ஹீரோ விஜய் டி வி கோபிநாத் போல ஒரு மீடியா வில் ஒர்க் பண்றார். சிலரால் ரேப் செய்யப்பட்ட ஒரு பெண்ணை அவர் முகம் தெரியாதபடி பேட்டி எடுத்து டிவில பிரேக்கிங் புரோகிராமா போடறார். ஹீரோவுக்கே தெரியாம அந்த பொண்ணு முகம் டி வி யில் காட்டப்படுது. ஹீரோ அதிர்ச்சி ஆகறார்.
ஒரு அரசியல் வாதி யை லைவ் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சில எம் டி யை எதிர்த்து அந்த அரசியல்வாதியை மடக்கி நக்கல் அடிக்கறார். வேலையை உதறி வேற ஒரு சேனல்ல சேர்ந்து அவர் போராடி ஜெயிப்பதே கதை
ஹீரோவா விஜய் சேதுபதி. முதல் அரை மணி நேரத்தில் வித்தியாசமான ஒரு கெட்டப் , பின் வழக்கமான நார்மல் கெட்டப் என இரு விதமான தோற்றத்திலும் பாஸ் டிஸ்டிங்க்ஷனில் பாஸ்.
முதல்வன் பட ஃபேமஸ் சீன் அர்ஜூன் - ரகுவரன் பேட்டிக்கு இணையான அரங்கம் அதிரும் கை தட்டல்களுடன் ஒரு சீனில் விஜய் சேதுபதி அத கள பர்ஃபார்மென்ஸ் பண்றார், வெல்டன்
மீடியா எம் டியாக டி ஆர் . அங்கங்கே படுத்தினாலும் சில இடங்களில் பிரமாதப்படுத்துகிறார்
ஹீரோயின் , காமெடியன் க்கு எல்லாம் அதிகம் வேலை இல்லை .
இசை ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் கன கச்சிதம்
முன் பாதியில் இருந்த வேகம் விறு விறுப்பு பின் பாதியில் இல்லாதது பெரிய பலவீனம்
ஆர் பாண்டிய ராஜன் , மடோனா செபாஸ்டின் பங்களிப்புகள் ஓக்கே ரகம்
சபாஷ் இயக்குநர்
1 நீயா நானா கோபிநாத் எப்போதும் காது மைக்கில் கிடைக்கும் ஆர்டரை வெச்சு அதுக்கு ஏற்றாற் போல் பேசுவார் , அதை செம கலாய்ப்பாக நக்கல் அடித்து எடுக்கப்பட்ட அந்த 20 நிமிட எபிசோட் கலக்கல் ரகம்.
2 நிஜங்கள் குஷ்பூ , சொல்வதெல்லாம் உண்மை என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா போன்ற டிராமா ஆர்ட்டிஸ்ட்களை எல்லாம் வாரு வாரு என வாரி இருப்பது அட்டகாசம்
3 சூப்பர் சிங்கர் ஜட்ஜ்கள் , டான்ஸ் புரோக்ராம் ஜட்ஜ்கள் போன்ற எல்லாம் சொம்புகளையும் மாங்கு மாங்கு என்று போட்டுத்தாக்கிய விதம் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 டி வி ப்ரோக்ராமில் சம்பளத்துக்கு வேலையில் இருக்கும் ஹீரோ என்னதான் ஹீரோவா இருந்தாலும் டி வி ஸ்டூடியோவில் அப்படி எம் டி க்கு எதிரா பேசி வெளில போக முடியுமா?
2 டி வி பேட்டியில் அந்த அரசியல் பொறுக்கியின் அடியாட்கள் ஹீரோவை எதுவுமே செய்யாமல் விடுவது எப்படி?
3 ஹீரோ எல்லோர் முன்னாலும் அந்த டிவி ப்ரோக்ராமரை பளார் கொடுத்தும் எந்த வித எதிர்ப்பும் பெறாமல் அசால்ட்டாக இருப்பது எப்படி?
4 முன் பாதியில் ஒரிஜினாலிட்டி காட்டும் திரைக்கதை பின் பாதியில் கோ பட பாதிப்பில் தடுமாறுவது ஏனோ?
நச் டயலாக்ஸ்
1 என்னதான் நடிப்புன்னாலும் பொண்ணை கட்டிப்பிடிக்க கூச்சமா இருக்கு
அவளை கட்டையா நினைச்சுக்கோ.ஐ மீன் மரக்கட்டையா #KAVAN
2 ஆவணப்படம் எடுக்கறேன்னு என்னை கோவணத்தோட நிக்க வெச்ட்டியே #KAVAN
3 இப்டி செஞ்சாதான் யூத் க்கு பிடிக்கும்
ஓகோ.நீங்கதான் யூத்தா மேடம்?
