Tuesday, November 29, 2016

பெண்களைக்கவர்வது எப்படி?

1  நெற்றியில் முத்தம் கிடைத்தால் அது சாதம்.

கன்னத்தில் முத்தம் கிடைத்தால்
அது பிரசாதம்.
உதட்டில் கிடைத்தால் அது வரப்பிரசாதம்


=============

2 மேடம்.மாடில போர்சன் காலியா இருக்கா?ன்னு கேட்கறீங்களே?ஏன்?கிரவுண்ட் ப்ளோர் வேணாமா?


அப்சரா.மேட்சுக்கு மேட்ச்.


==============

3 காமெடி நடிகர்களில் சமூக நல ஆர்வலர்கள்

1,என் எஸ் கிருஷ்ணன்
2 விவேக்
3 ஆர் ஜே பாலாஜி


============

4 ஹீரோக்களில் சமூக நல ஆர்வலர்கள்


1 எம் ஜி ஆர்
2 விஜயகாந்த்
அது போல் காட்டிக்கொள்பவர்கள்
3 கமல் 1 ரஜினி
2 விஜய்


=============

5 உண்மையான அன்பாக இருந்தாலும் அவ்வப்போது புதுப்பிக்கப்படாத ,வெளிப்படுத்தாத அன்பிற்கு ஆயுள் குறைவு

===============

6 அநியாயம் எங்கே நடந்தாலும் தட்டிக்கேட்பதில்லை, ஆனால் உண்மையான அன்பு யாரால் தரப்பட்டாலும் தட்டிக்கழிப்பதில்லை



================



மிஸ்! உங்க லவ்வர் மழைச்சேறு ரோட்டில் வழுக்கி விழுந்துட்டாரா??


யா, எப்டி தெரியும்?
மழைக்கால மண் வாசம் அவன்அப்டினு கவிதை எழுதி இருக்கீங்களே

=============

8 தினமும் நாம் உடுத்தும் உடைகளை வாரம் ஒரு நாள் நாமே துவைத்து, காய வைத்து ,அயர்ன் செய்வதில் கொஞ்சல் சலிப்பும் ,நிறைய ஆத்ம திருப்தியும்

===========

9 எல்லோரும் மகிழ்ச்சியாய் இருக்கும் நாள் அவரவர் பிறந்தநாள்.மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாள் அன்புக்கு உரியவர் பிறந்தநாள்

============

10 டாக்டர்! நம்
மனதை மாற்ற என்ன செய்யனும்?

புது ஊருக்கு புது சூழ்நிலைக்கு போய்ட்டா பழைய நினைவுகள், பிரச்சனைகள் தற்காலிகமா தள்ளிப்போகும்

===============


11 ராஜ்மவுலி ரேஞ்ச்க்கு பிரம்மாண்டமா பண்ணி இருப்பார்னு பார்த்தா ராமநாராயணண் அவதார் படம் ரீமேக்கினது மாதிரி வெச்சு செஞ்சுட்டார் போல


============



12 ரஜினியை மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷாக காட்டுவதில் விற்பன்னர்கள்

1 படையப்பா கே எஸ் ரவிக்குமார்
2 தளபதி மணிரத்னம்
3 பாட்ஷா சுரேஷ் கிருஷ்ணா

=============

13 ஷங்கர் என்னதான் ரஜினியை இளமையாகக்காட்டுவதில் வெற்றி அடைந்தாலும் அவர் பிரம்மாண்ட இமேஜால் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் அமுக்கப்பட்டுவிடுகிறது

=============

14 பெஸ்ட் கமர்ஷியல் காம்போ
1 ரஜினி-KS ரவிக்குமார்
2 கமல்-மணிரத்னம்
3 அஜித்-விஷ்ணுவர்தன்
4 விஜய்-AR முருகதாஸ்

==============

15 மணிரத்னம் சர்வதேச பிரச்சனையை கையில் எடுத்து எப்படி தன் அழகியல் படமாக்கலை கோட்டை விட்டாரோ அப்படி மும்பை ரசிகர்களைக்கவர ஷங்கர் தமிழ் ரசனையைக்கோட்டை விட்டுடுவார் என தோணுது


================

16 அன்பின் வெளிப்பாடுகள் யாவும் சண்டையில் தான் பலப்படும்.எந்த வித கருத்து வேற்றுமையும் இல்லா அன்பு நாளடைவில் பலவீனப்படும்


============



17 எளிமையான அழகு என்பது எவ்வித ஒப்பனையும் இன்றி அழகாய்திகழ்வது.

வலிமையான அன்பு என்பது எவ்வித பாசாங்கும் இன்றி இயல்பாய் இருப்பது.

===============

18 நல்லவருக்கு நல்லவர்
வல்லவருக்கு வல்லவர்
என மாறிக்கொண்டே இருப்பது நம்பகத்தன்மையில் வராது.
கெட்டவருக்கும் நல்லவராக இருக்க முயல்வதே சிறப்பு

===============

19 பெரும்பாலான ஆண்களின் பெரும்பான்மையான நேரம் பெண்களைக்கவர்வது எப்படி?என்பதன் சிந்தனையிலேயே செலவாகி விடுகிறது


=================


20 என் மனதைப்படிக்கும் முயற்சி வேண்டாம்.என் ரகசியம் என்னோடு.உன்ரகசியம் உன்னோடு


================


0 comments: