1 : எம்.ஜி.ஆரும், ஜெவும் எதிரிகளிடம் இருந்து போராடி, அ.தி.மு.க.,வை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். அவர்கள் வழியில், அ.தி.மு.க.,வை தொடர்ந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.-சசிகலா # உங்களுக்கு மக்கள் “தீபா”ஆராதனை எடுத்து வரவேற்கறாங்களாமே?
=================
2 கட்சிப் பணியாற்ற பொறுப்புகள், பதவிகள்
அவசியமில்லை.-நாஞ்சில் சம்பத் # ஒரு இன்னோவா கார் மட்டும் போதும்கறீங்களா?
================
3 தி.மு.க., கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதே எங்கள் விருப்பம். ஆனால், இதை எல்லாம் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.-EVKS # முடிவு எடுப்பது ராகுலின் மம்மி, நாங்க எல்லாம் டம்மி?
======================
4 தீபா ஆதரவாளர்கள் ஈரோட்டில் புதிய கட்சி துவக்கம்!:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க., என பெயர்:கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி அறிமுகம்:ஆதரவு பெருகுவதால் சசிகலா வட்டாரங்கள் கலக்கம் # பெரும்பாலான அரசியல் திருப்பங்கள் ஈரோட்டில் தான் துவங்கி இருக்கு
==============
5 பிப்ரவரி 28–ந் தேதிக்குள் வங்கி கணக்குடன் ‘பான் கார்டு’ எண்ணை இணைக்க வேண்டும் வருமானவரித்துறை # இனி பேன் கார்டு வாங்கவும் வரிசைல நிக்கனுமா?
==================
6 ஏப்ரல் 1–ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் -மத்திய அரசு # ஆதார் அட்டை வேணும்னா ரேஷன் கார்டு, வோட்டர்ஸ் ஐடி கட்டாயம்?
================
7 மோடிக்கு அடுத்த தலைமுறையை பற்றிய யோசனை - அருண் ஜெட்லி # அப்போ இந்த தலைமுறை தலைவிதி அவ்ளோவ் தானா?
=================
8 அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச முதல்–மந்திரி மட்டுமே ‘சமாஜ்வாடி கட்சிக்கு நான்தான் தலைவர்’ முலாயம் சிங் # மாப்ளை அவருதான், ஆனா சர்ட் என்னுது
=============
9 செல்லாத நோட்டு அறிவிப்பு சாதனை - ஜெட்லி # உங்களுக்கு சாதனை எங்களுக்கு வேதனை, தினமும் ரோதனை
==================
10 எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு: தீபா அறிவிப்பு # அதிமுக வின் வீரம் இனி தான் ஆரம்பம்?
=================
11 111 , மத்திய அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது-ராபர்ட் வாத்ரா # அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, ஒதுங்கியே இருக்கேன்னு சொன்ன உங்க இரட்டை வேடமும் வெளிச்சத்துக்கு வந்துடுச்சே?
===================
12 செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.-மன்மோகன் சிங்: # காங்கிரசுக்குத்தானே?
===================
13 திருநாவுக்கரசர், தான், அ.தி.மு.க.,வில் இருந்திருந்தால், cm ஆகி இருப்பேன் என்கிறார் பா.ஜ.,வில் இருந்திருந்தால், அவர் pm ஆகி இருப்பாரா?-EVKS# அப்போ அமெரிக்காவில் இருந்தா ஒபாமா ஆகி இருப்பாரா?
==================
14 டிஜிட்டல் பொருளாதார நாடாக மாறும் இந்தியா! முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பெருமிதம் # எப்பவும் தியரி ஈசி, பிராக்டிகல் கஷ்டம்
=====================
15 சென்னையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் திரண்டது பாராட்டிற்குரியது; வரவேற்கத்தக்கது. அதற்காக, சட்டத்தை மீறக்கூடாது-தமிழிசை # இதை காவேரி தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடகா அரசின் காதில் சொல்லவும்
====================
16 தமிழகத்தில், ஜல்லிக்கட்டை குழிதோண்டி புதைத்தவர்கள், சோனியா, கருணாநிதி, ஜெய்ராம் ரமேஷ்- எச்.ராஜா # உங்களுக்கு ஓட்டுப்புதையல் வேணும்னா புதைச்சதை தோண்டி எடுத்து மீட்கவும்
==============
17 சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்துவோம்-பொன்னையன் # ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாதுன்னுதானே இப்போ சட்டமே இருக்கு?
=================
18 'அம்மா' உணவகங்களால் மாநகராட்சிக்கு நஷ்டம்... ரூ.120 கோடி! # இதான் சாக்குன்னு சின்னம்மா உணவகம்னு மாத்திடுங்க. நஷ்டமும் சின்னதா குறைஞ்சிடும் இல்ல?
=================
19 ஜெ., ஜோதிடருக்கு 'கல்தா' ; சசிக்கு மூன்று பேர் நியமனம் # இது சரிதான். மரண யோகம் இருப்பதை எச்சரிக்கத்தவறிய ஜோதிடர்க்கு இனி என்ன வேலை?
==================
20 பொதுத்துறை வங்கிகள் மீது அதிக புகார்: ரிசர்வ் வங்கி தகவல் # அரசாங்க வேலைதானே? யாரும் எதும் பண்ன முடியாதுன்னு அலட்சியம்
======================
0 comments:
Post a Comment