Tuesday, March 14, 2017

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை

அனைத்து கட்சிகளும் ஃபேமிலி பிரைவேட் லிமிட்டெட் ஆகிவிட்டன.!
- கார்த்தி ப சிதம்பரம் # நம்மை கொஞ்சம் கண்ணாடியில் பார்க்கவும்

===========

2 ஆர்.கே நகர் இடை தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் -வைகோ # அப்டியே நின்னுட்டா மட்டும் மீறி மீறிப்போனா 5000 ஓட்டு வாங்குவமா?

================

3 மணிப்பூர்: 5/60 தொகுதிகளில் 54 வாக்குகள் பெற்று இரோம் ஷர்மிளா தோல்வி # இது தான் நீதி,நேர்மை,நியாயத்துக்கு மக்கள் தரும் பரிசு

============

4 நீதிமன்ற அவமதிப்பு - நேரில் ஆஜராகாத கொல்கத்தா ஹைகோர்ட் ஜட்ஜ் கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் பிடிவராண்ட் # சாமான்யன் கூட சட்டத்தை மதிக்குறான்

==============

5 ஆர்.கே நகரில் சூரியன் பிரகாசமாக உதிக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை # ஆமா.டெய்லி காலைல ஆறரைக்கு உதிக்கும்

==============

6 காங்் இல்லாத பாரதம் உருவாகிறது-பிரதமரின் வார்த்தை உண்மையாகி கொண்டிருக்கிறது- தமிழிசை # பஞ்சாப் ரிசல்ட் கேட்டா பஞ்சா பறந்துடுமே உங்க வாதம்

===============

7 ஜெ இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உள்ளது: வெங்கையா நாயுடு
# உ பி போல் ஆகலாம்கற கனவு "பஞ்சாப்" பறந்துடும்

=================

8 ஜெ தீபா மைன்ட் வாய்ஸ் -16வருசமா மக்களுக்காகப்போராடின இரோம் ஷர்மிளாவுக்கே 54 ஓட்டுதான்னா 16 வாரமா அரசியல்ல இருக்கும் நமக்கு என்ன ஆகுமோ?

==============

9 விஐபி 2 ஷூட்டிங்கில் கஜோல் போர்சன் முடிந்தது # இன்னமும் கஜோல் டைவர்ஸ் நியூஸ் வராதது அதிர்ச்சி அளிக்கிறது.தனுசு ராசிப்படி இந்நேரம்..

==============

10 ஏழைகள் பெறும்

நகை கடனுக்கு ஆப்பு
RBIபுதியகட்டுப்பாடு
இல்லாத சமுதாயம் உருவாக்குவோம்னாரு மோடி.இதுதான் நகை முரண்


================

11 எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கே வாக்கு விழுந்தது: மாயாவதி குற்றச்சாட்டு. உண்மைன்னா பஞ்சாப்லயும் ஜெயிச்சிருக்கனுமே?

==============

12 ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்-ஸ்டாலின்# ஆனா எஜமானர்கள்ட்ட 10 பைசா இல்ல.அவங்க கிட்டே ஓட்டு பிச்சை எடுத்தவங்க கோடீஸ்வரர்கள்

==================

13 பிரதமர் மோடிக்கு

ராகுல் வாழ்த்து
# வாழும் காலம் வரை வாழ்த்துச்சொல்லியே வாழ்வாங்கு வாழ்வோர் ராகுல் ,ஸ்டாலின் ,அன்புமணி,வைகோ


===============

14 இந்திய அளவில் பெண்கள் கடத்தலில் தமிழகம் 3வது இடம் # அதுல பாதிப்பேரு லவ்வர்சை கடத்தினவனா இருப்பான்

================

15 ஐநா சபையில்

ஐஸ்வர்யா பரத நாட்டியம்
-செய்தி
# ஐ நா சபை நாகரீகம் கருதி யாரும் பாதில எந்திரிச்சுப்போகலை.ஆதிலயே கிளம்பிட்டாங்களாம்


===============

16 இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை - இரோம் ஷர்மிளா
கலங்குபவர் என்றும் வெற்றி தேவதையால் ஆசீர்வதிக்கப்படுவதில்லை

=================

17 ஆர்.கே.நகரில், சசிகலா தரப்பு, தி.மு.க., தவிர மற்றவர்கள் ஆதரித்தால் வரவேற்பேன்.-தீபா: # அப்டியே தொகுதி மக்கள் ஓட்டு போட்டா வரவேற்பேன்னும் சொல்லி இருக்கலாம்


==================

18 \ஜெ., சொத்துகளும்,அ.தி.மு.க.,வும், தினகரன் கையில் மாட்டிக் கொண்டு, சின்னாபின்னமாகிறதே என்ற வருத்தம் தான், என்போன்றோருக்கு வருகிறது.-
தி.மு.க., -- எம்.எல்.ஏ., ராஜா:  # ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதைதான் நினைவுக்கு வருது


========================



19 ரேஷன் கடைகளுக்கு எதிரில், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசியல் நாடகம்.-தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் # 
நாடகம், வசனம்னா தானைத்தலைவருக்கு ரொம்ப பிடிக்குமே

===============

20 நான், ஜெ வின் கட்டுப்பாடு மிக்க தொண்டன்.- தினகரன்:  # ஜெ உயிருடன் இருந்தப்போ அவரால் கட்டம் கட்டப்பட்டு துரத்தப்பட்ட துரோகி

====================

0 comments: