Monday, October 03, 2016

மண்ணை சாதிக்

Image result for nayanatara moviesமேடம்.கர்நாடகாவுக்கு உங்க எதிர்ப்பை எப்டி காட்டுவீங்க?

கர்நாடிக் ம்யூசிக் கேட்கலை.மைசூர்பாக் சாப்பிடலை.பெங்களூர்டேஸ் படம் பார்க்கலை.எப்பூடி?


===========

2 டாக்டர்.பிளாஸ்டிக் அரிசி நல்லதா?கெட்டதா?


பிளாஸ்டிக் ,அரிசி 2,ம் கெடுதல்தான்.பிளாஸ்டிக் அரிசி மட்டும் நன்மையா செஞ்சுடப்போகுது?



=============

3 டியர்.ஓணம் பண்டிகையை எப்டி கொண்டாடுவாங்க?


கமல் பாட்டு கேட்டதில்ல?சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் திருஓணம்



===========

4 இன்று் அரிசி களையும்போது 15 மேல் பிளாஸ்டிக் அரிசிகள் மிதந்தன.


மேடம்.நீங்க அரிசி களைஞ்சதே அதிர்ச்சி தரும் செய்திதான்



=============

5 சார்.எப்பவும் நீங்கதான் சமைக்கறீங்க,வேலைக்காரி லீவா?


யா.லாங் லீவ்



============


6 டியர்.அரிசி மூட்டைக்குள் கை விட்டு விளையாடிட்டு இருக்கியே ஏன்?


FB ல "நான் அரிசி களைஞ்சேன்" னு ஸ்டேட்டஸ் போடலாமில்ல?


===============

7 மிஸ்! டேட்டிங் போலாமா?


சாரி.ஒரே இரி"டேட்டிங்"கா இருக்கு



=============

8 உலகம் நவீன மயமாகிடுச்சு இல்ல?


ட்விட்டர் அடிக்ட் =,ம்ம் நவீணா மயம் ஆகிடுச்சு



=============

9 டாடி.நான் சாதிக்க விரும்பறேன்


மண்ணை சாதிக்க மட்டும் விரும்பிடாதம்மா.கோமாளினி ஆகிடுவே
அய்யோ டாடி.வாழ்வில் சாதிக்கனும்



============

10 மேடம் உங்க அகராதில உங்க வாழ்வின் அழகான நாட்கள் னா இன்னா?


நான் மேக்கப் போட்டுட்டு கிளம்புன எல்லா நாளும் அழகான நாட்களே



=============

11 ஜோசியரே.இதான் என் சம்சார ஜாதகம்.


ஓ.சனி பகவான் உங்க மனைவியை க்ரோதமா பார்க்கறார்
அடடா.அப்போ நான் சனிபகவான் சம்சாரத்தை எப்டி பார்க்கனும்?



===========

12 என் தமிழ் ல ஒரு பிழை இருக்கு.மன்னிக்கவும்


ஓ.நீங்க பேசுனது தமிழா? புரியலை.மன்னிக்கவும் ட்விட்


===========

13 ஜெ ,கலைஞர் இருவருக்கும் பிடிக்காத மலையாளப்படம் எது?


வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்


================

14 டாக்டர்

வாரா வாரம் மருதாணி இலையை அரைச்சு தலைல தடவுனா முடி உதிர்வது நிக்குமா?
யா.ஆனா மருதாணி ச்செடி சொட்டை ஆகிடும்


============


15 என் காதலை எழுத்துக்களில் வடித்து விட்டேன்.


ஏம்மா.வீட்ல சோறு வடிச்சாச்சா?



==============


16 எல்லாம் நன்மைக்கே...

நல்லதே நடக்கும்...
ஏன்?நல்லது ஜாகிங் ரன்னிங் எல்லாம் போகாதா?ஒன்லி வாக்கிங்?


=============

17 மோகன் லால் நடித்த ஒப்பம் மலையாளப்படம் ் ரீமேக்கில் கமல் நடித்தால் டைட்டில்


ராஜ பார்வை 2



==============

18 விதி மழையானால் பிரார்த்தனை குடையாகும்...!"


மிஸ்.அப்போ ஸ்கூட்டி ரிப்பேர் ஆனா ஹெல்மெட் பாரமாகுமா?எதுனா சொல்லனும்னு அடிச்சு விடறது



===============

19 டியர்.பார்க் போலாமா?


இன்னைக்கு பந்த்.யாருமே இருக்க மாட்டாங்க
அதனாலதான் போலாம்னேன்



==============

20 தனுசு ராசி இல்லாத மாப்ளை ஜாதகம் தான் வேணுமா?ஏன்?


ஆல்ரெடி வீட்ல மேரேஜ் ஆன பொண்ணுங்க இருக்காங்க.அதான்


=============

0 comments: