1 பைரவா விமர்சனம் எப்டி வரும்?
பைரவா படம் நல்லாருந்தா ரிவ்யூ =குட் பைரவா
நல்லா இல்லைன்னா குட்பை ரவா
===========
2 என்ன சார்?பேண்ட்.சர்ட் டக் இன் பண்ணி இருக்கீங்க,ஷேர் ஆட்டோல வர்றீங்க?
கோட் சூட் போட்டவரே ரிக்சா ல வர்றாரு.எனக்கென்ன? #சிம்ப்ளிசிட்டி
============
3 சார்.உங்க ஜோக்ஸ் சிரிக்கற மாதிரி இல்லையே?
மிஸ்.அட்ரஸ் சொன்னா நேர்ல வந்து கிச்சு கிச்சு பண்ணி விட்டுட்டே ஜோக் சொல்றேன்
===========
4 நடிகை அஞ்சலி பக்கத்தில் க்யூட் புஷ்பா
நின்னா போட்டோவுக்கு கேப்சன்
புஷ்பாஞ்சலி
============
5 தனுஷ் ஒரு தீர்க்கதரிசி.மாரியப்பன் கோல்டு மெடல் வாங்குவார் என்பதை முன்பே அறிந்துதான் தன் படத்துக்கு மாரி என டைட்டில் வைத்தார்
============
6 பசங்க அவங்க பயோ ல டெக்னிக்கல் டெர்ம்ஸ் வெச்சா நான் கடுப்பாகிடுவேன்
மிஸ். விக் வெச்சா சிரிப்பாகிடுவீங்களா?
=============
7 MARRY GOLD பிஸ்கெட் கம்பெனி க்கு ஒரு ஐடியா.மாரியப்பன் கோல்டு மெடல் வாங்குன போட்டோவை வெச்சு லோகோ ரெடி பண்ணா மேட்சுக்கு மேட்ச்
==============
8 எங்கிருந்தோ வந்தாள் படத்துல அரை லூசா வர்ற ஹீரோ சிவாஜி ஹீரோயினை ரேப் பண்ணிடறாரு.இது எல்லாம் எப்டி தெரிஞ்சுக்கிட்டாரோ?#ராஜ் டிஜிட்டல் +
===============
9 தேயிலை அவளைப்பார்த்தது = டீச்சர் # சபாஷ் துபாஷ்
என்ன உளர்றே?
TEA C HER = teacher
================
10 இலக்கணப்பிழை களையப்பட்ட ஒரு இலக்கிய மொக்கை
தேயிலை அவளைப்பார்க்கிறது = TEA C HER = TEACHER = டீச்சர்
==============
11 கலவரம் நடக்க்கிறது.கட்டுப்படுத்த முடியலை.எனவே தண்ணீர் தர முடியாது என கர்நாடகா கோர்ட்டில் வாதாட சட்டத்தில் இடம் இல்லை
=============
12 மீனம்மா கயல் கண்தானம் செஞ்சா இந்த உலகம் அவர் மீன் தானம் செஞ்சதாதான் சொல்லும்
==============
13 எப்போதும் எந்த சூழ்நிலையிலும் சொந்த நாட்டில் சொந்த மாநிலத்தில் சொந்த ஊரில் வாழ்வதே பாதுகாப்பு.ஆனால் பல காரணங்களுக்காக இடம் பெயர நேர்கிறது
===============
14 காவேரி பிரச்னை -சட்டப்படி கோர்ட் சொல்வதை ஏற்கனும்.அரசியலுக்காகவும் ஓட்டுக்காகவும் கலவரத்தை தூண்டிவிடும் நாகராஜ சோழன்களை கைது செய்ய வேண்டும்
==============
15 மீன ராசி நண்பர்களே! இன்று பிரமாதமான நாள் .தொட்டது துலங்கும்.பதவி உயர்வு வரும்.வாராக்கடன் வரும்.புதிய வியாபார ஒப்பந்தம் வரும்
============
16 மீன் ராசிக்காரருக்கு இன்று ராசியான நிறம் நீலம்.ப்ளூ பேன்ட் ப்ளூ சர்ட் போட்டுட்டு BF பார்க்காம வேலையைப்பார்க்கவும்
==============
17 நான் கேரளாவில்தான் இருக்கேன்.இருமுகன் இங்கே எடுபடலை.ஆனா கேரளாவில் பிளாக் பஸ்டர்னு போடறாங்க.எப்டி?
===========
18 விழுப்புரம் = VIZHUPPURAM தானே?ஏன் VILLUPPURAM (வில்லு"ப்புரம்) னு எழுதறாக?விஜய் ரெப்ரன்ஸ்?
================
19 ஒரு சினிமாவுல சீன் நல்லாலைன்னா கர்நாடகத்தனமா இருக்குனு சொல்வோம்.இனி கலவரத்துக்கும் அப்டி சொல்லிக்கலாம்
============
20 சாதகமோ பாதகமோ தமிழரை ஆள்வது தமிழராக இருக்கனும்.தமிழரைக்காக்க இனப்பற்று உதவும்.
===============
0 comments:
Post a Comment