ஒப்பம்னு ஒரு சூப்பர் ஹிட் க்ரைம் த்ரில்லர் , புலி முருகன் -னு ஒரு மெகா ஹிட் கமர்ஷியல் 100 கோடி( நிஜ) வசூல் படம் என ஏற்றப்பாதையில் போன மோகன் லால்க்கு ஒரு சுமார் ரக படம் இது.
40 வயசுக்குப்பின் ஆணுக்கு நாய்க்குணம் வரும்னு ஒரு பழமொழி உண்டு,அது போல் 17 வயசுப்பொண்ணு, 10 வயசுப்பையன் உள்ள ஒரு தம்பதி,தான் ஹீரோவும் ஹீரோயினும்.
ஹீரோ ஒரு ஒரு சிடுமூஞ்சி. யார் கிட்டேயும் சிரிச்சுப்பேசவே மாட்டார்.சொந்த சம்சாரம் கூட சிரிச்சுப்பேசியே பல மாமாங்கம் ஆச்சு.அப்பேர்ப்பட்டவரை அவரோட ஃபிரண்ட் உசுப்பேத்தி விடறார். ஹீரோவோட ஃபிரண்ட் பிரபல ட்வீட்டர்கள் மழையின் காதலன், சட்டம்பி ஸ்டாலின் மாதிரி ஏகப்பட்ட கேர்ள் ஃபிரண்ட்ஸ் கிட்டே கடலை போட்டு கிடைச்ச ஃபிகரை மடக்கற ஆளு.
மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்துச்சாம்னு சொலவடை உண்டு.அது போல் ஒழுங்கா இருந்த ஹீரோவை ஃபிரண்ட் உசுப்பேத்தி கெடுக்கறார். ஹீரோ பஞ்சாயத் போர்டு ஆஃபீஸ்ல செகரட்டரி. பியூட்டி பார்லர் வைக்க அனுமதி கேட்டு வரும் ஒரு லேடியை கரெக்ட் பண்ண ஐடியா பண்றார்.சின்ன வீடு கே பாக்யராஜ் கணக்கா இடைவேளை வரை கலாட்டாவா படம் போகுது.
அதுக்குப்பின் திரைக்கதைல இயக்குநருக்கு ஒரு குழப்பம்.இப்டியே கதையை கொண்டு போனா யாராவது கிண்டல் பண்ணுவாங்க, படிப்பினைப்படமா எடுக்கனும்னு சாணக்கியத்தனமா யோசிக்கிறார். ஹீரோவோட பொண்ணு லவ்மேட்டர்ல சிக்குது. அது என்ன ஆச்சு? என்பதை நோக்கி திரைக்கதை மடையை திருப்பி விடறார்.
புலி முருகன்கற மாஸ் மசாலா படம் பார்த்த சூட்டோடு வரும் ரசிகர்கள் இது மாதிரி ஒரு ஜொள் பார்ட்டி கேரக்டரில் ஹீரோ மோகன்லாலை ஏத்துக்குவாங்களா? என்பது டவுட் தான். காட்சிகள் , திரைக்கதை சம்பவங்கள் பல குடும்பத்தோடு பார்க்க நெளிய வைக்குது. இதை சரிக்கட்ட சால்ஜாப்பாய் ஒரு சப்பைக்கட்டு வசனம் ஆங்காங்கே வருது “ அம்மா அப்பா வோட அந்நியோன்யம் பார்த்து குழந்தைங்க வளரனும், அப்போதான் நல்லது அவங்க எதிர்காலத்துக்கு.” அப்டினு ஒரு கருத்தை படம் நெடுக 4 டைம் ரிப்பீட்டா சொல்றாங்க
நாயகியா மீனா.கிட்டத்தட்ட பிந்து கோஷ் ரேஞ்சுக்கு உப்பிப்போய் இருக்கார். எஜமான்ல ஸ்லிம்மா செமயா வந்தவரை திடீர்னு இப்டி பார்த்தா நம்ம ஆளுங்க அதிர்ச்சில ஜெர்க் ஆகிடுவாங்க.ஹீரோவோட இவர் செய்யும் ரொமான்ஸ்கள் எல்லாம் சுமார் ரகம்தான், எடுபட்லை
ஹீரோவின் நண்பரா வரும் அனூப் மேனன் காமெடி எடுபடுது. டபுள் டெக்கர் ரோல் ஆச்சே? ரசிக்காம இருப்பாங்களா? அவரோட மனைவியா வரும் சிருந்தா ஆசப் நல்ல ஒரு ஹோம்லி லுக் ஃபிகர். எதிர் காலம் உண்டு
கே பாலச்சந்தர் படங்களில் ஒரு சாதா கேரக்டர் கலக்கும், அது போல் ஹீரோ ஆஃபீஸ் கிளர்க்காக வரும் அந்த மாநிற மங்கம்மா செம கலக்கல் நடிப்பு
ஹீரோவின் மகளாக வரும் எய்மா ஒரு மினி நக்மா. தேறிடும்
சபாஷ் இயக்குநர்
1 வெள்ளி மூங்கா எனும் தன் முதல் படத்தில் பொலிடிக்கல் காமெடி படம் தந்த இயக்குநர் இந்தப்படத்தில் ஒரு ஃபேமிலி ஆடியன்ஸ் ஃபிலிம் எடுக்க முயற்சித்து 50% வெற்றி பெற்றிருக்கார்.
