1 சார்.பிரசன்னாவை சினேகா விவாகரத்து செய்யப்போறதா நியூஸ் வருதே உண்மையா?
தெரிலயே?தனுசு ராசி பலன்ல என்ன போட்டிருக்குன்னு பார்க்கனும்
=================
2 விவேகம் உள்ள மாப்ளைதானே எல்லா பொண்ணுங்களும் விரும்புவாங்க?
ஆமா.ஆனா ட்விஸ்ட் என்னான்னா பொண்ணு விஜய் ரசிகை."விவேகம்"பிடிக்காது
============
3 சார்.தொப்பை உள்ளவர்னு கிண்டல் பண்ணாங்க?இப்டி இருக்கீங்க?
ஆப்பை அப்டி வைக்கனும்
============
4 அஜித் ரசிகன் VS விஜய் ரசிகை
டியர்
ம்
நோ வேகம்
கம்
விவே கம்
============
5 சார்.டைட்டில் டிசைன் கால்குலேட்டர் ல வருவதுபோல் இருக்கே?
கண்ணு.ஹீரோ கால்குலேட்டட் ரிஸ்க் எடுத்திருக்காரில்ல?குறியீடு
=============
6 குருவே!வேகம் ,விவேகம் எது ஜெயிக்கும்?
சிஷ்யா!வேகம் ஆல்ரெடி SPEED1,SPEED2,SPEED 3 னு ஜெயிச்சிடுச்.விவேகம் கவுண்ட்டவுன் இனிதான் ஆரம்பம்
============
7 டியர்.அடிக்கடி உனக்கு ஏன் விக்கல் வருது?
தயவு செஞ்சு விக் கை மட்டும் நினைவுபடுத்தாதீங்க
=============
8 மிஸ்டர், உங்க செல் மெமரி கார்டை எனக்கு கிஃப்டா தர முடியுமா?
மிஸ்! என் மெம்மரி பூரா நீங்க தான், இது கூட செய்ய மாட்டேனா?
==================
9 சார்.உங்க ரசிகர்கள் தான் உங்க எதிரியா?எப்டி?
சும்மா இருந்தவரை உசுப்பேத்தி சிக்ஸ்பேக் வைக்க வெச்ட்டாங்க.இப்போ நான்?
==============
10 சார்.உங்க கதை படிச்சேன்.வழக்கத்தை விட இது தேவலை
ஓஹோ.வழக்கமா எப்டி இருக்கும்?
அதான் சொன்னேனே.தேவலை
==============
11 ஜட்ஜ் - ஜாமீன் வேணும்னா 100 குறள் ஒப்பிக்கனும்
கைதி கண்ணாயிரம் = அப்போ 1330 குறளையும் ஒப்பிச்ட்டா பர்மணண்ட்டா ரிலீஸ் பண்ணிடுவீங்க்ளா?
================
12 டியர், டக்னு செய்யற மாதிரி ஒரு ரெசிபி சொல்லுங்க
நான் சைவம், இருந்தாலும் சொல்றேன், வாத்துப்பொரியல்.DUCKனு செய்யலாம்
====================
13 ஜமீன் தாரரை கொலை செஞ்ச நீ 2 மாசம் கழிச்சு கொள்ளை அடிச்சிருக்கே, ஏன்?
கைதி = சதித்திட்டம் ஆக்கப்பொறுத்தவன் 60 நாள் ஆறப்பொறுக்க மாட்டேனா?
==================
14 எம் சசிகுமார் படத்துக்கு திடீர்னு மார்க்கெட் வேல்யூ ஏறிடுச்சே எப்டி?
சசி முதல்வர் ஆகிறார்னு நியூஸ் வந்ததே?
===================
15 மேடம்.நாளைக்கு ஒரு முக்கிய தீர்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுமா இப்டி?
தெரிஞ்சதாலதான் ஒரு சேப்டி க்கு இப்டி
==============
16 மன்னா! அரண்மனை வேலைக்காரி வரும்போது நீங்க ஏன் எந்திரிச்சு மரியாதை தர்றீங்க?
அமைச்சரே!வேலைக்காரினு கம்மியா எடை போடாதீர்.
=================
17 பிப் 9 S3 ரிலீஸ் ஆகுதாமே?
ஆமா, ஆனா S4 உள்ளே போயிடும்
====================
18 தலைவரே! வருத்தமே இல்லாம பதவியை ராஜினாமா பண்ணிட்டீங்களே?
எப்டியும் தீர்ப்பு வந்ததும் உள்ளே போவாங்க, நான் மீண்டும்...
====================
19 தலைவரே கச்சா எண்ணெயை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கனும்?
அது அப்புறம், முதல்ல சில கச்சடாக்களை எல்லாம் நீக்கனும்
=====================
20 தமிழ் மிஸ் தன்யா = டேய், வேழைக்காரின்னு எழுதி இருக்கியே? சின்ன ல தானே வரும்?
டீச்சர், இது பெரிய வேலைக்காரி, அப்போ வேழைக்காரிதானே?
========================
0 comments:
Post a Comment