1 இந்தியர்கள் யாரும் துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டாம்: சுஸ்மா சுவராஜ் # வீட்டை விட்டே வெளில போகவேண்டாம்னு சொல்லலை நல்ல வேளை
=============
2 மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து பணியாற்றினால்தான் நாடு முன்னேறும்: மோடி # கூடி வாழ்ந்தால் 570 கோடி நன்மை னு சொல்றாரு
================
3 சுவாதி கொலை வழக்கு-
சுவாதி ரம்ஜான் நோன்பு இருந்தவர், முஸ்லிமாக மாற முடிவு - திருமா" # கழுகு ,நக்கீரன் வேலை எல்லாம் பார்ப்பார் போல்
===============
4 தில்லி முதல்வர்கள் மாநாட்டில் ஜெ பங்கேற்கவில்லை: -ராம்தாஸ் # பத்தோட 11 ஆக இருக்க மாட்டார்.அதான் தனியாப்போய் 570 சேப்டி பண்ணிட்டாரே?
===========
5 100 குற்றவாளிகள் தப்பித்தாலும்,ஒரு நிரபராதி
தண்டிக்கப்பட கூடாது-கருணாநிதி# குற்றவாளிகள் தப்பிச்சா குற்றம் பெருகுமே தலைவா.பரவால்லியா?
================
6 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அரசியல் அநாதைகள் ஆகிவிட்டனர்- ஸ்டாலின் # அழகிரிக்கு போன் போட்டு சொல்லவேண்டியதை மீடியா கிட்டே ஏன் சொல்றாரு?
==============
7 குஷ்பு வந்ததால் மக்கள் காங்கிரசை திரும்பிபார்க்க ஆரம்பித்துள்ளார்கள் -EVKS # இப்டி கட்சியை மட்டம் தட்டுனதாலதான் பதவி போச்சு போல
==============
8 எஸ்.ஜே.சூர்யாவுடன் 'ரொமான்ஸ்' பண்ணப்போகும் நதியா # நதியா நதியா நைல் நதியா ,சேர்த்து.வெச்ச மரியாதை ஆகப்போகுது நாஸ்தியா
==============
9 ஆபீஸில் பாலியல் தொல்லை.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சம்பளத்துடன் 90 நாள் விடுமுறை! # இதை சாக்கா.வெச்சு ஆளாளுக்கு லீவ் எடுக்கப்போறாக
===============
10 குஷ்பு இருப்பதால்தான் காங்கிரஸை மக்கள் திரும்பிப் பார்க்கிறார்கள்.-EVKS.#,விட்டா காங் வரலாறு கு மு ,கு பி அப்டினு ரெண்டா பிரிப்பார் போல
=============
11 தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது: பார்த்தசாரதி # வை கோ வை இதுவரை பார்க்காத சாரதியா இருப்பாரோ?
===============
12 ஜெவை எதிர்க்க ஆண்மை தேவை -நாஞ்சில் சம்பத் #,அப்போ கலைஞரை எதிர்க்க பெண்மை தேவையா? என்னங்க லாஜிக் அது?்
===============
13 இன்றைய இளைஞர்கள்
கருணாநிதியை
ரோல்மாடலாக
ஏற்கவேண்டும்-திருமா
# ஒரு சம்சாரத்தை வெச்சுக்காப்பாத்தவே ஏகப்பட்ட செலவு ஆகுது.
============
14 இன்றைய இளைஞர்கள்
கருணாநிதியை
ரோல்மாடலாக
ஏற்கவேண்டும்-திருமா
# நாட்டைப்பற்றி கவலைப்படாம அவங்கவங்க வீட்டை பாத்துக்க்கிட்டா போதுமா?
==============
15 வைக்கோல் போரை நம்பலாம், வைகோவை நம்ப முடியாது: டி.ராஜேந்தர் # ராஜநாகத்தை நம்பலாம் ராஜேந்தரை நம்பமுடியாதுனு அவர் சொல்வாரோ?
=============
16 அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு # நம்ம ஆட்சில பாலாறும் தேனாறும் ஓடுச்சா?
==============
17 திமுக ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை- ரூ.200 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு # விழுது கிட்டேயே இவ்ளோன்னா ஆலமரத்துக்கிட்டே எவ்ளோ இருக்கும்?
================
18 புதிய சாலைகள், துறைமுகம், ரயில் பாதை, விமான நிலையங்கள் அமைக்க, ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது-நிதின் கட்கரி: # கருணா”நிதி”, ஜெயலலி”தா”-ன்னு கேட்டுப்பார்க்கலாமே?
============
19 பேஸ்புக்கில் காதல் வலைவீசி பெண் போல் பேசி மோசடி: லட்சக்கணக்கில் லவட்டிய ஆசாமி கைது# ஊருக்கு ஊர் ஒரு கிரேசி கோபால் இருப்பார் போல
================
20 ரசிகர்கள் விரும்பியே
கூடுதல் கட்டணம்
கொடுப்பதால்
கபாலி படத்திற்கு
எப்படி தடை
விதிக்க முடியும்
-நீதிபதி #அப்போ 120 ரூ நிர்ணயவிலை என்ன ஆவது?
=================
0 comments:
Post a Comment