Thursday, March 23, 2017

ரோஜா ரிலீஸ் ஆகாம இருந்திருந்தா இளையராஜா ஆஸ்கார் வாங்கி இருப்பார்?

1  தீபாவை CM ஆக்குவதற்காகவே
நான் தனிக்கட்சி தொடங்க உள்ளேன் - தீபாவின் கணவர் மாதவன் # அப்போ தீபா தனிக்கட்சி ஆரம்பிச்சது உங்களை சி எம் ஆக்கவா?

================
2 மக்களுக்கான தலைவர்கள் பாஜகவில் மட்டுமே உள்ளனர் - கங்கை அமரன் # ஆனா ஓட்டு வாங்கிட்டு மக்கள்ட்டயே ராயல்டி கேட்கறாங்க



================



3 தனுஷ் உடலில் உள்ள சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தகவல்! # சட்டப்படி இது தப்பாச்சே? ஆபரேஷன் தனுஷ் சக்சசா?ஃபெய்லியரா?



============



4 இளையராஜா,SPB-க்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்”.

- வெங்கையா நாயுடு # ஆ.ராசா கிட்டே ராயல்டி கேட்கல?

===============

5 பெண்களின் நவீனக் குரலாக ஒலிக்கும் காற்று வெளியிடை!’’ - வைரமுத்து மாப்ளை வேணும்னு ஹீரோயின் அடம் பிடிக்கும் போல


================

6 43 லட்சம் அதிமுக தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக OPSஅணி தேர்தல் ஆணையத்திடம் அறிவிப்பு!#50 ல னு ரவுண்டா அடிச்சு விட்ருக்கலாம்.எண்ணவா போறாக

==============


7 ரேசன் பொருட்கள் நிறுத்தப்படாது என அமைச்சர் உறுதி!
எடைக்குறைச்சல் னு புகார்.இனி தராசில் நிறுத்தப்படாதுன்னா எப்டி?

===============

8 பணப்பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது!#,தேர்தலோ இடைத்தேர்தலோ வர்ற.டைம்ல கைதாகறாரே?

==============

9 அ.தி.மு.க., ஆட்சியில், கடனில் தவிக்க விட்ட தமிழகத்தை மீட்டெடுக்க, ஸ்டாலினால் மட்டும் தான் முடியும்-வேலு # அவர் கிட்டே தான் அவ்ளோ சொத்து இருக்கா?



=====================




10 எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், காங்., ஆட்சியை பிடித்திருக்கும்.-தங்கபாலு # ரோஜா ரிலீஸ் ஆகாம இருந்திருந்தா இளையராஜா ஆஸ்கார் வாங்கி இருப்பார்ங்கற மாதிரி




=========================




11  டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் 4 ஆயிரம் மாணவர்கள் இணைந்தனர் #,விவரமானவர்களா?விவகார மாணவர்களா?


============

12 சொத்து குவிப்பு வழக்கு;ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி? கர்நாடகா சுப்ரீம் கோர்ட்டில் மனு. சொன்ன சசிகலா,தீபா கிட்டே தலா.50%,வசூல்

==============

13 மகாபாரதத்தை இழிவுபடுத்தினாரா கமல்? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு கமல் பேசுனது புரியல போல.விளக்கம் கேட்கறார்

===============
14 27 தேர்தல்களில் தோல்வி; ராகுல் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்க விண்ணப்பம்..# நிலைமை "கை"மீறி போய்டுச்சு போல

===============


15 17வருடங்களாகபோலிஎன அறிவிக்கப்பட்ட 14 பல்கலைக்கழகங்கள் இன்றும் செயல்படுகின்றன#இன்னும் அரசு வேடிக்கை பாக்குது?இதுக்கு வெட்கப்படனும் சென்றாய்ன்

=============

16 மனிதர்களுக்குச் சமமாக கங்கை, யமுனை ஆறுகள் நடத்தப்பட வேண்டும் உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. # ஆதார் கார்டு கேட்டுடப்போறாங்க


================

17  பஸ் கட்டணத்தை உயர்த்த வில்லை. இதற்கு முன், என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ, அதுதான் இப்போதும் நீடிக்கிறது.-விஜயபாஸ்கர் # ஆனா சிறப்புப்பேருந்து மட்டும்தான் ஓடுது.சாதா சோதா ஆகிடுச்சா?


====================

18  ஓட்டு போட்டவுடன் யாருக்கு ஓட்டு போட்டோம்னு ஸ்லிப் RKநகர் தேர்தலில் அறிமுகம்-தேர்தல் ஆணையம் #10,000 குடுத்தவன் சும்மா இருப்பானா? வெரிஃபை பண்ண ஏற்பாடு பண்ணிட்டாங்க போல


===================

19 

பார்லிமென்டிற்கு 'மட்டம்' போடாதீங்க!:பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை # மீடியாவில் ஆளாளுக்கு மட்டம் தட்டுவாங்க இப்டி மட்டம் போட்டா-னு உயர்மட்டம் சொல்லியாச்


==================

20 பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியுடன் திடீர் சந்திப்பு # பாட்ஷா ரிலீஸ் டைம்ல சந்திச்சிருந்தா ஏதோ பலன் கிட்டி இருக்கும், 2.0 டைம், ஜீரோ பலன் தான்


===================

0 comments: