திருப்பூர் திரிபுரசுந்தரி , கோவை பாப்பநாயக்கன் பாளையம் பார்வதி ஓமனக்கட்டை சாரி ஓமனக்குட்டன் போன்ற பிரபல ட்வீட்டர்களெல்லாம் 1998 ல தினத்தந்தி குடும்ப மலர் கவிதைக்குப்பைகளை ரீமிக்ஸ் ரீமேக் பண்ணி ட்விட்டர்ல போடுவது போல் வில்லன் ஃபாரீன்ல இருக்கும் குப்பைகளை இந்தியாவில் வந்து போடறான். அந்த மேட்டர் தெரிஞ்ச ஒரு போலீஸ் கமிஷனரை சசிகலா ஜெ வை போட்டுத்தள்ளுனது மாதிரி முடிச்சுக்கட்டிடறான். அந்த கமிஷனர் கொலை வழக்கு நம்ம ஹீரோ கிட்டே வருது. அவர் எப்படி புரொடியூசர் செலவில் ஆந்திரா, ஆஸ்திரேலியா எல்லாம் போய் துப்பறிந்து ஜெயிக்கிறார் என்பதே கதை
அப்பா, படத்துல சொல்லியே ஆக வேண்டிய 2 முக்கிய விஷயம். 1 கேமராவை ஹரி ஒரு நிமிசம் கூட நிலையா வைக்கலை, சும்மா சும்மா ஆட்டிட்டே இருக்கார் ( பர பரப்பான திரைக்கதை வேகம் வேணும்னா அப்டி பண்ணனுமாம்) 2 படம் பூரா வா டா வாடா வாடா சிங்கம் சிங்கம்னு பிஜிஎம் ஓடிட்டே இருக்கு, காது வலி, ஷப்பா முடியல ( இதுல சிங்கம் 4 வரப்போகுதுன்னு அபாய அறிவிப்பு வேற
ஹீரோவா சூர்யா. வழக்கம் போலவே போலீஸ் கெத்து செம. அந்த யூனிஃபார்ம்லயும் சரி , எக்சிக்யூட்டிவ் டிரஸ்லயும் சரி கம்பீரமான பாடி லெங்குவேஜ் காட்றார். போலீஸ்னா விரைப்பா இருக்கனும்தான். அதுக்காக டூயட் சீனில் கூட அப்டி இருக்கனுமா என்ன?
ஹீரோயினா ஸ்ருதி.கேனத்தனமான கேரக்டர். அவரை அரெஸ்ட் பண்ணச்சொல்லி ஹீரோ ஆணையிட்டதும் லவ் வருதாம். அய்யோ தேவுடா.அது கூட தேவலை. ஹீரோ கிட்டே நன் மதிப்பு பெற தான் செஞ்ச தப்புக்கு பிராய சித்தமா வில்லன் இருக்கும் இடத்துக்குப்போய் பேட்டி எடுக்கறதா வாலண்ட்ரியா போய் மாட்டிக்குவது காமெடி, டூயட் சீன்களில் அடிக்கடி கைகளை மேலே தூக்கி அண்டர் ஆர்ம்ஸ் அட்வர்ட்டைஸ்மெண்ட் டச் தர்றார்
அழகு தேவதை அஸ்கா உதட்டழகி ( அப்போ அவர் உதடு வெள்ளையா?ன்னு கேட்கக்கூடாது ) அனுஷ்கா 2வது ஹீரோயின். வில்லன்கள் எதும் செஞ்சிடக்கூடாதுன்னு டைவர்ஸ் ஆகியாச்சுன்னு ஹீரோ சொல்வதை எதும் கண்டுக்காம இருக்கும் கேரக்டர்., வழக்கமா ஆர்டினரி பூரி மாதிரி இருக்கும் அவர் கன்னம் இந்தப்படத்தில் ஸ்பெஷல் சோலா பூரி பூல் ஓவரா உப்பி இருக்கு.( ரொம்ப முக்கியம் )
சூரி காமெடி என்ற பெயரில் 8 மொக்கை ஜோக் சொல்றார். அதில் 6 ஆல்ரெடி மதுரை முத்து 1999 ல் வெளி வந்த சாவி இதழில் இருந்து திருடி மனப்பாடம் செய்து தன்னுடைய சொந்தப்படைப்பு போலவே சொன்ன மொக்கை ஜோக்குகள்தான், மீதி 2 ஜோக் 2001ல் இதயம் பேசுகிறது இதழில் வந்தவை. இனி சுடுவது எனில் லேட்டஸ்ட் ஜோக்குகளை சுடலாமே?
