Wednesday, November 16, 2016

ஒரு ஊர்ல ஒரு 100கோடி ஹீரோ இருந்தாரு

எம் ஜி ஆர் நடிச்ச நல்ல நேரம் டிவிடியை உங்க ஹேண்ட் பேக் ல எப்பவும் வெச்சிருக்கீங்களே ஏன் மேடம்?


நல்ல நேரம் நம்ம பக்கம் எப்பவும் னு சொல்லிக்க


===============

2 லிப்ட் என்பதன் தமிழ்ச்சொல் இயங்கேணி


ஓஹோ.அப்போ லிப்ட் ரிப்பேர்னா இயங்கா ஏணி?


===============
3 டியர்.நான் சிரிச்சா நீங்க சிரிக்கறதில்ல.என் புன்னகையை சேமிக்கறீங்களோ?


ஹூம்.என் சம்பளத்தையே சேமிக்க முடியல



==============

4 காஷ்மோரா ட்ரெய்லர்ல தளபதி ரெப்ரன்ஸ் இருக்கா?எப்டி?


தலைவா ல இடது கையை தொண்டர்களைப்பார்த்து அசைப்பது போல் இதிலும் ஒரு சீன் வருதே


==============

5 மேடம்.இப்பவெல்லாம் ஜிலேபிக்கொண்டை போடறதில்லையே ஏன்?


சுகர் வந்ததால ஸ்வீட்ஸ் அவாய்டிங்



==============

6 மிஸ்!ஐ லவ் யூ.


சாரி.யூ ஆர் இன் வெய்ட்டிங் லிஸ்ட்
அய்யோ அப்போ ஓக்கே சொன்னாக்கூட சைடு லோயர் பர்த் தான் கிடைக்குமா?



=============
7 டியர்.உங்க கிட்டே இருந்தா ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்குது

வாட்ச்மேன் / ''செக்யூரிட்டி னு தெரிஞ்சிடுச்சா?

==============


8 சார்.இலக்கியவாதிகள் யாரையாவது திட்டிட்டே இருக்காங்களே அது ஏன்?

வெட்டியா இருந்தா அப்டித்தான்.வேலை வெட்டிக்குப்போறவனுக்கு 1008 கவலை

==============

9 டியர்.எதுக்காக காலங்காத்தால சோடா,கலர் வகையறா வாங்கிட்டு வந்திருக்கீங்க?
ஒயிட்ரோஸ் வாங்கிட்டு வான்னியே?

================
10 DR, கண்ணாடி போட்டா புத்திசாலி லுக் வருமா? இல்லாட்டி பேக்கு லுக்கு வருமா?
ஆணுக்கு புத்திசாலி லுக் ,பெண்ணுக்கு லைலா,ஜெனிலியா லுக்


==============

11 டாக்டர்.என் சம்சாரம் வாயைத்திறந்தாலே சண்டை தான் வருது.
ஆச்சரியமா இருக்கே?பொதுவா கொட்டாவிதானே வரும்?


================

12 டியர்.எனக்கு கேட்டரிங் கத்து தர்றேன்னியே?
அது இருக்கட்டும்.நான் கேட்ட ரிங் என்னாச்?


===============

13 டாடி.எதுனா புதுக்கதை சொல்லுங்க.
ஒரு ஊர்ல ஒரு 100கோடி ஹீரோ இருந்தாரு
அய்யய்யோ.இந்தக்கதை வேணாம்.நம்பற மாதிரி வேற

=============

14 டியர். உன்னைப் பற்றி
எழுதுகையில்
விஸ்வரூபம் எடுக்கின்றன.
என் கவிதைகள்
அதைத்தான் கமல் 2 பாகமா எடுத்துட்டாரே?நீங்களும் ஏன்?வேற எதுனா எடுங்க, எடுத்து விடுங்க

===================

15 டியர்.நான் கோபமா இருக்கும்போது சாப்பிட மாட்டேன்
பிரமாதம்.அப்போ டெய்லி உன்னைக்கோபப்படுத்திட்டே இருந்தா3 வேளை சோறு மிச்சம்

==============

16 நீங்க பெண்ணா பிறந்திருந்தா வேலைக்கு போயிருப்பீங்களா?
ம்ஹூம்.எதுனா இளிச்சவாய் தொழில் அதிபரை லவ் பண்றேன்னு மொட்டை அடிச்சிருப்பேன்

================

17 டியர்.நான் கிளி மாதிரி இருக்கேனா?மயில் மாதிரி இருக்கேனா?
உன்னைப்பார்த்தா பறவை ஜாதி போல இல்ல.பறக்காவெட்டி ஜாதி போல தெரிது

==============

18 நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்னா அப்பவே அக்கவுண்ட் டீ ஆக்டிவேட்
ஓஹோ.எப்பவே?
ஆங்.ஆனா முடிவு எடுக்க மாட்டேன்

==============

19 ஜட்ஜ் =தனி நபருக்கு வதந்தி பரப்ப உரிமை இல்லை
ஓஹோ.அப்போ கூட்டமா சேர்ந்து வதந்தி பரப்பலாமா யுவர் ஆனர்?


============

20 டியர். ஒரு தீபாவளிக்கு டிரஸ் எடுக்காம ஆகிட்டுன்னா 7 தீபாவளிக்கு எடுக்க முடியாதாம்
ஆனா டிரஸ் எடுத்தா ஏழரை ஆகிடுமே?மொட்டை அடிச்சிடுவியே?


=================

0 comments: