1 படத்தோட ஹீரோ பேரு குமாரசாமி.சந்தானம் ஜட்ஜா நடிக்கறாரு
என்ன டைட்டில்?
தீர்ப்புக்கு துட்டு
=============
2 மிஸ்! எதுக்காக என்னை இளையராஜாங்கு-னு பாராட்றீங்க? நன்றி.
லூசு, தேவாங்குன்னு திட்டியும் சிரிச்ட்டே இருந்தே , அதான்.
=================
3 மாப்ளை ரொம்ப சாது டைப், சுத்த சைவம், இட்லி , இடியாப்பம் தான் சாப்பிடுவார்
இப்ப எல்லாம் கொலைகாரங்ககூட அதை சாப்பிடறாங்க, அதை வெச்சு எடை போட முடியாது
================
4 சார், பூட்டு சாவி துவாரத்துல செடி முளைச்சிருக்காமே? நம்ப முடியல
பூட்டுல பூவே இருக்கும்போது செடி இருக்காதா?
எப்டி?
“பூ”ட்டு
=================
5 இண்ட்டர்வ்யூவில்
மிஸ்டர்! உங்களுக்கு ஷார்ட் ஹேண்ட் தெரியுமா?
ஹலோ மேடம், நான் 6 அடி . ஹைட் ஹேண்ட்
========================
6 ஜட்ஜ் = மாடில இருந்து நாயை தூக்கிப்போட்ட ஆளைக்கண்டு பிடிச்ட்டீங்களா?
கவுண்டமணி = அந்த நாயைத்தானுங்க்ணா தேடிட்டிருக்கேன்
==================
7 யுவர் ஆனர், எனக்கு ஜாமீன் வேணும்,இப்போதான் மேரேஜ் ஆகி இருக்கு
அதெப்டி, கைது பண்ணும்போது பேச்சிலர்தானே?
கைது பண்ணுன கான்ஸ்டபிள் கனகாவயே லவ்மேரேஜ் பண்ணிக்கிட்டேன்
================
8 குருவே! நபிகள் நாயகத்துக்கு 3 சம்சாரமா?
சிஷ்யா! எதுக்குகேட்கறேன்னு தெரியுது. அரசியல் தலைவரை உயர்வு நவிற்சியாக சொல்லும்போது எதுனா உளர்றதுதான்
==============
9 டாக்டர்! சப்பாத்திக்கு ஆகச்சிறந்த துணை நெய்-சர்க்கரை காம்போ தான்னு சொல்றாங்களே?
அப்போ உங்களுக்கு ஆகச்சிறந்த இணை சுகரும், பிபியும் தான்
================
10 யுவர் ஆனர் , கார் ஓட்டும்போது குறைந்த அளவே மது அருந்தியிருந்தேன்!'
ஓஹோ, நான் கூட தீர்ப்பு சொல்லும்போது அதிகமா அடிச்ட்டு வந்துட்டேன், சாரி, 10 வருசம் ஜெயில்
===================
11 சார், ரம்ஜான் இன்னைக்கா? நாளைக்கா? குழப்பமா இருக்கு?
புதுப்படங்கள் எல்லாம் நாளை தான் ரிலீஸ் ஆகுது. அப்போ ரம்ஜான் நாளை தான்
==============
12 மிஸ் டாமைள் ஸேள்வை நெக்லஸ் வீட்டை காலைல இருந்து தேடறேன்.அட்ரஸ் கிடைக்கலை.
யோவ்.அது தமிழ்செல்வி நிக்கோலஸ்
=============
13 என் நாவல்களைப் படிக்க விரும்பும் வாசகர்கள் குறைந்த கட்டணத்தில் மொபைலில் என் புத்தகங்களை படிக்கலாம்.
லைப்ரரி போனா ஓசிலயே படிக்கலாமே?
==============
14 ஜோசியரே! ஜாதகத்தில் செவ்வாய் இருந்தா பாதகமா?
யா.லிப்ஸ்டிக் போடாமயே செவ் வாய் இருந்தா சாதகம்
===============
15 இன்ஸ்பெக்டர்.9929 பேர் என்னை பாலோ பண்றாங்க.எனக்கு புரொடக்சன் வேணும்.
மிஸ்! உங்களை மாதிரி ஊருக்குள்ளே கொள்ளைப்பேரு FB ல பாலோயர்ஸ் வெச்சிருக்காக
==============
16 சார்.உங்க டிபி கேவலமா இருக்கே?
உங்க டிபி சூப்பரா இருக்கே?நீங்களா?
ச்சே ச்சே அபிமான ஹீரோ வுது.
ஓஹோ.உங்க டிபி வைக்கவே தில் இல்ல.
===========
17 பட பூஜைக்கு ஹீரோ வர்லையே ஏன்?
பூஜை போட்டாலே எல்லா ஏரியாவும் விற்கற மவுசு இருக்கறவங்க பொது விழாக்களுக்கு வந்து பப்ளிசிட்டி காட்டத்தேவை இல்ல
===========
18 சார். பிரபுதேவாக்கு ம் தமன்னாக்கும் லவ் போல .நிஜமா?
பொதுவா பொண்ணுங்க செகன்ட்ஸ்களை ,போக்கிரி களை நம்பும் காலம் இது.
===========
19 ஒரே டைரக்டர் அதே ஹீரோ.ஏன் காம்போ மாறலை?
ரேஸ் ல எப்பவும் ஜெயிக்கிற குதிரைக்கு தான் வாய்ப்பு /மதிப்பு அதிகம்
============
20 சார்.இந்தப்படத்தில் ஹீரோயின் யார்?னு அறிவிக்கவே இல்லையே?
கிளாமரை ,காமெடியனை நம்பி படம் எடுக்கறவங்கதான் முதல்ல அவங்களை புக் பண்ணுவாங்க
===========
0 comments:
Post a Comment