1 சார், தளபதி தலைவராக மாறிக்கொண்டிருக்கிறார்னு சிலர் சொல்றாங்களே?
வன்முறை தான் ஒரு தலைவருக்கான தகுதி எனில் அப்படிப்பட்ட தலைமையே தேவை இல்லை
===================
2 தலைவரே! பாக்கெட்டை மட்டும் கரெக்டா தனியா அப்டி கிழிக்க முடியுமா?
ஆல்ரெடி பிளான் பண்ணி லூஸ் ஸ்டிச் ல தெச்ச சட்டைதான் அது, சாணக்கியத்தனம்
=============
3 தலைவரே! சர்ட் பாக்கெட்டை அவங்க கிழிச்சாங்களா? நீங்களே கிழிச்சுக்கிட்டீங்களா?
நமக்கு நாமே திட்டம் தான்.
===========
4 ஷூ கால்களால் அவங்களை நீங்க உதைச்சீங்களா?
ஆமாங்க. வெறும் காலால உதைச்சா எங்களுக்கு தான் வலிக்கும்
==============================
5 காய்கறி வெட்டும் போது கை வெட்டிக்கிட்டேன்
அடடா.ஒரு லேடீஸ் பிங்கரை வெட்டும்போது லேடீஸ் பிங்கர்சை வெட்டிக்கொண்டதே அடடே!
===============
6 தலைவரே!சட்டசபை கூட்டம் நடக்கும் முன் கட்சி மீட்டிங் நடந்ததே.என்ன பேசுனீங்க?
என்னுதைத்தவிர யார் சட்டையும் கிழிஞ்சிருக்கக்கூடாது னு=
====================
7 தலைவரே! முதல் கையெழுத்து எந்த திட்டத்துக்கு போடுவீங்க?
யோவ்.நக்கலா?எந்த திட்டமா இருந்தாலும் கைநாட்டுதான்
==============
8 நீங்க ஜெயில்ல எந்த வேலையும் செய்யத்தேவை இல்லை.
அட்லீஸ்ட் எதுனா சதி வேலை யாவது செய்யறேனே?
=============
9 எங்க ஏரியால எந்தெந்த பிகர்ங்க எல்லாம் அதிகாலை வாக்கிங் போறாங்கன்னு ஒரு கணக்கெடுப்பு எடுத்தாச்
ஓ.ரகசிய"WALK"கெடுப்பு?
====================================
10 கவர்னர் சார்.என் சட்டை கிழிஞ்சிடுச்சு.ஆட்சியை கலைக்கனும்
இந்தாங்க 15 ரூபா.தெச்சிக்குங்க.இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?
===========
11டெய்லரே.2 வெள்ளை சர்ட் தைக்கனும்.ஸ்டிச்சிங் சார்ஜ் எவ்ளோ?
நார்மலா தைக்க 150ரூ ,கை வெச்சதும் கிழியனும்னா 175 ரூ
=====================
12 சார்.இலக்கியம் படைச்சவங்க ,படிச்சவங்க நல்லவங்களாத்தானே இருப்பாங்க?
ஹிட்லர் கூட கவிதை எழுதி இருக்காரு.அவரு நல்லவரா?
=================
13 சார்.ரிசார்ட் பில் 60 லட்சம் வந்திருக்கே?அவ்ளோ சாப்ட்டாங்களா?
மாநிலத்தையே 5வருசம் சாப்பிடறவங்க 10 நாள் பில் அவ்ளோ வராதா?
====================
14 ஜெ கொலை வழக்கை 4 வருசம் கழிச்சுத்தான் விசாரிக்கனும்
ஏன்?
இப்பவே தீர்ப்பு வந்தா ஏக கால தண்டனை வசதில பார்ட்டி தப்பிச்சிடும்
==================
15 கமல் மேல் மரியாதை கூடுதுனு ஒரு ரஜினி ரசிகையே ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.
அப்டியா?அவங்க அன்பே சிவம் படத்தை டிவி ல பாத்தாங்களா?தியேட்டர்லயா?
==============
16 தலைவரே! கால வரையற்ற உண்ணா விரதம் இருக்கத்தயாரா?
கழக நெறிகளின் படி அதிகபட்சம் 4 மணி நேரம்தான் விரதம் இருப்போம்
==================
17 ஜட்ஜ் =10 கோடி அபராதம் கட்டலைன்னா மேலும் 13 மாசம் ஜெயில்
கைதி= யுவர் ஆனர்.அப்போ 40 கோடி + 10 கோடி =50 கோடி கட்டிட்டா ரிலீஸ்?
=================
18 விஜய் ஆண்ட்டனி சார்.எமன் படத்தை ஏன் பிப் 24 ரிலீஸ் பண்றீங்க?
மோடி மட்டும் அன்னைக்கு தமிழகம் வரும்போது "எமன்" வரக்கூடாதா?
===============
19 வாட்ஸப்ல வரும் நீள் கவிதை என்னுதிலல
எப்டி சார் சொல்றீங்க. ? ஆதாரம்?
படிச்சா ஈசியா புரியுதே?இதுல இருந்தே தெரில?
=================
20 சார்.அடிக்கடி உங்க ட்விட்டர் ஹேண்டில் நேம் மாத்தறீங்களே?ஏன்?
அதுவா ?ஆளை மாத்தும்போது பேரை மாத்திக்குவேன்.கோகுலத்து கண்ணா பார்முலா
===================
0 comments:
Post a Comment