
ஹீரோ பள்ளிக்கூடம் போகும்போதே ஒரு ஃபிகரை ரூட் விடறாரு.அப்போ அவரோட அப்பா எல்லா அப்பாக்களையும் போல இவரைக்கேவலமாப்பேச ரோசப்பட்டு பணம் சம்பாதிக்க ஊரை விட்டுப்போய்டறார்.
பணம் சம்பாதிச்சு ஊர் திரும்பி ஃபிகரைப்பார்க்கப்போறப்போ ஃபிகருக்கு வேற ஆள் கூட மேரேஜ் ஃபிக்சானதைப்பார்த்து வெக்சாகி சரக்கு அடிக்க ஆரம்பிச்சிடறாரு
இப்போ ஹீரோ லைஃபில் இன்னொரு ஃபிகர் குறுக்கே வருது. ஆனா அந்
த ஃபிகர் ஆகாட்டி சந்தை ஃபிகர் எனும் வாழ்க்கைத்தத்துவப்படி ஹீரோ அந்த ஃபிகரை கரெக்ட் பண்ண ட்ரை பண்றப்போ தான் அது ஒரு குண்டைத்தூக்கிப்போடுது.
ஆல்ரெடி ஒரு வீணாப்போனவனை லவ்வறேன்-குது
ஹீரோ சாஜகான் பட விஜய் போல் தியாகி ஆகி அவங்களை சேர்த்து வைக்க உதவறாரு
2 லவ்வும் அழகிரி பிளான் போல புட்டுக்கிட்டதால ஹீரோ சரக்கு சங்கரலிங்கமா மாறி ஃபிளாட் ஆகி கிடக்காரு
அப்போதான் கதைல ஒரு ட்விஸ்ட், அவர் வாழ்க்கைல கிராசான அந்த 2 ஃபிகர்களும் மீண்டும் இவர் லைஃபில் கிராசாகறாங்க. என்ன ஆச்சு ?என்பதே மிச்ச மீதிக்கதை
2648.jpg)
மம்முட்டி தான் ஹீரோ.கபாலி ரஜினி மாதிரி வயசுக்கு ஏற்ற ரோல் பண்ணாம இன்னும் துல்கர் சல்மானா தன்னை எண்ணி லவ் , ரொமான்சுன்னு அலைவது ஏனோ?இவருக்கு எல்லாம் சிபிஐ டைரி குறிப்பு , ஒரு வடக்கன் வீர கதா ரேஞ்ச் கதை தான் டாப். குடிகாரனாக வரும் காட்சிகளில் வசனகர்த்தா உதவி உடன் கை தட்டல் வாங்கறார்
முதல் ஹீரோயின் ஆண்ட்ரியா. எப்டி இருந்த ஃபிகர் எப்டி ஆகிடுச்சு என அனுதாபப்படும் அளவு வற்றிப்போய் கிடக்கிறது அவரது கன்னம். அய்யோ பாவம்,இவரைப்பார்த்தா அனுதாபம் தான் வரும் எப்டி காதல் வரும்?
2 வது ஹீரோயின் மம்தா மோகன் தாஸ். துறுதுறுப்பான ஆக்டிங்.
வித்யாசாகர் இசை சுமார் ரகம் தான்
சுமாரான படத்துக்கு சுமாரான இசையே போதும்னு எண்ணி இருப்பார் போல

நச் டயலாக்
1 குடிச்சுட்டு கோயிலுக்குப்போகக்கூடாதுன்னு சொன்னாங்க.அப்ப இருந்து விட்டுட்டேன்
குடியையா ?
2 எல்லாக்காதல் கதைகள்லயும் காதலியைப்பார்த்ததும் காதலன் பிளாட் ஆகிடறான்.அது எப்டி? #THOPPIL JOPAN (MALAIYALAM)
3 சினிமாஸ்லயும் ,வாழ்க்கைலயும் சில க்ளிஷேக்கள் உண்டு.கைல காசில்லைன்னா நம்ம காதல் நிராகரிக்கப்படும் #THOPPILJOPAN (MALAIYALAM)
4 டெய்லி என் புருசன் சரக்கடிச்ட்டு நைட்.11 க்குத்தான்வீட்டுக்குவர்றார்.வந்ததும் தூங்கிடறார்.
ஓ.அப்போ ஏது இத்தனை குழந்தைக? #THOPPIL JOPAN(M)
6 நீங்க குடிப்பீங்களா?
நேரம் கிடைக்கும்போது மட்டும்
ஓ
9 கேப்டன் சார்.மிலிட்ரி சரக்கு கொண்டு வந்தா பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தருவீங்களா?
எந்த நாய்க்கும் தர மாட்டேன் #THOPPILJOPAN(M)
11 காதலிச்ச பொண்ணு டாட்டா காட்டிட்டுப்போய்ட்டா வேற பொண்ணு கிடைக்கும். ஆனா குடிச்சு உடம்பை கெடுத்துக்கிட்டா ஆரோக்யம் அரோகரா #THOPPIL JOPAN(M)
12 மிஸ்! உங்க பாட்டும் ,டான்சும் பிரமாதம்.எங்கே கத்துக்கிட்டீங்க?
ம்.தபால் மூலமா #THOPPIL JOPAN (m)
13 காதலிக்கனும்னு முடிவு பண்ணிட்டா தைரியமுள்ளவனா பார்த்து தேர்ந்தெடுத்துக்காதலிக்கனும் #THOPPIL JOPAN(M)
14 தன்னிடம் பேச வரும் ஆணின் அணுகுமுறை , அவன் பாடி லேங்குவேஜ் ரெண்டையும் வெச்சு அவன் தன்னைலவ்வறானா?ன்னு பொண்ணு ஈசியா கண்டுபிடிச்சுடுவா#T J (m)
15 இங்க் பேனா வில் எதுக்கு சரக்கு ஊத்திவைக்கறே?
ஒரு அத்த அவசரத்துக்கு யூஸ் ஆகுமில்ல? #THOPPIL JOPAN (m)
16 சரக்கு அடிக்கறவன் சாதா தண்ணி குடிக்கும்போது கூட சியர்ஸ் சொல்வான்.நோட் பண்ணிப்பாரு #THOPPIL JOPAN (m)
18 சந்தோஷம் வந்தாலும் ,சங்கடம் வந்தாலும் அதைக்கொண்டாட/எதிர்கொள்ள சரக்கு அடிப்போம்.இதுதான் குடிகாரர்கள் ஸ்பெஷாலிட்டி #THOPPIL jopan (m)
20 காதலியை மறக்க சரக்கு அடிச்சேன்.சரக்கை மறக்க இன்னொரு காதலி.நம்ம வாழ்க்கை இப்டியே போய்டும் போல #THOPPIL JOPAN (m)
.jpg)
.jpg)
சி.பி கமெண்ட் -THOPPIL JOPAN (MALAIYALAM) - முன் பாதி ஷாஜகான் ,பின் பாதி திரைக்கதை போயே போச் இட்ஸ் கான்.மம்முட்டிக்குசறுக்கல் படம்.ரேட்டிங்=2.5 / 5
0 comments:
Post a Comment