Saturday, April 15, 2017

ப.பாண்டி- சினிமா விமர்சனம்

Image result for pa.paandi

வேலை இல்லா பட்டதாரி , தங்கமகன் , கொடி ஆகிய படங்களில் தனுஷ் இயக்குநராக மறைமுகமாக பணி ஆற்றினார் என சொல்லப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் படமாக பவர் பாண்டி திகழ்வதால்  எதிர் பார்ப்பு கூடுகிறது. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில்  ஆல் செண்ட்டர் ஹிட் அதுவும் ஃபேமிலி ஆடியன்சை , பெண்களை கவரும் விதத்தில் ஒரு நிறைவான அப்பா - மகன் செண்ட்டிமெண்ட் படம் தந்திருக்கிறார்


ஹீரோ ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்.மகன், மருமகள் , பேரன் , பேத்திகளுடன் வாழ்கிறார்.சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் அப்பா - மகன் இடையே கருத்து வேற்றுமை வருகிறது. ஒரு கட்டத்தில் கோபித்துக்கொண்டு ஹீரோ வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். தன் முதல் காதலியை அவர் சந்தித்தாரா? அதற்குப்பின் நிகழ்ந்தது என்ன ? என்பது மிச்ச மீதி கவிதை 


ராஜ் கிரண் தான் ஹீரோ.ஆல்ரெடி மஞ்சப்பை படத்தில் செய்த கதாபாத்திரத்தின் நீட்சி தான் என்றாலும் பின் பாதியில் புதிய கதைக்களத்தில் திரைக்கதை பயணிப்பதால் கவனிக்க வைக்கிறது படம். மனிதர் பிரமாதப்படுத்தி விட்டார் . கூனிக்குறுகும்போதும் சரி , மகனுடனான விவாதத்திலும் சரி , அடியாட்களை துவைத்து எடுப்பதிலும் சரி அவர் காட்டும் பாடி லேங்குவேஜ்கள் பிரமாதம்.

ரேவதி தான் அவருக்கு ஜோடி , அட்டகாசமான நுணுக்கமான முக பாவனைகள் , வயதான பின்னும் மிச்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் இளமைக்காலத்துக்காதல் , அருகில் மகள் இருக்கிறாள் என்பதால் அடக்கி வாசித்தல்  என அதகளப்படுத்தி விட்டார் ( லேசாய் இங்க்லீஷ் விங்க்லீஷ் ஸ்ரீதேவித்தனம் தெரிந்தாலும் )


ஃபிளாஸ்பேக் கில் 25 நிமிடம் வந்தாலும் தனுஷ் -  மடோனா செபாஸ்டின் லவ் போர்ஷன் ரிலாக்ஸ் டைம். ராஜ் கிரணின் இளமைக்கால தோற்ற ஆள் தான் தனுஷ் என்பது கொஞ்சம் நிரடல் .


பிரசன்னா அருமையான அண்டர்ப்ளே ஆக்டிங். 


இசை 2 சூப்பர் ஹிட் பாடல்கள் , ஒளிப்பதிவு அருமை . சண்டைக்காட்சிகள்  கன கச்சிதம் 
Image result for madonna sebastian

சபாஷ் இயக்குநர் 


1  துள்ளுவதோ இளமை , செல்வராகவன் சேர்க்கை , பர்சனல் வாழ்வில் சுசித்ராக்கள் குற்றச்சாட்டு என இமேஜ் டேமேஜ் ஆகி இருந்தாலும் மிக கண்ணியமாக , படத்தை இயக்கியதற்கு ஒரு ஷொட்டு 

2  சாயாசிங் வரும் காட்சிகள் எல்லாம் ஃபுல் அண்ட் ஃபுல் கவர் செய்து உடல் அழகை மறைத்தது  ஆச்சர்யம்,

3 படத்தின் கடைசி 20 நிமிட ராஜ் கிரண் - ரேவதி  காதல் எபிசோடு இயக்கம் கலக்கல் ( புன்னகை மன்னன் படத்தில் கமலுடன் நடிக்கும்போதே பல கண்டிஷன்களை கே பாலச்சந்தரிடமே போட்டவர்  ரேவதி -1 கையில் கிஸ் அடித்தால் எச்சிலை துடைப்பது போல் காட்சி வைக்கனும் 2 மழை சீனில் கருப்பு டிரஸ் தான் போடுவேன் இத்யாதிகள்) 