முதல் 2ம் பாகங்களில் பாடல்கள் எல்லாம் செம ஹிட். அந்த அளவு 3ம் பாகத்தில் ஹிட் ஆகாதது மைனஸ்
இது போல் சீரியசான போலீஸ் சப்ஜெக்ட்க்கு மொக்கை காமெடி தேவை இல்லை ( உதா - இது தாண்டா போலீஸ் , கடமை கண்ணியம் கட்டுப்பாடு)
ஒளிப்பதிவு எடிட்டிங் 2ம் ஓக்கே , இசை சுமார் , பின்னணி இசை முடியல

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 சாதா சீன் ல கூட கேமராவை அப்டி இப்டி ஆட்டிட்டே இருக்கீங்களே?
சும்மா இல்ல.ஹரி படம் #S3
2 XXXL நளினி + S சூரி = 1 பிட் டூயட் #S3
3 ஆம்பளைங்களைக்காட்டிக்குடுக்கக்கூடாது
பொம்பளைங்களைக்கூட்டிக்கொடுக்கக்கூடாது #S3 ( பொண்ணுங்களை ன்னு எழுதி இருக்கலாம்)
4 சார்.ஹரி படத்துக்கு பிஜிஎம் எப்டி போடனும்?
சந்திரலேகா டிரம்ஸ் வாசிச்சு ஆடியன்ஸ் பொடனி லயே டொம்டொம்னு போடனும் #S3
5 சிங்கம்3 இடைவேளை.இதுவரை திரைக்கதை ஹரி பிராண்ட் ஹரிஅப் ஸ்பீடு
7 ஸ்டேஷன்ல.3பேரு உக்காந்திருக்காங்க.நடு ஆள் நெஞ்சுல கால் வெச்சு ஹீரோ உதைக்கறாரு.3 பேரும் கீழே விழறாங்க
எப்டி?
அதான் S3
8 வில்லன் பாரீன்ல இருக்கற குப்பையை இந்தியாவுக்கு வந்து கொட்றான்.ஹீரோ தடுக்கறார்.இதான் கதை
அய்யய்யோ.குப்பைக்கதை?
9 ஸ்ருதி முகத்துல 5 இடத்துல படுகாயத்தோட இருக்காரு.ஹீரோ ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போன.2,வது நிமிசம் 2 காயம்தான் இருக்கு. #S3
நச் டயலாக்ஸ்
1 எங்க ஏரியால கால் எடுத்து வெச்சே காலை வெட்டிடுவோம்
அவசரத்துல ஹேர்கட் பண்ணாம வந்துட்டேன்.அதை வேணா வெட்டிக்கோ #S3
2 ஓவரா பேசுனா எனக்குப்பிடிக்காது
அப்டி ஓரமாப்போய் பேசலாமா சார் #S3
3 சார்.நீங்க வேணா அந்த ரிப்போர்ட்டை எடுத்துப்பாருங்க
அப்போ நீங்க இன்னும் பார்க்கலையா? #S3
4 என்ன பண்றே?
சுடலை உருண்டை சாப்பிடறேன்
அப்டின்னா?
கடலை உருண்டையோட தங்கச்சி #S3 ( சூரி காமெடி)
5 இது என்ன?
விமலா ஆரஞ்சு
அப்டின்னா?