2 ஆஷா சரத் 10 நிமிஷம் வந்தாலும் அமரர் சுஜாதாவின் 10 செகண்ட் முத்தம் கதை போல் மனசில் பதிய வைத்தது
3 இசை பிஜூ பால் & ஜெயச்சந்திரன். 3 பாடல்கள் செம ஹிட். ஒளிப்பதிவும் பக்கா
4 கில்மா லேடியின் டி சர்ட் வாசகம் " NEED PERSONAL COACH" அப்ளாஸ் அள்ளுச்சு
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஸ்கூல் , காலேஜ் படிக்கும்போதே தன்னை லவ்விய ஆஷா சரத் பல வருடங்களுக்குப்பின் கெட் டுகெதர் நிகழ்ச்சியில் தன்னை சந்திக்கும்போது அதே லவ் இப்பவும் உண்டு என சொல்றார். ஜெர்சிப்பசு மாதிரி இருக்கும் அந்த ஃபிகரை கரெக்ட் பண்ணாம பக்கா ஐயிட்டம் போல் இருக்கும் அந்த பியூட்டி பார்லர் லேடி க்கு ஹீரோ பிட் போடுவது ஏன்?
2 +2 படிக்கும் மாணவி தன் அம்மாவிடம் “குட் நைட்”என டபுள் மீனிங்கில் சொல்வதும் மீனா வெட்கப்பட்டுக்கொண்டே பெட்ரூம் கதவை சாத்தி கணவருடன் ஜல்சாவில் ஈடுபடுவதும் கண்றாவி
3 டீன் ஏஜ் வயசில் வாரிசு இருந்தால் பொதுவா தம்பதிகள் அரசல் புரசலா அறியாம தெரியாம மிட் நைட்ல சந்திப்பாங்க. இப்டி பெப்பரப்பேன்னு வாரிசுகள் முன்னாலயே பெட்ரூம் கதவை சாத்துவாங்களா? ஃபாரீன்ல தான் இப்டி தனி ரூம் கலாச்சாரம்
4 ஹீரோவின் ஃபிரண்ட் விபத்தில் சிக்கியதும் அவரோட ஃபோனுக்கு வரும் லேடீஸ் கால் நெம்பர்களுக்கு மனைவி “ விபத்தில் இறந்துட்டார்” என மெசேஜ் அனுப்பறாராம், அப்போ இருந்து எந்த காலும் வர்லையாம். அதை கன்ஃபர்ம் பண்ணக்கூட எந்த என்கொயரியும் வராதா?
5 அனூப் பின் மனைவி அவரது கணவர் போலவே பலருடன் ஃபோனில் கடலை போடுவதும் அதை கணவர் துப்பறிந்து யார் யார் அவர் என கண்டு பிடிப்பதும் மகா மட்டம்
6 டிண்ட்டோ பிராசின் கில்மாப்படங்களில் தான் கணவன் தன் மனைவியிடம் மனைவியின் அனுபவங்கள் பற்றி கதை கேட்டு ரசிப்பார். இதிலும் ஹீரோ மனைவியிடம் அவரது 3 கதைகளை அவரிடம் ஜொள் விட்ட 3 பேர் கதையை கேட்பது 3 பேரை தன் வீட்டுக்கே வர வைத்து அலப்பறை பண்ணுவது எல்லாம் ஃபேமிலி ஆடியன்ஸ் வைத்திருக்கும் மோகன் லாலுக்கு உரிய திரைக்கதை அல்ல
7 அந்த கில்மா லேடியின் ஃபாரீன் புருசன் “இன்னும் 4 பேருக்கு பணம் தரனும், என் மனைவி சொன்னா “ எனும்டயலாக் கை தட்டல் அள்ளுது, ஆனால் மட்டமான ரசனை
நச் டயலாக்ஸ்
1 ஒரு ஆள் ஒரு நாள் லீவ் போட்டா பூட்டி விடும் ஆஃபீஸ்/ கம்பெனி இவ்வுலகில் எங்கும் இல்லை
2 என்னைப்பற்றி எப்பவாவது நினைத்தது உண்டா?
உண்டென்றால் அது பொய்
ஓ, இல்லை என்றால் அது எனக்கு மெய் வருத்தம்
3 வாழ்ந்து வாழ்ந்து வாழ்க்கை ட்ரை (DRY) ஆகிடுச்சு
4 வீட்ல சந்தோஷமே இல்லை
யாரும் சந்தோஷத்தை டோர் டெலிவரி செய்ய மாட்டாங்க, நாம தான் சந்தோஷத்தை உருவாக்கனும்
5 காதல் பிறக்கும் இடத்தில் கள்ளத்தனமும் பிறக்கும்
6 தனிமை நான் விரும்பாத கொடுமை
7 கணவனின் அன்பின் வசப்பட்ட மனைவியின் முகத்தில் பொலிவு கூடுவது சகஜம்
8 உலகில் எத்தனை இடம் இருந்தபோதும் எல்லோரும் விட்டு வர விரும்பாத இடம் தான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த இடம்
9 சர்க்கார் உத்யோகம் என்பது சதுரங்கக்காய்கள் பலிகடா ஆக்கப்படும் சதுரங்க பலகை போல , எப்போ எங்கே தூக்கி அடிக்கப்பட்வோம் என்பது தெரியாது
10 வீடு தான் போதை, வீட்டில் இருப்பவர் சந்தோஷம் தான் சொர்க்கம்
சி,பி கமெண்ட் - முன் பாதி சின்ன வீடு , பின் பாதி வழக்கு எண் 18/9. ஏ பி சி என எல்லா செண்ட்டர்களிலும் மீடியமா ஓடிடும். மோகன் லாலுக்கு பேர் கெடுக்கும் படம், ரேட்டிங் = 2.5 / 5
Release date: 22 December 2016 (India)
Language: Malayalam
Music director: M. Jayachandran, Bijibal
0 comments:
Post a Comment