Monday, September 12, 2016

உன்னைப்பற்றிய ரகசியம்

தமிழ் சினிமாவில் விளம்பர வித்தகர்கள்
1 ஆபாவாணன்
2,கலைப்புலி S.தாணு
3 ஷங்கர்
5,ஏவிஎம்
4 டி ராஜேந்தர்
6 கே டி குஞ்சுமோகன்

=====================


2 ரஜினி ,கமல்,அஜித்,விஜய் படங்கள் FDFS காண்ட்ராக்ட் பிஸ்னெஸ் ல செம சம்பாதிப்பு கிடைக்கும் போல.எதிர் காலத்தில் ஏஜென்சி இதுக்குன்னு உருவாகும்

==============

3 FDFS டிக்கெட் 1000 ரூபா கொடுத்துப்பார்ப்பது வீட்டுக்கு ,நாட்டுக்கு ,நம் சிக்கன வாழ்வுக்கு கேடு தரும்


=============

4 ரஜினி யின் சில பிளாப்கள்
1,பாபா 2 நாட்டுக்கு ஒரு நல்லவன் 3,சிவா 4, குசேலன் (கெஸ்ட்.ரோல்) 5 வள்ளி ( கெஸ்ட் ரோல்) 6 அதிசயப்பிறவி

===============

5 ரஜினி பட ரிசல்ட்டை ரஜினி ,கமல் ரசிகர்களை விட இன்னொரு தரப்பு தான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கு


=============

6 பொருளின் தரம் உறுதி செய்யாமல் வாங்குவதற்கு ஒப்பானது ஒரு பட ரிசல்ட் தெரியாமல் அதிக ரேட் கொடுத்து படம் பார்ப்பது


==============

7 லிங்கா வுக்கு மார்க்கெட்டிங் பத்தலை.ஓப்பனிங் பெரிய அளவில் இல்லை.கபாலி க்கு ஓவர் மார்க்கெட்டிங்.இது எதிர் மறை விளைவை ஏற்படுத்தவும் வாய்ப்பு


=================

8 ஒரு ஏழைக்குடும்பத்துக்கு உண்டான அரிசி செலவு ஒரு மாசத்துக்கு ஒரு சிப்பம் (25 கிலோ) விலை 1000 ரூ = ஒரு சினிமா FDFS டிக்கெட்

=======================


9 தியேட்டர் அதிபர்களுக்கு .ஓவர் பில்டப் பாத்து 5 வட்டிக்க்கு கடன் வாங்கி படத்தை வாங்கி பின் நட்ட ஈடு கொடு ன்னு வாசல் பக்கம் வந்துடாதீங்க


==============

10 கலைப்புலிSதாணுவின் மிகைப்படுத்தப்பட்ட பொய்யான ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய மார்க்கெட்டிங் டெக்னிக் ஜெயித்துவிடக்கூடாது என விரும்புகிறேன்

================

11 ஒரு தரமான திரைக்கதை லோ பட்ஜெட்டில் தயாராகி சத்தம் இல்லாமல் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனால் அதைக்கண்டு சந்தோசப்படும் முதல் மனிதன் நான்தான்


==============

12 ஒரு பொருளின் தரத்தை உறுதி செய்யாமலேயே அதன் நிஜ.விலையைவிட 10 மடங்கு அதிக விலை தரத்தயார் ஆகாதீர்

===============

13 நீங்கள் வசதி படைத்தவராக இருந்த போதும் ,நண்பர் தான் செலவு செய்கிறார் என்றாலும் ஒரு 3 மணி நேர சினிமாவுக்கு 1000 ரூ தர ஒத்துக்கொள்ளாதீர்.


===============

14 ஒரு நடிகரின் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இழக்காதீர்.மோசமான முன்னுதாரணம் ஆகி விடாதீர்


==============

15 அடக்கம் அமரருள் உய்க்கும்.அதீத எதிர்பார்ப்பு ,வெட்டி விளம்பரம் ஆரிருள் உய்த்து விடும்


===============

16 ஏழைகளுக்காக குரல் கொடுப்பதா் சொல்லும்் எந்த நடிகரும் தன் பட டிக்கெட் ரேட்டை ஏழைகளுக்கு பாதி விலையிலோ கவுன்ட்டர் ரேட்டிலோ தரமுயல்வதில்லை


============

17 உன் மேல் அதிகாரியை விட உனக்கு அதிக இன்சென்ட்டிவ் எப்போதாவது கிடைத்தால் உன் பதவிக்கு ஆபத்து


================

18 உன்னைப்பற்றிய ரகசியம்
உன் வெற்றியின் ரகசியம் உனக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வரை தான் தடை இல்லா முன்னேற்றம் கிடைக்கும்

============

19 வண்டிக்கு பெட்ரோல் காலை 6 டூ 7 அடிப்ப்து நல்லது.மனிதனுக்கான சரக்கு காலை மாலை இரவு எப்போது அடித்தாலும் கெட்டது


===============

20 ஒரே கம்பெனியில் 20 வருடங்கள் பணி புரிபவரின் முன்னேற்றத்தை விட வெவ்வேறு கம்பெனிகளில் 20 முறை ஸ்கிப் ஆனவர் முன்னேற்றம் அபரிதமாய் இருக்கும்

===============

0 comments: