Sunday, March 05, 2017

S3 VS S4

1  சார்.பிரசன்னாவை சினேகா விவாகரத்து செய்யப்போறதா நியூஸ் வருதே உண்மையா?



தெரிலயே?தனுசு ராசி பலன்ல என்ன போட்டிருக்குன்னு பார்க்கனும்


=================

2 விவேகம் உள்ள மாப்ளைதானே எல்லா பொண்ணுங்களும் விரும்புவாங்க?
ஆமா.ஆனா ட்விஸ்ட் என்னான்னா பொண்ணு விஜய் ரசிகை."விவேகம்"பிடிக்காது

============

3 சார்.தொப்பை உள்ளவர்னு கிண்டல் பண்ணாங்க?இப்டி இருக்கீங்க?



ஆப்பை அப்டி வைக்கனும்


============

4 அஜித் ரசிகன் VS விஜய் ரசிகை



டியர்
ம்
நோ வேகம்
கம்
விவே கம்


============

5 சார்.டைட்டில் டிசைன் கால்குலேட்டர் ல வருவதுபோல் இருக்கே?



கண்ணு.ஹீரோ கால்குலேட்டட் ரிஸ்க் எடுத்திருக்காரில்ல?குறியீடு


=============

6 குருவே!வேகம் ,விவேகம் எது ஜெயிக்கும்?



சிஷ்யா!வேகம் ஆல்ரெடி SPEED1,SPEED2,SPEED 3 னு ஜெயிச்சிடுச்.விவேகம் கவுண்ட்டவுன் இனிதான் ஆரம்பம்


============

7 டியர்.அடிக்கடி உனக்கு ஏன் விக்கல் வருது?



தயவு செஞ்சு விக் கை மட்டும் நினைவுபடுத்தாதீங்க


=============

8 மிஸ்டர், உங்க செல் மெமரி கார்டை எனக்கு கிஃப்டா தர முடியுமா?

மிஸ்! என் மெம்மரி பூரா நீங்க தான், இது கூட செய்ய மாட்டேனா?


==================

சார்.உங்க ரசிகர்கள் தான் உங்க எதிரியா?எப்டி?
சும்மா இருந்தவரை உசுப்பேத்தி சிக்ஸ்பேக் வைக்க வெச்ட்டாங்க.இப்போ நான்?

==============

10 சார்.உங்க கதை படிச்சேன்.வழக்கத்தை விட இது தேவலை



ஓஹோ.வழக்கமா எப்டி இருக்கும்?

அதான் சொன்னேனே.தேவலை

==============

11 ஜட்ஜ் - ஜாமீன் வேணும்னா 100 குறள் ஒப்பிக்கனும்



கைதி கண்ணாயிரம் = அப்போ 1330 குறளையும் ஒப்பிச்ட்டா பர்மணண்ட்டா ரிலீஸ் பண்ணிடுவீங்க்ளா?

================

12 டியர், டக்னு செய்யற மாதிரி ஒரு ரெசிபி சொல்லுங்க

 நான் சைவம், இருந்தாலும் சொல்றேன், வாத்துப்பொரியல்.DUCKனு செய்யலாம்


====================


13  ஜமீன் தாரரை    கொலை செஞ்ச நீ 2 மாசம் கழிச்சு கொள்ளை அடிச்சிருக்கே, ஏன்?
கைதி = சதித்திட்டம் ஆக்கப்பொறுத்தவன்  60 நாள் ஆறப்பொறுக்க மாட்டேனா?



==================




14 எம் சசிகுமார் படத்துக்கு திடீர்னு மார்க்கெட் வேல்யூ ஏறிடுச்சே எப்டி?




சசி முதல்வர் ஆகிறார்னு நியூஸ் வந்ததே?


===================

15 மேடம்.நாளைக்கு ஒரு முக்கிய தீர்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுமா இப்டி?



தெரிஞ்சதாலதான் ஒரு சேப்டி க்கு இப்டி


==============
16 மன்னா! அரண்மனை வேலைக்காரி வரும்போது நீங்க ஏன் எந்திரிச்சு மரியாதை தர்றீங்க?



அமைச்சரே!வேலைக்காரினு கம்மியா எடை போடாதீர்.


=================

17 பிப் 9 S3 ரிலீஸ் ஆகுதாமே?

ஆமா, ஆனா S4 உள்ளே போயிடும்


====================

18 தலைவரே! வருத்தமே இல்லாம பதவியை ராஜினாமா பண்ணிட்டீங்களே?

எப்டியும் தீர்ப்பு வந்ததும் உள்ளே போவாங்க, நான் மீண்டும்...


====================

19 தலைவரே கச்சா எண்ணெயை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கனும்?

 அது அப்புறம், முதல்ல சில கச்சடாக்களை எல்லாம் நீக்கனும்


=====================

20 தமிழ் மிஸ் தன்யா = டேய், வேழைக்காரின்னு எழுதி இருக்கியே? சின்ன ல தானே வரும்?

  டீச்சர், இது பெரிய வேலைக்காரி, அப்போ வேழைக்காரிதானே?

========================

0 comments: