1 மாப்ளை க்கு மூக்கு கிளி து போல
ஓஹோ.கிளி மூக்கு மாங்கா மடையன்னு சொல்லுங்க
=============
2 தலைவரே! மிட் நைட் 12 மணிக்கு இலங்கை போறீங்களா?
ஏன்?
நேரம் கூடி வரும்போது சந்திப்போம்னு கடிதம். சின்ன முள் , பெரிய முள் கூடி வருவது 12 க்கு தானே?
==================
3 தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இன்னைக்கு கதர் வேட்டி சட்டை போடனும்
குட் யு”காதி” வாழ்த்துகள்
===================
4 பெண்களால் அனைத்து விதமான பிரச்சனைகளையும் எளிதாய் சமாளித்துவிட முடியும்,
எப்டி?
பிரச்சனையை உருவாக்கறதே அவங்க தானே?
====================
5 நான் டெய்லி காலைல 8 மணிக்குதான் எந்திரிப்பேன்
சூப்பர்.7 1/2,நாட்டு சனி உங்க வீட்ல கூடாரம் போட்டுத்தங்கி இருக்கு
===============
6 சிறந்த தோழிகளுக்கு எடுத்துக்காட்டு னு நீங்கள் நினைக்கும் ஐடி ய குவோட் செய்யவும்
எதுக்கு?
பாலோ பண்ணத்தான்.இதெல்லாம் ஒரு டெக்னிக்
=============
7 டேய்.நான் தான் குடைக்கீச்சு (DM) க்கு வராதே ன்னு சொன்னேனே,அப்புறம் ஏன் வந்தே?
மிஸ்.திடீர் மழை. அப்டியே லைட்டா ஒதுங்கலாம்னு வந்தேன்
================
8 DR.சொன்ன வார்த்தையை காப்பாத்திடுவீங்களா?
பேஷண்ட்டைக்காப்பாத்தறதுதான் கஷ்டம்.மத்ததெல்லாம் ஈசி
==============
9 மேடம்.அந்த உலக மேப்பை கைல எடுங்க
எதுக்கு?
கச்சத்தீவை மீட்பேன்னு சொன்னீங்களே அது எங்கே இருக்குனு காட்டுங்க பார்ப்பொம்
==============
10 என்னால் இப்போ வர முடியல.ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா.வருவேன்
ஹலோ.வர வேண்டிய நேரமே இப்போத்தான்
================
11 10% ரகசியத்தை சொல்லிட்டேன்.மீதி 90% ரகசியம் இருக்கு.ஆனா சொல்ல மாட்டேன்
ஓகோ.சரி.இந்த பேப்பர்ல எழுதிக்காட்டுங்க
=============
12 அவன் பேரைச்சொல்கிறேன் அதில் போதை உள்ளது
ஓஹோ , அண்ணன் பேரு என்னங்க?
நெப்போலியன்
=====================
13 தலைவரே!,நயன் தாரா நடிச்ச டோரா வை ஏன் பார்க்கறீங்க?
ஏன்?
யார் யாரோ பார்த்த படம் தானே அது?
===================
14 தலைவரே! இப்போ சி எம் சீட்ல உக்காரச்சொல்லி வெத்தலை பாக்கு வெச்சு யாராவதுஅழைச்சாங்களா?
இல்ல
ஸிஎம் ஸீட்ல உக்கார விருப்பம் இல்லைன்னீங்க்ளே?
=================
15 தலைவரே! கட்சில சீனியர் யாரு?
அன்பழகன்
குடும்பத்துல?
அழகிரி
அப்போ அவங்களுக்கு விட்டுத்தரலாமே? பதவி ஆசை இல்லாத நல்லவர்னா
=================
16 20 வரிகளில் விடை அளிக்கனும் இந்த எக்சாம்லஆனா நீ 2வரி தான் எழுதி இருக்கே?
10%தான் எழுதுவேன்.மீதி 90% என் மனசுக்குள் புதைச்ட்டேன்
=================
17 சூடா சாப்பிட்டா அவன் பேச்சலர்
சூடு பண்ணி சாப்பிட்டா குடும்பஸ்தன். இது சரியா?
யா
சூடு சுரணையே இல்லாம சாப்பிட்டா அவன் வீட்டோட மாப்பிள்ளை
===================
18 தலைவரே! சாந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தறீங்களே எதுக்கு?
ஹிந்தி எதிர்ப்புப்ப்ராட்டம் பண்ணி போர் அடிச்சிடுச்சு
===================
19 டீச்சர், 5000 ரூபா சம்பளம் வாங்கிட்டு இருந்த நீங்க திடீர்னு 50,000 ரூ சம்பள உயர்வு கேட்கறீங்களே ஏன்?
சும்மாவா? விஜய் டி வி புகழ் மிஸ் ஆகிட்டேனே? ராயல்டி?
=====================
20 கார்பன் ஷீட் ரேட் குறைஞ்சிடுச்சே ஏன்?
இப்போ ஹைட்ரோ கார்பன் ஷீட்டே வந்த்டுச்சில்ல?
======================
0 comments:
Post a Comment