1 பாவனா மானபங்க வீடியோவை தடுத்து நிறுத்த வேண்டும்” -FBக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு #வாட்ஸப்ல யும் வருதே.அது பரவால்லியா?
================
2 அதிமுகவை சசிகலாவிடம் இருந்து ஓபிஎஸ் மீட்டெடுப்பார்.. நத்தம் விஸ்வநாதன் # ஓஹோ.அப்போOPS கிட்டே இருந்து யார் மீட்டெடுப்பாங்க?
===============
3 பெங்களூரு சிறையில் விதிமீறல், சசிகலாவை திகாருக்கு மாற்றனும்-ராமதாஸ் # அப்போ அமைச்சர்கள் மக்கள் வரிப்பணத்தில்தானே திகார் ட்ரிப் அடிப்பாக
==============
4 சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் #குற்றவாளியைப்பத்தி கமெண்ட் அடிப்பது ஒரு குற்றமா?
===============
5 தேர்தல் கமிஷனுக்கு சசிகலா பதில் கடிதம் # அன்புள்ள அய்யா.தேர்தல் கமிஷன்னா தேர்தல் வரும்போது கமிஷன் தருவீங்களா?எத்தனை % ?
================
6 சசிகலா சிறையில் நலமாக உள்ளார்.
-திண்டுக்கல் சீனிவாசன்.# சின்னம்மா மைன்ட் வாய்ஸ் -இந்தாளு வாய்க்கு பூட்டு போடணும் முதல்ல
===============
7 சசிகலா எனக்கு
உதவியாளர் மட்டும் தான்
என ஜெ கூறியுள்ளார்
# கோர்ட் தீர்ப்பு தெளிவா இருக்கே?ஊழல் புரிய உதவியா இருந்தார்னு
-விஸ்வநாதன்
===========
8 திமுக
ஆட்சியமைக்கும்
என்ற சூளுரையே
இருக்கட்டும்-ஸ்டாலின்
அடிநாதமாக
# 2021 லயா?2026லயா?தலைவரே?வருசத்தையும் சொல்லிட்டா வாட்டமா இருக்கும்
==============
9ஸ்டாலின் முதல்வராகும்
நேரம் வந்துவிட்டது
-ராதாரவி
# இது அறிவிப்பா?எச்சரிக்கையா?கட்சில சேர்றதுக்கு ஜிங் சக்கா
===============
10 அதிமுக
சிதறு தேங்காய்போல்
உடைந்துவிட்டது-ராதாரவி
# அந்த சிதறல்லயும் பொறுக்கிட்டுப்போக ஆளுங்க ரெடியா இருக்காக
===================
11 பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கினார் நடிகை வரலட்சுமி.. அரசியலுக்கு வரலாம் என்றும் அறிவிப்பு!!:#வரலாம் வரலாம் வா லட்சுமி
================
12 இன்று முதல் வங்கி பரிவர்த்தணைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கும் தனியார் வங்கிகள் # போஸ்ட் ஆபீஸ்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிடனும்
==================
13 ஈஷா யோகா மையம் விதிகளை மீறி கட்டடங்களைக் கட்டி வருகிறது: தமிழக அரசு புகார்
#தமிழகத்தின் தலைவிதியே ஆளாளுக்கு விதி மீறலில் ஈடுபடல்
=========================================
14 ஸ்டாலின் போன்ற தலைவர்கள்
தமிழகத்துக்கு தேவை -வைரமுத்து # அப்போ ஸ்டாலின் தேவை இல்லைங்கறீங்களா?
==============
15 ஜெ. மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்- பி எச் பாண்டியன் # அப்போ இவரை போலீஸ் பாலோ பண்ணினா போதும்?
================
16 மீத்தேன் திட்டம் வேறு, ஹைட்ரோ கார்பன் வேறு - தமிழிசை# பூவை புய்ப்பம்னும் சொல்லலாம்,(க்யூட்)புஷ்பா ன்னும் சொல்லலாம்.அர்த்தம் 1 தானுங்
================
17 கட்சி விவகாரத்தில் தலையிட கோர்ட், தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை.-அதிமுக # திரைக்கதைல ட்விஸ்ட் என்னான்னா கட்சியே விவகாரத்துல மாட்டிடுச்
===============
18 வனப்பகுதியை நான் ஆக்கிரமித்தேனா? நிரூபித்தால் நான் அங்கிருந்து சென்று விடுகிறேன் - ஜக்கி வாசுதேவ்
# அப்போ அங்கே இருக்கேன்னு அர்த்தம் வருதே?
=============
19 J கன்னத்தில் 4 துளைகளுக்கு காரணம் என்ன?:மனோஜ் பாண்டியன்
# அப்பவே கேள்வி கேட்காம இப்போ கேட்பதன் காரணம் என்ன?
================
20 ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம் # இனியாவது அரசும் கோர்ட்டும் இரங்கி வருமா ?
======================
0 comments:
Post a Comment