கமலா ஆரஞ்சு தங்கச்சி #S3( சூரி காமெடி)
6 ரெஸ்ட் ரூமை பார்க்கனும்
வாட்?
நீ ரெஸ்ட்.எடுத்த ரூம் எது?
யோவ்.ரெஸ்ட் ரூம்னா பாத்ரூம்யா #S3(சூரி காமெடி)
7 அனுஷ்கா வி நெக் ஜாக் போட்டிருக்கு.டூயட் சீன் ல கேமராமேன் க்கு ஆங்கிள் எப்டி வைக்கனும்னு தெரில
ஏன்?
அதான் தெரில னு சொல்றேனே? #S3
8 ஆசைப்பட்டு கை வெச்சானா?அனுதாபப்பட்டு கை வெச்சானா?ன்னு ஒரு பொண்ணுக்குத்தெரியாதா? #S3
9 எவிடன்சை விட எமோஷன(லை) நம்பறவன் நான் #S3
11 என்ன லே?
வாழை எலே #S3( சூரி காமெடி)
12 நீங்க எப்டி இவரைக்கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?
ஏமாத்தித்தான் #S3( இமான் அண்ணாச்சி காமெடி)
13 மம்மி.நான் செகண்ட் ஹனிமூன் க்கு ஆஸ்திரேலியா போறேன்
யார் கூட?
டம்மி மம்மி.என் புருசன்கூடதான் #S 3 (அனுஷ்கா காமெடி)
15 டைவர்ஸ் பண்ணினா மேரேஜ் அப்போ வாங்குன மொய்யைத்திருப்பித்தரனும்னா ஒருபய டைவர்ஸ் செய்யமாட்டான் #S3 சூரிகாமெடி (1999 சாவி - உ ராஜாஜி ஜோக்
16 பணம் சம்பாதிக்கறது தேவைக்கு இல்ல.போதைக்கு.ஐ மீன் பணம் சேர்த்தறதே ஒரு போதை #S3 வில்லன் பஞ்ச்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 க்ளைமாக்சில் வில்லன் ஃப்ளைட்டில் ஏறி ரன்வேயில் போகும்போது ஹீரோ ஜீப்பில் விமானம் முன் நிறுத்திப்பிடிப்பது எல்லாம் சாத்தியமே இல்லாதது. அம்மா இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்பது போல் கொஞ்சம் கூட நம்பவே முடியாத சீன்
2 கல்யாணம் ஆகி முதல் 3 மாசம் அல்லது 6 மாசம் வரை தான் தம்பதி அந்நியோன்யம் இருக்கும். மேரேஜ் ஆகி பல வருடங்கள் ஆன பின்பும் அனுஷ்கா சூர்யா முகத்தை என்னமோ காணாததைக்கண்ட அபூர்வப்பொருளாய் பிரமிப்பாய் பார்த்துட்டே இருப்பது எப்படி?
3 100 கிமீ வேகத்தில் போகும் ட்ரக் வண்டியை அதை விட சைசில் , வெயிட்டில் 10 மடங்கு கம்மி ஜீப்பால் ஓவர்டேக்கி ட்ரக் முன்னால் வழி மறிப்பது ஆக்சன் இல்லை, காமெடி
4 ரோபோ ஷங்கர் முகத்தில் எதுக்கு கரி அப்பின மாதிரி ஒரு மேக்கப் . தூறல் நின்னு போச்சு படத்தில் பாக்யராஜ் தன் நண்பரிடம் ஆயில் தந்து முகத்தில் பூசிக்கச்சொல்வார் அது போல
5 படத்தின் மெயின் தீம் மெடிக்கல் குப்பை , எலக்ட்ரானிக் குப்பை கடத்தல். அது சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக மனதில் பதியவில்லை

சி.பி. கமெண்ட் - சிங்கம் 3- சூர்யாவுக்கு ஒரு சராசரி ஹிட்.1,2 பாகத்தைவிட கம்மி .விகடன் =41 .ரேட்டிங் = 2.5/ 5
0 comments:
Post a Comment