1 டாக்டர்.சொட்டைத்தலைல முள்ளங்கிச்சாறு தேய்ச்சு பின் தலைக்குக்குளிச்சா முடி முளைக்கும்னீங்க?முளைக்கல ?
யோவ்.ஒரு மாசம் ஆகும்
==============
2 குருவே!
இறைவன்
இசை
இலக்கியம்
இயற்கை
இவற்றில் எதில் பற்று இருந்தால் வாழ சவுகர்யம்?
சிஷ்யா.முதல்ல வரவு க்கு வழி பார்.
================
3 பிரியத்துக்கு உரிய யாரையும் 'தேவாங்கு'ன்னு கூப்பிடலாமாமே நிஜமா?
ஆரணங்குன்னு கூப்பிடலாம்.அழகி னு அர்த்தம்.தேவா ங்கு ன்னா காபி-ன்னு அர்த்தம்
===============
4 மிஸ்! உங்க டிபி செம கலக்கலா இருந்தது
ஓ.எந்த டிபி?
காபி கலக்கறா மாதிரி இருந்துச்சே அது
=================
5 உன் காதல் சாவில் முடியுமா?எப்டி?
காதலி பேரு அல்போன்சா.சா வில் பேரு முடியுதா?
==============
6 மிஸ்! FB ல நீங்க ஷேர் பண்ணின லட்டு உங்க வீட்ல நீங்க சுட்டதா?
பாதி
புரில.பக்கத்து வீட்ல சுட்டது.அங்கிருந்து நான் சுட்டது
===============
7 சார்.ஓப்பனிங் வசூல் ல காஷ்மோரா தான் நெ 1,ஆனா நீங்க கொடி தான் தீபாவளி ரேசில் நெ 1 சொன்னீங்க?
SLOW &STEADY win the race
==============
8 உங்க வீட்டுக்கு ஐஸ்வர்யம் வரும்
ஜோசியரே !,ஐஸ்வர்யா ராய் .ஐஸ்வர்யா மேனன் ,ஐஸ்வர்யா இப்டி எதுனா வருமா?
================
9 இறந்த உடன் உங்கள் உடலை எரிக்கனுமா?புதைக்கனுமா?உங்க குல வழக்கம் என்ன?
நல்ல குல வழக்கம் உடல் தானம் செய்து உயிருடன் இருக்கும்போதே ஆவன செய்தல்
==============
10 ஆரம்பமே அட்டகாசம் தான் எங்க பட டைட்டில்
அட அஜித் ரெப்ரன்ஸ் 3,இருக்கே?
எப்டி?
1 ஆரம்பம்
2 மே (1)
3 அட்டகாசம்
==========
11 சார் தூங்கல?
எனக்கு தூக்கத்துல ட்வீட் போடற வியாதிங்க.உங்களுக்கு 1,டிஎம் பண்ணினே அது கூட அதுல சேர்த்தி மிஸ்!
=================
12 தமிழ் மிஸ் தன்யா = பீட்ரூட் க்கு சின்ன ரு வருமா? பெரிய று வருமா?
டீச்சர்.சிம்ப்பிள் லாஜிக். சின்ன பீட்ரூட் க்கு ரு ,பெரிய பீட்ரூட் று
=============
13 தலைவா... காஷ்மோரா, கொடி எது பெஸ்ட்டு...?
1 கொடி
2 காஷ்மோரா
3தலைவா
==============
14 மிஸ்.சொந்த DPவெச்சதும் வீட்டு வாசல் ல வந்து ஏன் எட்டிப்பார்க்கறீங்க?
க்யூ ல நிக்கறாங்களா?னு பார்த்தேன்
ம்க்கும்.நினப்புதான்
================
15 டாக்டர்.கண்ணுக்குக்கீழே கரு வளையம் வந்திருக்கு
மிட் நைட்.வரை ஆன் லைன் ல வளைய வர்றீங்க.தூக்கம் கெட்டா அப்டித்தான் மிஸ்
==================
16 குருவே! கேதார கவுரி விரதம் இருந்தா எனக்கு சுபிட்சம் கிடைக்குமா?
அதெப்டி? கவுரி விரதம் இருந்தா கவுரிக்குத்தானே அதுக்கான பலாபலன் கிட்டும்?
==================
17 நான் FB ல இன் பாக்ஸ் பார்க்க மாட்டேன்.அதில் வாழ்த்துச்சொன்ன 56 பேருக்கும் நன்றி.
மேடம்.56 ன்னு எப்டி எண்ணுனீங்க?ன்னு எண்ணிப்பாருங்க
=================
18 கொடி நாள் கொண்டாடுவது யார்?
தனுஷ் ரசிகர்கள் டீச்சர்
===========
19 பட்டு க்கு பேர் போன ஊர் எது? காஞ்சிபுரமா?ஆரணியா?
பட்டுக்கோட்டை டீச்சர்
============
20 சார்.பர்மா வில் பெண்கள் கூந்தலை தரையில் விரித்துவரவேற்பு கொடுத்தப்போ அதுல நடக்க மறுத்துட்டீங்களாமே?
யா.சவுரியோனு டவுட்
================
0 comments:
Post a Comment