1 அதிமுகவினர் திமுகவுக்கும், திமுகவினர்அதிமுகவுக்கும் மாறுவது சகஜம் தான்:துரைமுருகன் # யாருக்கும் வெட்கமில்லைங்கறீங்க
===============
2 அதிமுகவினர் திமுகவுக்கும், திமுகவினர்அதிமுகவுக்கும் மாறுவது சகஜம் தான்-:துரைமுருகன் # மாரி மொள்ள மாரி ஆனா என்ன? கேப்ப மாரி ஆனா என்ன? 2ம் 1 தானே?
=============
3 3 தி.மு.க.,வை அழிப்பதற்கு
கருணாநிதி மட்டுமே போதும்-கருப்பசாமி பாண்டியன்:-- # அப்போ அழகிரி, ஆ.ராசா, கனிமொழி களுக்கு வேலை இருக்காதா?
================
4 2010ல், 23, 508 குற்ற வழக்குகள் . 2015ல் குற்ற வழக்குகள் எண்ணிக்கை, 19, 931 ஆகக் குறைந்துள்ளன.-OPS # பொறுங்க,மீதி 3577 பேரும் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகட்டும்
=================
5 கபாலி புகழ் பா இரஞ்சித் இயக்கத்தில் விஜய் # அஜித் ரசிகர்கள் = மகிழ்ச்சி
===============
6 திமுக ,அதிமுக . இரு கட்சிகளும், 'திராவிட போக்கு
வரத்து கழகம்' போல் செயல்படுகின்றன. -துரை முருகன் # அப்பப்ப எக்சேஞ்ச் விபத்து நடந்துட்டேதான் இருக்கும்கறீங்க?
====================
7 ஆதார் இல்லாதோருக்கு நலத் திட்ட உதவிகள் மறுக்கப்பட மாட்டாது:வெங்கய்ய நாயுடு # ஆனா ரேஷன் கடைல அத்யாவசியப்பொருட்கள் மட்டும் தர மாட்டீங்க
==========================
8 உற்பத்தி செய்த பருப்பை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் விவசாயிகள், அதை, 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர்.-ராகுல் # தேவைக்கானதை வெச்சுக்கிட்டு மீதியை மட்டும் விற்கலாமே?
===================
9 வெளி
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பீஹாரில் வேலைவாய்ப்பு,உள்ளூர்வாசிகள் பாதிப்பு.-லாலு பிரசாத் யாதவ் #எப்பவும், எங்கேயும் உள்ளூர்வாசிக்கு மதிப்பு கம்மி
===================
====================
11 திருச்சி சிவா கன்னத்தில் ஒங்கி அறைந்தேன்-சசிகலா புஷ்பா
இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்-திருச்சி சிவா # கொடுத்துக்கொடுத்து சிவந்த கரமும், வாங்கி வாங்கி பழுத்த கன்னமும்
================
12 அரைமணி நேரத்தில் 3 இடங்களில் சங்கிலி பறிப்பு : சிசிடிவி கேமராவில் பதிவு #போலீசை விட திருடன் தான் சுறுசுறுப்பா ட்யூட்டி பார்க்கறான்
================
13 தி.மு.க எம்.பி திருச்சி சிவா கன்னத்தில் ஓங்கி நான்கு முறை அறைந்தேன்- அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா # ரொம்ப பொறுமைசாலி போல அண்ணன் சிவா
================
14 வாழ்நாள் முழுவதும் ஊழலுக்கு எதிராக நிற்பேன்-கருணாநிதி. # எப்பவும் கண்ணாடியைப்பார்த்துட்டே இருப்பார் போல
================
15
அரசியல் ரீதியாக விமர்சித்தால் பொது இடத்தில் தாக்குவதா?- சசிகலா புஷ்பாவுக்கு திருச்சி சிவா கண்டனம்# இதை பெருசு பண்ணாதீங்கன்னு ஒருத்தர் சொன்னாரே?
=============
16
ரிலையன்ஸ் உதவியுடன் புதுவையில் இலவச வைஃபை வசதி: - நாராயணசாமி # ரி"LIE"யன்ஸ் ஆகாம இருந்தா சரி
================
17
மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 9 பேர் பலி # எப்பவும் மாடிவீட்டை விட ஓட்டு வீடே பாதுகாப்பானது
=================
18
- நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு # அமலா பால் க்கும் நேரம் சரி இல்லை, தனியார் பால் வாங்கறவங்களுக்கும் நேரம் சரி இல்லை
======================
19
- சசிகலா புஷ்பாவை நான் அடிக்கவில்லை: திருச்சி சிவா பேட்டி # பாட்ஷா வை எப்படிங்க மனோபாலா அடிக்க முடியும்?
===================
20
0 comments:
Post a Comment