Friday, December 02, 2016

இந்தியாவிலேயே “தண்ணி” பிரச்னையே இல்லாத ஒரே மாநிலம் எது.?

தனுஷை பிரிந்த பிறகுதான் ஹீரோ ஆனேன் -ஜி.வி.பிரகாஷ் டிவீட்,# எனக்கென்னமோ நீங்க பலருக்கு வில்லன் ஆகிட்டீங்கனு தோணுது


===========



2 புனே தொழிலதிபரிடம் ரூ.1.11 கோடி பறிமுதல் : அனைத்தும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் # வாட் எ நெம்பர்?111=நாமம்



==============



3 பண பற்றாக்குறை எதிரொலி: ரூ.500 செலவில் திருமணம் செய்த குஜராத் ஜோடி # கோயில்ல தாலி கட்னா அன்னதானத்தை யூஸ் பண்ணிக்கலாம்



=============



4 பெல்ஜியத்தில் 19 வருடங்கள் கழித்து மனைவி ஆண் என தெரிந்து அதிர்ச்சியடைந்த கணவன் # சபரி மலைக்கு 48 நாள் தானே மாலை போடுவாங்க? 6935 நாட்களா?




=============



5 மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் போராட வேண்டும்.-கனிமொழி # போலீசுக்கு பயந்து திருடங்க எல்லாரும் திட்டம் போட்ட மாதிரி இருக்கே?


==============

6 திமுக, அதிமுகவை குறைகூறும் தகுதி பாஜகவிற்கு இல்லை - கனிமொழி தாக்கு # ஓஹோ.உங்க 2,தரப்பு லெவலுக்கு ஊழல் பண்ணி இருக்கனுமா?

============

7 வேந்தர் மூவிஸ் மதனுக்கு 2 மனைவிகள்தான்... கள்ளக்காதலிகள் இல்லை - தாய் தங்கம் # கள்ளக்காதலிகள் காலனி ன்னு தனியா கட்டி இருக்காராம்


=================


8 கிருஷ்ணகிரியில் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது # பழைய நோட்டு வாங்கி மாட்டிக்கிட்டார் போல


================

9 ரூபாய் நோட்டு விவகாரம்.. கேரளாவில் நவ.28-ல் முழு அடைப்பு # மாசா மாசம் ஏதோ ஒரு காரணத்தை வெச்சு பந்த் நடக்குது.பொருளாதாரம் பாதிக்கும்

==============

10 சம்பாதித்த பணத்தை, வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல், மக்கள் தவிக்கின்றனர்-தயாநிதி மாறன் # மக்கள்னு இவர் சொல்வது சன் குழுமம்னு நினைக்கறேன்


====================

11  மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றிணையாத, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் இன்று, கறுப்புப் பண விவகாரத்தில் கைகோர்த்திருக்கின்றன -தமிழிசை  # 2 கட்சிக்கொடிலயும் கறுப்பு கலர் இருக்கே?


====================


12 ரூ.400 கோடி கள்ள நோட்டு ஒழிக்கப்பட்டுவிட்டது: மத்திய அரசு தகவல் # எத்தனை கோடி ஒளிக்கப்பட்டிருக்கோ இன்னும் ?


================



13 364 வயாகரா மாத்திரைவாங்கி சர்ச்சையில்சிக்கியதென்கொரியா பெண்அதிபர் # ஏம்மா மின்னல்.இன்னும் 1 வாங்கி இருந்தா ஒரு வருசத்துக்கு நோ இன்னல்



===========



14 அமெரிக்க அதிபர் தேர்தல்: மறுபடி ஓட்டு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை கலைஞர் பார்முலாவையே பாலோ பண்ணா எப்டி?



==============



15 மோடி,க்கு தைரியம் இருந்தால், பார்லிமென்டை கலைத்து விட்டு, புதிதாக தேர்தலை நடத்த முன்வர வேண்டும்-மாயாவதி #பாதிக்கிணறு தாண்டிட்டு இருக்கும்போது ஸ்டாப்/அட்டாக் சொன்னா எப்டி?.



=================


16  நவ்ஜோத் சிங் சித்து, ஒரு சுயநலவாதி; சந்தர்ப்பவாதி. அரசியலில், தன்னை வளர்த்த கட்சியை விட்டு, சுயநலத்துக்காக வெளியேறியவர்-பிரகாஷ் சிங் பாதல் # வை கோ போல சித்து விளையாட்டில் வல்லவர் போல


===================

17  மக்களின் குடிநீர் பிரச்னையை  , அரசு போக்க  வேண்டும்.-விஜயகாந்த் # அதை விடுங்க,இந்தியாவிலேயே “தண்ணி” பிரச்னையே இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான்


====================

18  நோட்டுகளை செல்லாததாக அறிவித்த மத்திய அரசின் முடிவு, பெரிய பலனை தராது. பெரும் பண முதலைகள் சிக்க மாட்டார்கள்-சுதர்சன நாச்சியப்பன் # ஆனா முதலைக்கண்ணீர் வடிச்ட்டு இருப்பதாக்கேள்வி


====================

19  தேர்தல் கூட்டணி என்பது, தேர்தலுக்கு தேர்தல், அவ்வப்போது நிலவும் அரசியல் சூழலைப் பொறுத்து மாறக்கூடியது- திருமாவளவன் # அரசியல்னாலே பச்சோந்தித்தனம்தான்னு பதவிசாச்சொல்றாரு


====================

20   ரூபாய் நோட்டு தடையால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்துள்ளது: மனோகர் பாரிக்கர் # அப்போ போலீசுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படுமா? ஐ ஜாலி


=======================

0 comments: