஸ்ட்"னு ஸ்லாகன் உள்ள போட்டோவை வெச்சிருக்கீங்களே?ஏன்?
பெஸ்ட் டிபி அவார்டு னு யாராவது தந்தா டக்னு வாங்கிக்க
=================
3 சைனீஷ் பிகரை ரைட் பாண்டியன் உஷார் பண்ணிட்டார் போல
எப்டி சொல்றே?
கொஞ்சநாளா.என் ஆள் என்னை உதா"சீன"ப்படுத்திட்டே இருக்கா ன்னாரே?
================
4 உங்க படத்துக்கு ஏன் பாப்பா ஆண்டினு டைட்டில் வெச்சிருக்கீங்க?
யோவ்.அது பவர் பாண்டியோட.சார்ட் பார்ம்
PaPaandi
================
5 இன்னைக்கு பூரா மாமரத்தடில இருந்து FB ஸ்டேட்டஸ் போடப்போறேன்
ஓஹோ. வெறும் மடையன்னு பேர் எடுத்த நீ இனி மாங்கா மடையன்னு பேர் எடுப்பே
==================
6 கீர்த்தி சுரேஷைப்பார்க்க உனக்கு பிடிக்குமா?
சேலம்.பார்ட்டி=இல்லை.கீர்த்தி என்னைப்பார்த்தாதான் பிடிக்கும்
=================
7 ஒரு காலத்துல எல்லாம் யாராவது பேச மாட்டாங்களான்னு ஒரு நிலைமைல இருந்தேன்
ஓ.இப்போ?
ஏதோ ஒரு பிகராவது பேசினா தேவலை னு
==================
8 என் காதலி எனக்கு ஆசை காட்டி ஏமாத்திட்டா
எனக்கு அது கூட காட்டலை.விஜய் ரசிகையாம்."ஆசை"பிடிக்காதாம்.அஜித் படம் ஆச்சே?
=================
9 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து வந்த எல்லா வாட்சப் க்ரூப்லையும் சண்டைபோட்டுட்டேன்
குட் மேடம்.ஹே விளம்பி யில் உண்மைவிளம்பி
==================
10 TVல எங்க ஆள் படம் 3 ஓடுது.அப்போ அவர்தானே பெரிய ஆளு.
சின்னத்திரை ல ஓடுனா சின்ன ஆளு.பெரிய திரைலஓடுனாதான் பெரிய ஆளு
==================
11 தலைவரே! அனைத்துக்கட்சிக்கூட்டத்துல என்ன முடிவு எடுத்தீங்க?
இப்டி அடிக்கடி ஒரு மீட்டிங் போடனும்னு
==================
12 சேவல் கூவி பொழுது விடியுமா?
விடியாது.ஆனா விடியும் பொழுது சேவல் கூவும்
=================
13 இன்னைக்கு பூரா மாமரத்தடில இருந்து FB ஸ்டேட்டஸ் போடப்போறேன்
ஓஹோ. வெறும் மடையன்னு பேர் எடுத்த நீ இனி மாங்கா மடையன்னு பேர் எடுப்பே
==============
14 தலைவரே!உங்க சம்சாரம்தான் துரத்தி விட்டுடுச்சே?ஏன் இன்னும் திண்ணைல படுத்திருக்கீங்க?
வெளில இருந்து ஆதரவு தரலாம்னு
====================
15 காதர் மாம்பழம் கிலோ 50 ரூ.அல்போன்சா மாம்பழம் கிலோ 75 ரூ
யோவ்.2ம் ஒரே ரகம் தானே?
ஆனா பேரில் இதுதானே கிக்.ரேட் ஜாஸ்தி
===============
16 நான் வீட்ல இருக்கும்போது என் தாய் மொழில தான் பேசுவேன்.நீ?
வீட்ல யாருமே இல்லைன்னா தேன்மொழி கூட பேசுவேன் போன்ல
================
17 சார்.உங்க இன்ட்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சினிமா ல என்ன கத்துத்தருவீங்க?
5பாரீன் படத்துல இருந்து 20% *5 உருவி ஒரு படம்
===================
18 மோர்/ நீர்மோர் - இரண்டும் வேற வேறயா்?
சிம்ப்பிள்.தயிர்ல தண்ணி கலந்தா அது மோர்.மோர்ல மறுபடி தண்ணி கலந்தா அது நீர் மோர்
=================
19 குணம் ஆகறவரை நீராகாரம் மட்டும் சாப்பிடச்சொன்னேனே?
சாரி டாக்டர்.நீர்,ஆகாரம் னு புரிஞ்சுக்கிட்டேன்
===============
20 வெய்யில் ல நீங்க விரும்பிக்குடிப்பது மோரா?இளநீரா?
எதா இருந்தாலும் நிழல்ல ஒதுங்கிதான் குடிப்போம்.வெய்யில்ல காய்ஞ்சுட்டே குடிக்க மாட்டோம்
================
0 comments:
Post a Comment