நான் கூட பூத் னு நினைச்சேன் #KAVAN
அப்கோர்ஸ்
4 எத்தனை டைம் உன் கிட்டே கட் கட் னு சொன்னேன்
ஓ.கட் னு சொன்னியா?கட்டிக்கோன்னு சொன்னதா நினைச்ட்டேன் #KAVAN
5 தேனி ன்னா கொட்டும்
பாம்பு ன்னா கொத்தும்
6 உங்களை மாதிரி பெருசுங்களை ஏன் கூடவே வெச்சிருக்கேன் தெரியுமா?
?
நீங்க சொல்றதுக்கு எதிர்மறையா செய்ய #KAVAN
7 தனக்குப்பிறக்கப்போகும் குழந்தை ஆணா இருக்கனும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கே அதுதான் பெண்களுக்கு எதிரான முதல் வன்முறை #KAVAN
8 உங்களை அவங்க ஓட்டறாங்க.இதெல்லாம் ஓட்டா மாறாது #KAVAN
9 வில்லன் பஞ்ச் = நான் நினைச்சா உன் பிறந்த தேதியைத்தவிர எல்லாத்தையும் மாத்த முடியும் #KAVAN
10 எல்லா முட்டாளும் எப்பவுமே முட்டாளா இருப்பதில்லை.அவங்களுக்கும் 1,2,விஷயங்கள் தெரிஞ்சிருக்கும் #KAVAN
11 கேள்விதான் முக்கியம்னு நினைப்பவன் கத்தி கத்தி கேட்பான்.பதில்தான் முக்கியம்னு நினைப்பவன் நிதானமா கேட்பான் #KAVAN (கத்தி-விஜய் ரெப்ரன்ஸ்)
13 கன்னி கழியாம புள்ள பெத்த பொண்ணும் இல்ல.நேர்மையா இருந்த /இருக்கும் அரசியல்வாதியும் இல்ல #KAVAN ( விதி விலக்கு கக்கன் காமராஜர் அறிஞர் அண்ணா)
14 ஒரு நாறிப்போன மீனை நல்ல மீன் னு சொல்லி விக்கப்பாக்கறீங்க. #KAWAN
15 ஆம்பளை 1000 வித்தை காட்டினாலும் ஒரு பொண்ணு இடுப்பைக்காட்டினாதான் டிஆர்பி எகிறும் #KAWAN
16 மீடியாவும் , அரசியலும் ஒண்ணு சேர்ந்தா எது வேணா சாதிக்கலாம், யாரை வேணா சாகடிக்கலாம் #KAWAN
17 ரேப் பண்றவன் ஒரு டைம் தான் பொண்ணை கற்பழி க்கறான், ஆனா மீடியா தான் பிரேக்கிங்க் நியூஸ் போட்டே பல டைம் கெடுக்குது #KAWAN
18 வில்லன் டி ஆர் கிட்டே 100 கோடி தர்றதா பேரம் பேசறான் # 100 கோடி - விஜய் ரெஃப்ரன்ஸ் #KAWAN
19
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஓப்பனிங் சீன் ல டிஆர் என்ட்ரி அய்யய்யோ #KAVAN
2 கோ படம் செம ஹிட் ஆன அளவு மற்ற படங்கள் ஹிட் ஆகாததால மீண்டும் கே வி ஆனந்த் மீடியா + அரசியல் கதை யை கைல எடுத்துட்டார் போல #KAVAN
3 தனது குரு கே பாக்யராஜ் ன் சமகால படைப்பாளியான டி ராஜேந்தரை ஆர் பாண்டியராஜன் ஒருமையில் வா போ என பேசுவது அநாகரீகம் #KAVAN
4 வீர பாண்டியக்கட்ட பொம்மன் பட வசனத்தை டி ஆர் பொளந்து கட்டிட்டு இருக்காரு.கேன்ட்டீன் போய் ஒரு அருண் ஐஸ்க்ரீம் சாப்பிடனும் #KAVAN
5 டி வி ப்ரோக்ராம்களின் பித்தலாட்டங்களை தோல் உரிச்சுக்காட்றாங்க .பாவம் குஷ்பூ ,கோபிநாத் ,எக்ஸெட்ரா.#KAVAN
6 முதல்வன் அர்ஜூன் -ரகுவரன் பேட்டி க்கு இணையான ஒரு காட்சியில் விஜய் சேதுபதி கலக்கல் பர்பார்மென்ஸ் #KAWAN
7 பிரபல ட்வீட்டர் க்ரேசி கோபால் பங்களிப்பு , மகிழ்ச்சி #kawan
சிபி கமெண்ட் - கவண் - முன் பாதி மீடியாக்களுக்கு ஆப்பு வைக்கும் கலக்கல் காட்சிகள், பின் பாதி திரைக்கதை கோ பாதிப்பு , ஓக்கே ரகம் , விகடன் மார்க் - 42 , ரேட்டிங் - 2.75 / 5