Image result for madonna sebastian hot selfie


இயக்குநரிடம் சில கேள்விகள் 

1  ஒரு கம்பெனியில் உயர் பதவியில் இருக்கும் பிரசன்னா  ஆஃபீஸ் டைமில் தன் தந்தையை ஆட்டோவில் ஏற்றி அனுப்ப பியூனை அனுப்பி இருக்கலாம், அல்லது  யாரோ ஒரு கிளர்க்கை அனுப்பி இருக்கலாம், எம் டி அழைப்பார் என தெரிந்தும் தானே காரில் டிராப் செய்வதும் அதனால் ஃபைட் ஏற்படுவதும் செயற்கை

2  ரேவதியும் , ராஜ்கிரனும் ஃபேஸ்புக் மூலம் மீண்டும் \ நட்பை தொடர்வது ஓக்கே , டெக்னாலஜி டெவலப்மெண்ட்டை உபயோகிப்பவர்கள் பரஸ்பரம் செல்ஃபோன் நெம்பர் பகிர்ந்த பின்னும் வாட்சப்பில் கடலை போடாமல் ஏன் ஃபேஸ்புக்கில் மெசேஞ்சரில் கடலை?


3  க்ளைமாக்ஸில் ரேவதி வீட்டில்  பிரசன்னா & கோ ராஜ் கிரணுக்கு முன் கூட்டியே வந்து இருப்பதும் அதை தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் டிராமா 


4 ராஜ் கிரன் - தனுஷ் இருவரும் அப்பா- மகன் ஆக வருவார்கள்  சரண்யா - தனுஷ் போல் இது ஒரு ரிமார்க்கபிள் ஜோடியாக அமையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு வகையில் ஏமாற்றம்



Image result for madonna sebastian hot navel in saree
நச் வசனம் 

மழையில் நனையாத வாழ்க்கை என்ன வாழ்க்கை ? #PA.PAANDI

ஏன் குடைக்கு வெளியே மழைல நிக்கறே? உள்ளே வா

ஏன் குடைக்கு உள்ளே நிக்கறே? வெளியே வா #PA.PAANDI ( கருப்பையா ட்வீட்- குடை பிடிக்கிறாள் தாய். மழை பிடிக்கிறது குழந்தை ட்வீட் உல்டா)

காதலிச்ச பொண்ணு கிடைச்சாலும், கடவுளா பார்த்து குடுத்த பொண்ணு கிடைச்சாலும் ரிசல்ட் என்னவோ 1 தான் #PA.PAANDI


எந்தத்தொழிலையும் எப்போதும் தப்பா பேசிடாதே  #PA.PAANDI

வேலை இன்னைக்கு வரலாம், நாளைக்கு போய்டலாம்,. ஆனா வெட்டியா இருப்பதுதான் நிரந்தரம் .PAANDI

6 உழைச்சு சாப்பிடனும், அதுல கிடைக்கும் சுகமே தனி #PA.PAANDI

எந்த கெட்ட பழக்கமுமே இல்லாம 30 வருசம் அதிகமா வாழ்ந்து என்ன சாதிக்கப்போறே?  #PA.PAANDI




Image result for madonna sebastian hot navel in saree

தியேட்டரிகல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 பவர் பாண்டி -128 நிமிடங்கள்

2 சுரேஷ் மேனன் மைன்ட் வாய்ஸ் -நல்ல வேளை.இப்போ ரேவதி கூட நாம இல்லை.இருந்திருந்தா தேவை இல்லாம அந்த ஸ்டில் பார்த்து பிபி எகிறும்


சி.பி கமெண்ட் -ப.பாண்டி -முன் பாதி ராஜ்கிரன் ராஜ்ஜியம் ,பின் பாதியில்(தான்)தனுஷ் தாண்டவம்.கச்சிதமான இயக்கம்.விகடன்-43, ரே-3/5
ஆல் செண்ட்டர் ஹிட் ஃபிலிம்

0 comments: