1 ஆஸ்கார் அவார்டு வாங்குனவங்க எல்லாம் அமைதியா இருக்காங்க.
அமிஞ்சக்கரைல அஞ்சு ஹிட் கொடுத்துட்டு ராயல்டி கொடு கயல்காபி கொடுன்ட்டு துள்றாங்க
===============
2 ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமா?
கை ராசி முக ராசி ஒண்ணா.இருந்தா பிரச்னை இல்ல.ஒரே ராசின்னா பிரச்ன
================
3 இன்று உலக வன நாள்.மரங்களை வெட்டும் க்ரூப்பை எதிர்ப்போம்.வன மோகினி ,கானக சுந்தரி டைப் படங்கள் ஹிட் ஆக உறுதி எடுப்போம்
================
4 சிலர் கருத்து சொன்னாலே அன்ஃபாலோ பண்ணிடலாம்னு தோணுது
மிஸ்! நீங்க சொன்ன இந்த கருத்துக்கு எத்தனை பேர் அன் ஃபாலோடு?
===================
5 ஆநெய்(ஆ=பசு)க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய் (தேன்)க்கு ஒரு காலம் வரும்.அதாவது 40 வயசு வரை பசு நெய் ,40 க்குப்பின் தேன் சாப்பிடனும்
===============
6 சாமக்கோடங்கி மாதிரி நைட்.11 மணிக்கு ஸ்டேட்டஸ் போடுறானுங்கன்னு ஒரு பொண்ணு அதே.11PM க்கு FB ஸ்டேட்டஸ் போட்டிருக்கு
================
7 நல்லவேளை.இளையராஜா மாதிரி மகேஷ் பாபு யார் கிட்டயும் ராயல்டி கேட்கல.கேட்டிருந்தா அந்த நட்ட ஈடு இன்னும் கூடி இருக்கும்
=============
8 இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் தினகரன் ஊரான் வீட்டு நெய்யா என் பொண்டாட்டி கையா என அள்ளி இறைத்து வெற்றி பெறுவார்
===========
9 இரட்டை இலை முடக்கப்பட்ட பின்னும் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் (தோற்கும்)அது ஒரு அவமானகரமான தோல்வி
=============
10 ஜெ தீபா மைன்ட் வாய்ஸ் -அப்பாடா.யாருக்கும் இல்லை.நமக்கும் இல்லை
============
11 கோடை காலம் தொடங்கும் முன்பே (இரட்டை)இலைஉதிர்காலம்
===============
12 இருபது வரி கவிதையின்
முதல் வரி நீ
இறுதி வரியும்் நீயே.
நடுவால இருக்கும் 18,வரி யும் உன் தங்கைக்கானது
================
13 தயவுசெய்து ஆம்பளைங்க யாரும் டிஎம் அனுப்பவேண்டாம்
நோட்டிபிகேசன் டோன் கேட்டு ஆர்வமா ஓப்பன் பண்ணி ஏமாற.நேரிடுது
==================
14 உழைப்புக்கு ஏற்ற ஊக்கத்தொகை என ஆசை வார்த்தை காட்டி வருடம் முழுவதும் உழைப்பை சுரண்டி பின் அல்வா கொடுப்பவரை அப்படியே விட்டு.விடாதீர்!
=================
15 68 நாளா கடலை பர்பி சாப்பிடாம சேத்து வச்ச காசுல மூணு பிகர்களுக்கு ரோஜாப்பூ வாங்கி குடுத்தேன் மனநிறைவு..
=================
16 வாராது வந்த மாமணி தன் தேவை க்கு தேடி வருவதும் தேவை தீர்ந்த பின் தன் வழியில் செல்வதும் உலக நியதி
==============
17 நெட் தமிழச்சிகள் ரொம்ப முன்னேறிட்டாங்க.அடுப்பைப்பத்த வெச்சு வாணலியை.வெச்சுட்டு "பூரி சுடவா?உப்புமா கிண்டவா?"னுFB ல ஐடியா கேட்கறாங்க
=================
18 வாழ்க்கைல நீங்க ஜெயிக்கனும்னா மனைவியை ஜெயிக்கனும்னு நினைக்காதீங்க.மனைவி கிட்டே தோத்துப்போங்க/தோத்துட்டதா காட்டிக்குங்க -
=================
19 BSNL நெட் அன் லிமிட்டட் ரூ1099 ரீ சார்ஜ் செய்து யாரும் ஏமாறாதீர்.புதிய திட்டப்படி ரூ339 போதும்.அன் லிமிட்டட் நெட் (daily 2 gb)
============
20 ரசனை இல்லாதவன் கிட்டே சலங்கை ஒலி DVDகுடுத்தா 3 மணிநேரம் முழுசாப்பாத்துட்டு ஹீரோயின் க்கு குளிக்கற சீன் 2 இருக்குன்னு சொல்வானாம்
=============
0 comments:
Post a Comment