1 ஹெல்மட் கட்டாயம் என்பதையே நடைமுறைப்படுத்த முடியல.500 ரூ 100ரூ செல்லாது என்பதை எப்டி அதுக்குள்ள நடைமுறைப்படுத்த முடியும்?
=============
2 மோடி அறிவிப்புப்படி.1000 ரூ ,500 ரூ இனி செல்லாது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது.கால அவகாசம் தராமல் கழுத்தறுப்பது தவறு
=============
3 30/12/2016 க்குள் எல்லா.1000,500 ரூ நோட்டையும் பேங்க் ல ஒப்படைச்சு மாத்திக்கனும்னா இனி கலைஞர் ,ஜெ எல்லாம் பரிதவிச்சுப்போய்டுவாங்க இல்ல?
===============
4 விஜய் ஆண்ட்டனி யின் பிச்சைக்காரன் பட டயலாக் கேட்டுத்தான் மோடி 500 ரூ ,1000 ரூ நோட்டை ஒழிக்க ஐடியா பண்ணாரா?ன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?
=============
5 மோடியின் இந்த திட்டத்தால் கறுப்புப்பணம் வெள்ளை ஆகாது.பேங்க் ஊழியர்கள் ,கமிஷன் ஏஜெண்ட்கள் செமயா சம்பாதிப்பாங்க
============
6 அன்பே! நீ ஒரு 1000 ரூ நோட்டு
நான் ஒரு 500 ரூ நோட்டு
உங்கப்பா ஒரு 9ரூபா நோட்டு
மொத்தத்தில் எல்லோரும் இனி செல்லாக்காசு
==============
7 நாங்கள் ஆட்சிக்குவந்தால் எல்லா நோட்டும் செல்லும்படி செய்வோம்னு கலைஞர் ,ராகுல் எல்லாம் இன்னும் ஆரம்பிக்கலையா?
===============
8 அமெரிக்கால ஓட்டு எண்ணிட்டிருக்காக.இந்தியாவில் நோட்டு எண்ணிட்டிருக்காக.ஒரு பய தூங்கி இருக்க மாட்டான்
=============
9 இனிமேலாவது ஜோக் ரைட்டர்சை மதிங்க.ஒரு காலத்துல மொக்கை ஜோக்னு ஒதுக்கப்பட்ட பிச்சைக்காரன் பட காமெடி தான் இப்போ நாட்டோட ஹாட் டாபிக்
==============
10 மோடியோட அடுத்த திட்டம் எந்த பண பரிவர்த்தனையும் செக் மூலமாத்தான் என்பதாய் இருக்குமோ.செத்தாண்டா சேகரு
===============
11 மோடின்னா சும்மா ஊர் உலகம் சுற்றும் வாலிபன் போல் இருப்பார்னும் செல்பி எடுக்கும் குல்பி ன்னு ம் நினைச்சீங்களா? வெச்சார் பாருய்யா வேட்டு
===============
12 எழுத எதுவும் தோணலைன்னு கவலையோட இருந்த FB போராளிகள் எல்லாம் மள மளனு 500 ரூ 1000 ரூ நோட்டு தடை பற்றி கருத்து சொல்ல ஆரம்பிச்சிருப்பாங்களே?
================
13 மோடிக்கு ஒரு கேள்வி.கருப்புப்பணம் வெச்சிருக்கறவன் நகைக்கடைல போய் தங்கமா வாங்கி வீட்ல பதுக்கி வெச்சுக்கிட்டா இன்னா செய்வீக?
==============
14 மாஸ் அறிவிப்பு 1 வரப்போகுதுனு தனுஷ் சொன்னாரு.மோடி சொல்லாம வெச்சு செஞ்சுட்டாரு
================
15 சன் டிவி யோட அப்டேட்டிங் ஸ்பீடு ஆச்சரியம்.நாடு முழுதும் பரபரப்பைக்கிளப்பிய மேட்டரின் ஆதி மூலம் பிச்சைக்காரன் படம் வரும் ஞாயிறு
=============
16 டொனால்டு டக் ஆவார்னு பாத்தா டொனால்டு டிக் ஆகிட்டாரே?
=================
17 இனிமே பேங்க் ல கொள்ளை அடிப்பவர்கள் 100 ரூ நோட்டுக்கட்டா பார்த்து அடிக்கனும்.தூக்கிட்டுப்போக சிரமமா இருக்கும்
================
18 பிரைவேட் பைனான்ஸ் /பேங்க் மற்றும் லோன் வசூல் செம.கிள்ளிக்கொடுத்தவங்க அள்ளிக்கொடுக்கறாங்க என தகவல்
==============
19 மெகா ஜாக்பாட்.=,நகைக்கடை ஓனர்ஸ்
ஜாக்பாட் =,பிரைவேட் பேங்க் /பைனான்ஸ் லோன் செக்சன்
ஜாக் =,பேங்க் ஆபீசர்ஸ்.,புரோக்கர்ஸ்
==============
20 எதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட பணமா வாங்கக்கூடாது.செக் தான் னு செக் வெச்சிடுவாக .எல்லா பணமும் அரசு பார்வையில்
================
0 comments:
Post a Comment