1 தேர்தலில் ஓட்டு போடாதவர்கள், அரசை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை”
உச்ச நீதிமன்றம் # சினிமா பார்க்காம விமர்சனம் பண்றமே அது போல் கூடாதா?
================
2 எண்ணெய் படலத்தை அகற்றுவதில் 95 % பணிகள் முடிவடைந்துள்ளது" -OPS.# மீதி 5%வேலை முடிய 365,நாள் ஆகும்
=================
3 தனிப்பட்ட காரணங்களுக்காக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா # அய்யா.மிரட்றாங்கய்யா னு தில்லா வீரத்தோட சொல்ல முடியல போல
=============
4 1 அப்போலோ வில் ஜெ சிகிச்சை குறித்த விபரம் நாளை வெளியீடு
2 நடராஜன் உடல்நிலைசரி இல்லை என கூறி அப்போலோவில் அட்மிட்
1+1=2
===============
5 வறட்சி காரணமாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை திடீர் உயர்வு!# டிஜிட்"டல்"இந்தியாவின் பசுமைப்புரட்சி
==================
6 தீர்ப்பு எழுதும் பணி நிறைவடைந்து விட்டதாக உச்சநீதிமன்றம் தகவல். # ஜட்ஜ் அய்யாவையும் அப்போல்லோ அனுப்பிடுவாங்களோ?
==================
7 மீட்புப் பணி செலவு தொகை அந்த கப்பல் நிறுவனங்களிடமிருந்தே பெறப்படும் - மாலினி சங்கர்.#விஜய் மல்லய்யாட்ட இருந்து 6000கோடி வசூல் பண்ண மாதிரி?
==============
8 போதிய விளைச்சல் இல்லாததால் அரிசி விலை கடுமையான உயர்வு!#குடோனில் ஸ்டாக் வெச்சிருக்கும் அரிசிக்கடை அய்யாசாமிகளுக்கு செம துட்டு
=================
9 ஜெ வின் கால்கள் அகற்றப்பட்டதாக பரவிய வதந்தியில் உண்மை இல்லை” : ரிச்சர்டு பீலே # பேர்லயே பீலா இருக்கு.அதான் டவுட்டா இருக்கு
==================
10 ஜெ வுக்கு சிகிச்சை அளித்த அறையில் சிசிடிவி இல்லை”-மருத்துவர்கள் # சிசிடிவி இல்லாத அறையா ரெடி பண்ணி அட்மிட் செய்தோம் என பொருள் கொள்க
================
11 செல்போன் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் சமர்ப்பிப்பது கட்டாயம்... உச்சநீதிமன்றம்# ஆதார் கார்டு தரும்போதே செல்போன் நெம்பர் வாங்குனாங்ளே?
===============
12 வைகோவுக்கு மட்டுமல்ல சந்திக்கிற எல்லோருக்கும்தான் விசிட்டிங் கார்டு தருவேன்: லண்டன் டாக்டர் # சந்தி சிரிச்சிடுச்சு , ச
ந்திச்சதை பெருமையா சொன்னது பல்லிளிச்சிடுச்சு
=================
13 சசிகலா முதல்வராக கடும் எதிர்ப்பு: வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் எப்படி பேசுவார்? -அன்புமணி # வீடியோ கான்பிரன்ஸ் மூலம்.
=====================
14 ஓபிஎஸ் 4வது முறையாக முதல்வராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது - ஸ்டாலின் # நாம சிஎம் ஆக இன்னும் 1 மாமாங்கம் ஆகும் போலயே?
================
15 மோடி: ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக, எந்த வகையில் உதவி கிடைத்தாலும், ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு, உ.பி., முதல்வர் அகிலேஷ் தள்ளப்பட்டு
உள்ளார். # மஹாராஷ்ட்ரா வில் சிவசேனா சொல்வதை எல்லாம் சிவ சிவானு நாம கேட்டுட்டு இருக்கலை?
=======================
16 மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் # 10 வருசமா மத்திய அமைச்சர் பதவி வகித்த நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
=====================
17 யார் இருக்கக்கூடாது என்பதை, மக்களே முடிவு செய்வர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா # அதுக்கு முன் கோர்ட் முடிவு செஞ்சிடும் போலயே?
===========================
18 - இரு கட்சிகளிடம் மாட்டி, தமிழகம் தள்ளாடுகிறது. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக, ஒரு தலைமை உருவாக வேண்டும் - டிஆர் # சிம்பு “வல்லவன்” தானே? ட்ரை பண்ணலாமே?
========================
19 தமிழக அரசுக்கு, போதிய வரி வருவாய் இல்லை -தம்பிதுரை # ஆனா தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டும் எப்படியோ ஏகப்பட்ட வருவாய் வந்துடுதே எப்டி?
=======================
20 அரசுக்கு, போதிய வரி வருவாய் இல்லை -தம்பிதுரை # டாஸ்மாக் மூலம் வரும் கோடிக்கணக்கான பணம் இருக்கே?
0 comments:
Post a Comment