1 புகை பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு -BBC நியூஸ் # மட்டற்ற மகிழ்ச்சி.காற்றை மாசுபடுத்தும் மடையர்களுக்கு சரியான தண்டனை
===========
2 18 வயது பெண்ணை தாயாக்கிய 12 வயது சிறுவன் மீது வழக்கு #சிறார் பள்ளியில்படிக்க தீர்ப்பு வரும்.அவன் ஸ்கூல் டீச்சரை கரெக்ட் செய்வான்
==========
3 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயார் -கேரள அரசு#, சபாஷ்.பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஜொள்ளிக்கிட்டு இருமுடி கட்டு
============
4 இன்று நள்ளிரவு முதல் 500, 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது: பிரதமர் மோடி அறிவிப்பு
#நல்ல.வேளை.நேற்று முதல் செல்லாதுன்னு சொல்லல
============
5 மத்திய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு # போலீசைப்பார்த்து திருடன் தானே பயப்படனும்.நீங்க ஏன் பம்மனும்?
===================
6 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது, மிகப்பெரிய தவறாகி விட்டது.-பிரேமலதா# நாம எதைத்தான் சரியா செஞ்சோம்?மிச்ச மீதியை வை கோ வெச்சு செஞ்சிட்டாரு
================
7 ரூ.500, 2000 ரூபாய் நோட்டுக்களில் நவீன டெக்னாலஜி.. பதுக்கினால் செயற்கைக்கோள் கண்டுபிடித்துவிடும்!# இதுக்கும் நம்ம அரசியல்வாதிங்க புது ரூட்டு கண்டுபிடிப்பாக
==============
8 காவிரி பிரச்னை பற்றி பிரதமரிடம் முறையிடுவது குறித்து, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. -ஸ்டாலின் # ஆளும் கட்சியே நாங்க தான்னீங்களே? நீங்களே ஒரு முயற்சி எடுக்கறது
=====================
9 குரூப் - -1 தேர்வுக்கான வயது வரம்பை, 35 வயதிலிருந்து, 40 வயதாக உயர்த்த வேண்டும்.-அன்புமணி # சுறுசுறுப்பா வேலை செய்வாங்கன்னு பிரைவேட்ல எல்லாம் 20 டூ 25 தான் ஆள் எடுக்கறாங்க
==================
10 ஆட்சி கனவில் மிதக்கும் ஸ்டாலின், பதவி வெறிக்கு உள்ளான தன் கட்சி நிர்வாகிகளைத் தக்கவைக்க தடுமாறுகிறார்.-வைகைச்செல்வன் # பொதுவா மிதப்பவர்கள் சீக்கிரம் மூழ்கிடுவாங்க, இது உலக நியதி
================
11 500, 1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுத்திருக்கலாம்: மு.க.ஸ்டாலின் # அவகாசம் குடுத்திருந்தா அந்த.1,3/4 லட்சம் கோடியையும் ம்ம்
===============
12 செல்வராகவன் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டதாம்! # சபாஷ்.என் கண்ணுக்கு அப்டியே இன்னொரு கண்ணுக்குள் நிலவு ஜொலிக்குது
===========
13 அமெரிக்காவின் 45-வது அதிபராகிறார் டொனால்ட் ட்ரம்ப்! # இது இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பின்னடைவு
==============
விடியவிடிய நகை வாங்க அலைமோதிய கூட்டம் - செய்தி # டிஸம்பர் 30 வரை டைம் இருக்கு.அடிச்சுக்காதீங்க ஏட்டய்யா
14
===============
15 ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தால் 200 %அபராதம்: மத்திய அரசு அறிவிப்பு # வெவ்வேற பேங்க்ல 49999 ரூபாயா 5 பேங்க்ல கட்னா?
===========
16 ஜல்லிக்கட்டை கம்யூட்டரில் விளையாடுங்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி - செய்தி # பெரிய படிப்பெல்லாம் படிச்சிருப்பார் போல.அறிவோ அறிவு
=============
17 ரூபாய் நோட்டில்
தாஜ்மகால் சின்னத்தைப்
போடவேண்டும்
# ஆல்ரெடி.1000 ரூ ,500 ரூ க்கு சமாதி கட்டியாச்சே.மறுபடி ஒரு சமாதி?
-சரத்குமார்
===============
18 திமுகவின் தொடர் முயற்சியால் மத்திய அரசு மீத்தேன் திட்டத்தை கைவிட்டிருக்கிறது -ஸ்டாலின் #மோடி ஜப்பான் போய்ட்டார்னு என்ன வேணா அளக்கலாம் போல
============
19 தெய்வத்தையும், மக்களையும் நம்பி, தே.மு.தி.க., போட்டியிடுகிறது. -பிரேமலதா: # அப்போ உங்க மேலயும் , உங்க கட்சி மேலயும் உங்களுக்கே நம்பிக்கை இல்லை?
==================
20 பிரதமர் எது செய்தாலும், சரியாக தான் இருக்கும்.-இல.கணேசன் # சரியா இருந்தா சரி. ஒரே வரியா இருக்கே?
=======================
0 comments:
Post a Comment